CSK ரசிகர்களுக்கு புதுமையான அனுபவங்களை வழங்க ஏஐ நிறுவனம் Bonbloc உடன் கைகோர்க்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்!

06:45 PM Feb 10, 2026 | cyber simman

உலக அளவில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தொழில்நுட்ப தீர்வுகளில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழும் பான்ப்ளாக் (Bonbloc), சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியுடன் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த சீசனில் Bonbloc நிறுவனம், CSK அணியின் அதிகாரப்பூர்வ AI பங்குதாரராக செயல்பட உள்ளது.

கிரிக்கெட் விளையாட்டில் செயற்கை நுண்ணறிவு (AI) புதுமைகளை முன்னெடுக்கும் வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் Bonbloc AI நிறுவனம் கூட்டணி அமைத்துள்ளதன் தொடக்கவிழா, பான்ப்ளாக் நிறுவன இணை நிறுவனர் துரை அப்பாதுரை மற்றும் சி.எஸ்.கே அணியின் நிர்வாக இயக்குநர். கே.எஸ். விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த கூட்டாண்மை, மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு மற்றும் ப்ளாக்செயின் தொழில்நுட்பம் (Blockchain Technology) அடிப்படையிலான தீர்வுகள் மூலம் பல துறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் Bonbloc நிறுவனத்தின் பயணத்தில் ஒரு முக்கியமான கட்டமாகும்.

கிரிக்கெட் உலகில் சர்வதேச அளவில் பெரும் ரசிகர் வட்டத்தை கொண்ட CSK அணியுடன் இணைந்து, உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு புதுமையான மற்றும் ஆழமான விளையாட்டு அனுபவங்களை வழங்க Bonbloc திட்டமிட்டுள்ளது.

இந்த கூட்டாண்மை குறித்து Bonbloc நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் மேலாண் இயக்குநர் துரை அப்பாதுரை கூறும்போது,

"CSK என்பது உற்சாகமும் வலுவான பிராண்டு அடையாளமும் கொண்ட அணி, என்று குறிப்பிட்டார். Bonbloc, தொழில்நுட்ப சந்தையில் ஒவ்வொரு வாய்ப்பையும் வென்று முன்னிலை பெற இந்த கூட்டாண்மை முக்கிய பங்கு வகிக்கும்," என்று  கூறினார்.

"CSK அணியின் அதிகாரப்பூர்வ செயற்கை நுண்ணறிவு கூட்டாளியாக இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும்" அவர் தெரிவித்தார். 

இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாக இயக்குநர் கே.எஸ். விஸ்வநாதன் பகிரும்போது,

"Bonbloc நிறுவனத்தை CSK அணியின் அதிகாரப்பூர்வ AI பங்குதாரராக வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம், என்றார். Bonbloc நிறுவனத்தின் AI திறன்கள் மூலம், ரசிகர்களுக்கு புதிய டிஜிட்டல் அனுபவங்களை உருவாக்கவும், அணியின் செயல்பாடுகளில் உயர்வையும் எதிர்பார்க்கிறோம்," என்றும் குறிப்பிட்டார்.

இந்த கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக, Bonbloc நிறுவனத்தின் பிராண்டிங், CSK அணியின் டிஜிட்டல் தளங்கள், மைதான செயல்பாடுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு, ப்ளாக்செயின் தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்ட சிறப்பு முயற்சிகளில் ஈடுபட உள்ளன.


Edited by Induja Raghunathan