+

ரூ.175 கோடி மொத்த நிதி இலக்குடன் ‘கிராண்ட் அனிகட் சீட்’ நிதியை அறிமுகம் செய்தது Anicut Capital

மாற்று சொத்து நிர்வாக பிரிவில், கடன் மற்றும் சமபங்குகளில் பல நிதிகளை கொண்டுள்ள மாற்று சொத்து நிர்வாக நிறுவனமான அனிகட் கேபிடல் (Anicut Capital ) கிராண்ட் அனிகட் சீட் பண்ட் (GASF) அறிமுகத்தை அறிவித்துள்ளது.

மாற்று சொத்து நிர்வாக பிரிவில், கடன் மற்றும் சமபங்குகளில் பல நிதிகளை கொண்டுள்ள மாற்று சொத்து நிர்வாக நிறுவனமான 'அனிகட் கேபிடல்' (Anicut Capital) 'கிராண்ட் அனிகட் சீட் பண்ட்' (GASF) அறிமுகத்தை அறிவித்துள்ளது.

இலக்கு மொத்த நிதி ரூ.175 கோடி மற்றும் ரூ.75 கோடி கிரின்ஷு ஆப்ஷன் கொண்ட இந்த நிதி, அனிகட்டின் ஆரம்ப நிலை முதலீட்டிற்கான இரண்டாவது நிதியாகும். ஆழ் நுட்பம், நிறுவன நுட்பம், வர்த்தக நுட்பம், நுகர்வோர் மற்றும் நிதிச்சேவைகள் ஸ்டார்ட் அப்களில் இ க்கு முந்தைய மற்றும் ஏ சுற்று வரை இந்த நிதி கவனம் செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நிதி மூலம், அனிகட் 20க்கும் மேலான ஸ்டார்ட் அப்களில் ரூ.5 முதல் ரூ.8 கோடி முதலீடு செய்ய உள்ளது. முதல் கட்ட நிறைவை விரைவில் அறிவிக்க திட்டமிட்டுள்ளது.

anicut

நிறுவன முதலீட்டாளர்கள், அதிக மதிப்புள்ள முதலீட்டாளர்கள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு குடும்ப அலுவலகங்களில் கவனம் செலுத்த உள்ளது. இந்த நிதி செயல்படத்துவங்கி மூன்று ஒப்பந்தங்களை இறுதி செய்துள்ளது.

அனிகட் 2021 முதல் கிராண்ட் அனிகட் ஏஞ்சல் ஃபண்ட் மூலம் ஆரம்ப நிலை சம்பங்குகளில் முதலீடு செய்து வருகிறது. ஆழ்நுட்பம், வர்த்தக நுட்பம், நுகர்வோர் மற்றும் நிதிச்சேவைகள் பிரிவில் 68 முதலீடுகள் செய்துள்ளது.

இந்த ஸ்டார்ட் அப்’கள் ரூ.6,000 கோடி அளவிலான பிந்தைய முதலீடுகளை ஈர்த்துள்ளன. அக்னிகுல் காஸ்மோஸ், ஜிவா, கேப்கிரிட், இன்ஸ்பெக்சிட்டி, லியுமஸ், ஸ்னேப்மிண்ட், கேலக்சிஐ, இபிலேன் ஆகிய நிறுவனங்கள் குறிப்பிடத்தக்கவை.

“எங்கள் ஆரம்ப நிலை முதலீடு உத்தி, முந்தைய நிதி மூலம் நிரூபணமாகியுள்ளது. இந்த பிரிவில் எங்கள் இரண்டாவது நிதி மூலம், பிரகாசமான நிறுவனர்களின் ஆரம்ப பயணத்தை ஆதரிக்க விரும்புகிறோம்,” என்று இந்த நிதி குறித்து, அனிகட் கேபிடல் பார்ட்னர் அஜய் ஆனந்த் கூறியுள்ளார்.

Edited by Induja Raghunathan

facebook twitter