+

'குப்பை அல்ல, அது களஞ்சியம்' - நகர்புற கழிவு நிர்வாகத்தில் உதவும் காலநிலை நுட்ப ஸ்டார்ட் அப்!

பெங்களூருவைச் சேர்ந்த வேஸ்ட் ஈஸ் கோல்ட் டெக்னாலஜிஸ் சுயநிதியில் செயல்படும் நிலையில் ஏழாண்டுகளில் 300 க்கும் மேலான திட்டங்களை பெற்றுள்ளது.

ஆண்டுதோறும், மொத்தம் 2,33 கோடி டன் கழிவுகளுக்கான இருப்பிடமாக இருக்கும் 2400 குப்பை கொட்டும் இடங்கள் இந்தியாவில் உள்ளன. மலைக்க வைக்கும் இந்த புள்ளிவிவரம் சந்தீப் திவாரியை யோசிக்க வைத்தது. அவர் 2018ல் கழிவுகள் குப்பைமேடுகளை சென்றடைவதை தவிர்க்கும் நோக்கத்துடன் ’வேஸ்ட் இஸ் கோல்ட் டெக்னாலஜிஸ்’ (Waste is Gold Technologies) நிறுவனத்தை துவக்கினார்.

“மையமில்லாத கழிவு நிர்வாக சேவைகளை உலக அளவில் கொண்டு செல்ல மற்றும் உள்ளூர் சமூகங்கள் தங்கள் கழிவுகளை தாங்களே பொறுப்பாக, நீடித்த தன்மையோடு, செயல்திறன் மிக்க தன்மையோடு நிர்வகிக்க உதவும் தொழில்நுட்பங்களை உருவாக்க விரும்பினோம்,” என்று யுவர்ஸ்டோரியிடம் பேசிய வேஸ்ட் ஈஸ் கோல்டு நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் சந்தீப் திவாரி கூறினார்.

பெங்களூருவைச் சேர்ந்த இந்த காலநிலை நுட்ப ஸ்டார்ட் அப் 25 உறுப்பினர் குழுவுடன் இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகிறது. மேலும், உள்ளூர் உற்பத்தி வசதியில் சேவைகளை வடிவமைத்து உருவாக்கி வருகிறது.

Waste is Gold

கழிவுகளை மதிப்பாக மாற்றும் நுட்பம்

நிறுவனத்தின் முன்னணி சேவையாக அதன் ஆர்கானிக் வேஸ்ட் கன்வர்ட்டர் (OWC) அமைகிறது. இந்த வேகமாக செயல்படும் இயற்கை கம்போஸ்டிங் இயந்திரம் வர்த்தக மற்றும் நகராட்சி பயன்பாட்டிற்கு ஏற்றது, என நிறுவனர்கள் கூறுகின்றனர். இது பூஜ்ஜியம் வெளிப்பாட்டை கொண்டது என்றும் கூறுகின்றனர்.

“இந்த அமைப்பு எட்டு மணி நேரத்தில் இயற்கை கழிவுகளை செயலாக்கம் செய்யும் திறன் கொண்டுள்ளது. இதுவரை 383.52 மில்லியன் கிலோ கழிவுகளை குப்பை மேட்டிற்கு செல்லாமல் தடுத்துள்ளது. கணிசமான ஆற்றல் மற்றும் உழைப்பு தேவைப்படும் வழக்கமான முறைகள் போல அல்லாமல் இந்த தொழில்நுட்பம் எளிமையாக,செயல்திறனுடன் வேகமாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், தோட்டங்கள் மற்றும் பெரிய நில திட்டங்களில் பயன்படுத்தக்கூடிய ஊட்டச்சத்து மிக்க கம்போஸ்ட் உரத்தை உற்பத்தி செய்கிறது,” என்கிறார் திவாரி.

OWC அமைப்பின் நம்பகத்தன்மையை மத்திய உணவு தொழில்நுட்ப ஆய்வு கழகம் உறுதி செய்துள்ளது என்கிறார் திவாரி. நகராட்சி திட கழிவுகளை பிரிப்பதை முழுவதும் தானியங்கிமயமாக்கி, மனித தலையீட்டை குறைத்து செயல்திறனை மேம்படுத்தும் தானியங்கி கழிவி பிரிப்பு இயந்திரத்தையும் (AWSM) இந்த ஸ்டார்ட் அப் உருவாக்கி வருகிறது.

மேலும், சுத்திகரிப்புக்கு முந்தைய தன்மை கொண்ட மேம்பட்ட பயோகேஸ் உருவாக்கத்திலும் ஈடுபட்டுள்ளது. துர்நாற்றம் இல்லாமல் இயற்கை கழிவுகளை மறுசுழற்சி ஆற்றலாக மாற்றும் பயோமீத்தேனேஷன் ஆய்வு திட்டத்தின் ஒரு பகுதியாக இது அமைகிறது.

இந்த பெரிய அளவு திட்டங்கள் தவிர, இல்லங்களுக்கான கையடக்க இல்ல கம்போஸ்டரையும் உருவாக்கி வருகிறது.

“தனிநபர்கள் தங்கள் சுற்றுச்சூழல் சுவடுகளை குறைத்து, கழிவுகளை ஊட்டச்சத்து மிக்க உரமாக மாற்றி பூஜ்ஜியம் கைழ்வு வாழ்வியலுக்கு உதவி, இயற்கை கழிவில் இருந்து உணவு பயிரிடவும் வழி செய்கிறது,” என்கிறார்.

நீடித்த வளர்ச்சி வர்த்தகம்

ஏழு ஆண்டுகளில் நிறுவனம் இந்தியாவின் 300 இடங்களில் விரிவாக்கம் செய்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ஆசிய பசுபிக் பிராந்தியம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மத்திய கிழக்கு, வட அமெரிக்கா, ஐரோப்பாவில் விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளது.

நிறுவனம் தற்போது, பிரெஸ்டிஜ் குழுமம், டிஎல்.எப், லோதா, எல்&டி, ஷபூரி, கேட்டர்பில்லர், மைஹோம்ஸ் உள்ளிட்ட வாடிக்கையாளர்களுக்காக 300க்கும் மேலான நிகழ் நேர திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திட்டத்தின் அளவுக்கு ஏற்ப ரூ.3.5 லட்சம் முதல் பல கோடிகள் வரை செலவு அமைகிறது. நிறுவனம் தற்போது ரூ.100 கோடி மதிப்பிலான திட்டங்களை கையாள்வதாக, திவாரி கூறுகிறார்.

இந்தியாவின் கழிவு நிர்வாக துறை சந்தை 2035ல் 29.71 பில்லியன் டாலராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துறையில் ஏற்பட்டு வரும் மாற்றத்திற்கு திடக்கழிவு நிர்வாகம் விதிகள் 2016 உள்ளிட்ட வலுவான கொள்கை முடிவுகள் காரணம், என்கிறார் திவாரி. இந்த சட்டம், கட்டுப்பாடு விதிகளை அனைத்து நகர்புற நகராட்சிகள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், தொழில் நரகங்களுக்கு விரிவாக்கியது.

“2016 விதிகள் குப்பை உருவாகும் இடத்திலிலேயே மக்கக் கூடிய, உலர் மற்றும் தீங்கான என்று பிரிக்கப்படுவதை கட்டாயமாக்குகிறது. அதிக கலோரி கழிவுகள் (≥ 1,500 kcal/kg) குப்பை மேடுகளில் கொட்டப்படாமல் எரிசக்தி பயன்பாட்டிற்கு கையாளப்படுவதை வலியுறுத்துகிறது,” என்கிறார்.

சுகாதாரக் கழிவு பகுதிக்கான சரியான நிலத்தை கண்டறிவது உள்ளிட்ட சவால்கள் இருக்கின்றன, என்கிறார் திவாரி.

“பல நகர்புற நகராட்சி அமைப்புகள் நிதி நிலைத்தன்மை, பயனர் கட்டணம் வசூலிப்பு, குப்பைகளை பிரித்தெடுப்பது போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றன. இவை, மறுசுழற்சி மற்றும் சுத்திகரிப்பு ஆலைகள் பொருளாதார, செயல்முறை தன்மையை பாதிக்கின்றன,” என்கிறார்.

சுயநிதியில் இயங்கும் இந்த ஸ்டார்ட் அப், ரொக்க நெருக்கடியை தவிர்க்க வருவாய் வழிகளில் கவனம் செலுத்தி வருகிறது. “எங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையும், எங்கள் செயல்முறைக்கு உதவி, நிதி அளிக்கிறது, என்கிறார் திவாரி.

waste management

எதிர்காலம்

பொது- தனியார் கூட்டு முயற்சி, சமூக அளவிலான கழிவு நிர்வாக திட்டம் போன்ற திட்டங்களுக்காக திட்டம் சார்ந்த ரூ.100 முதல் ரூ.200 கோடி நிதி திரட்ட நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

“காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் மற்றும் நீடித்த எதிர்காலத்திற்கான பார்வையில் ஆர்வம் கொண்ட நன்கொடையாளர்கள் மற்றும் முதலீட்ட்டாளர்களுடன் இணைந்து செயல்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிதி எங்கள் தொழில்நுட்பப் பயன்பாடு, செயலாக்கம் மற்றும் ஆய்வு மேம்பாடு, வளர்ச்சி ஆகியவற்றுக்காக முதலீடு செய்யப்படும்,” என்கிறார்.

புனேவைச் சேர்ந்த கிரீன் பிளானட் சொல்யூஷன்ஸ் மற்றும் அரியானாவின் கெல்வி வாட்டர் டெக்னாலஜிஸ் உள்ளிட்டவற்றுடன் போட்டியிடும் நிலையில், வேஸ்ட் ஈஸ் கோல்ட் நேரடி போட்டி இல்லாமல் தனித்து விளங்குவதாக திவாரி, கூறுகிறார்.

“செயல்திறன் மிக்கதாகவும், சுற்றுச்சூழல் நட்பானதாகவும் விளங்கும் பூஜ்ஜியம் வெளிப்பாடு கொண்ட அதிவேகமான எரிசக்தை ஆற்றல் கொண்ட இயற்கை ஏரோபிக் கம்போஸ்டிங் தான் எங்கள் தனித்தன்மை. இந்திய மற்றும் சர்வதேச கழிவு நிர்வாக பரப்பில் இது எங்களை தனித்து காண்பிக்கிறது,” என்கிறார் திவாரி.

ஆங்கிலத்தில்: டுனிர் பிஸ்வாஸ், தமிழில்: சைபர் சிம்மன்


Edited by Induja Raghunathan

facebook twitter