+

Amazon நிறுவனத்தில் பணிநீக்கங்கள்: ரோபோடிக்ஸ் குழுவில் ஏற்படுத்திய தாக்கம்!

அமெரிக்காவின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் தனது ரோபோடிக்ஸ் (Robotics) பிரிவில் பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இந்த சமீபத்திய நடவடிக்கையில் குறைந்தது 100 வெள்ளை காலர் பணியாளர்கள் வேலை இழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பிரிவு முக்கியமாக கிடங்குகளில் (warehouses) ஆட்டோமே

அமெரிக்காவின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் தனது ரோபோடிக்ஸ் (Robotics) பிரிவில் பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இந்த சமீபத்திய நடவடிக்கையில் குறைந்தது 100 வெள்ளை காலர் பணியாளர்கள் வேலை இழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பிரிவு முக்கியமாக கிடங்குகளில் (warehouses) ஆட்டோமேட்டிக் சிஸ்டத்தை மேம்படுத்தும் வகையில் ரோபோக்கள் மற்றும் பொருட்களை எடுத்துச் செல்லும் இயந்திரங்களை வடிவமைக்கும் பொறுப்பில் இருந்தது. நிறுவனத்தின் செயல்திறனை உயர்த்தும் நோக்கில் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த பணிநீக்கங்கள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கிய பணிநீக்க நடவடிக்கையில் சுமார் 14,000 வெள்ளை காலர் பணியாளர்கள் வேலை இழந்தனர். அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பல கட்ட நடவடிக்கைகளின் மூலம் மொத்தமாக 30,000 நிறுவன பணியாளர்கள் வரை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது நிறுவனத்தின் வெள்ளை காலர் பணியாளர்களில் சுமார் 10% ஆகும்.

இந்நிலையில், இந்த ஆண்டு ஜனவரியில் சுமார் 16,000 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தனர். அதே நேரத்தில் நிறுவனத்தில் மேலும் பணிநீக்கங்கள் தொடரும் என்பதற்கான அறிகுறிகளும் தெரிய வந்துள்ளன.

மேலும், சமீபத்தில் அமேசான் “Blue Jay” எனப்படும் ரோபோடிக் கை திட்டத்தின் மேம்பாட்டையும் நிறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ரோபோடிக் அமைப்பு ஒரே நேரத்தில் பல பொருட்களை எடுத்து வேலை செய்யக்கூடியதாக வடிவமைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக குறுகிய இடங்களில் பணியாளர்களுக்கு உதவுவதற்காக இது உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், கடந்த ஒரு ஆண்டில், நிறுவனத்தின் சாதனங்கள் மற்றும் சேவைகள், புத்தகங்கள், பாட்காஸ்ட் மற்றும் பொதுமக்கள் தொடர்பு (PR) போன்ற பிரிவுகளிலும் குறைந்த அளவில் பணிநீக்கங்கள் செய்யப்பட்டுள்ளன.

facebook twitter