
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகளைச் சேர்ந்த 16.68 லட்சம் அதிகாரப்பூர்வ இ-மெயில் கணக்குகளை ரூ.180.10 கோடி மதிப்பிலான மத்திய அரசின் முடிவு, அண்மை ஆண்டுகளில் நிர்வாக தொழில்நுட்ப நோக்கில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய மாற்றங்களில் ஒன்றாக அமைகிறது.
இது வழக்கமான ஐடி மேம்பாடு போலத் தோன்றினாலும், இதன் அளவு, அமைப்பு மற்றும் நோக்கம் அரசு தனது டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்கும் முறையில் ஏற்படும் பரந்த மாற்றத்தை குறிக்கிறது.
பல ஆண்டுகளாக, அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பை, அரசின் தொழில்நுட்ப முதுகெலும்பான தேசிய இன்பர்மேடிக்ஸ் மையம் நிர்வகிக்கும் அமைப்புகள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டன. @gov.in, @nic.in ஆகிய டொமைன்களை கொண்ட அரசு இ-மெயில் சேவைகள் அரசு நிர்வகிக்கும் உள்கட்டமைப்பு சார்ந்து இயங்கின.

இந்த அமைப்புகள் பாதுகாப்பாக இயங்கினாலும், காலப்போக்கில் அரசு தேவைகள் மாறின. இன்றைய அரசு அதிகாரிகள் பல சாதனங்களில், இடங்கள், துறைகளில் இருந்து பணியாற்றுவதால் நிகழ்நேர கூட்டு முயற்சி, பெரிய கோப்புகள் பகிர்வு, நம்பகமான ஸ்டோரேஜ் ஆகிய வசதிகள் கொண்ட கருவிகள் தேவைப்படுகின்றன. இது மேலும் வளர்த்தெடுக்கக் கூடிய அமைப்புகளுக்கான தேவையை ஏற்படுத்தியது.
டிஜிட்டல் கட்டமைப்பு
இந்த இடத்தில் தான் கிளவுட் கம்ப்யூட்டிங் வருகிறது. இதில் மென்பொருள் மற்றும் தரவுகள், அரசு கட்டிடங்களில் உள்ள கம்ப்யூட்டர்களில் மட்டுமே இருப்பதற்கு மாறாக, தொலைதூர சர்வர்களில் சேமிக்கப்பட்டு இணையம் வழியே கையாளப்படுகின்றன. இது அமைப்புகள் வேகமாக வளர உதவுவதோடு, நம்பகத்தன்மையை மேம்படுத்தி, பல்வேறு இடங்களில் உள்ள பயனாளிகள் ஒன்றாக பணியாற்ற உதவுகிறது.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பதில் அளித்த மத்திய அமைச்சர் ஜிதின் பிரசாதா,
“இந்த மாற்றத்தின் நோக்கம் துடிப்பான, இறையாண்மை கொண்ட, பாதுகாப்பான அதிகாரப்பூர்வ இ-மெயில் அமைப்பை உருவாக்குவது மற்றும் பழைய உள்கட்டமைப்பை மேம்படுத்தி, கூட்டு முயற்சி, பாதுகாப்பை அதிகரிப்பது என்று கூறினார். டிஜிட்டல் உள்கட்டமைப்பை பொருத்தவரை, இறையாண்மை என்பது, தரவுகள், சர்வர்கள், டிஜிட்டல் அமைப்புகள் மீதான கட்டுப்பாடு ஆளுகைக்கு முக்கியமாது,” என்று கூறினார்.
இந்த திட்டத்திற்கான நிதி ரூ.180.10 கோடி ஆகும். இது ஒரு முறை பேமெண்டாக அல்லாமல், செயல்முறை இணைந்த முறையில் வழங்கப்படும். மாற்றப்பட்ட செயல்முறை கணக்குகள் மற்றும் பயன்பாட்டிற்கு ஏற்ப அரசு பணம் செலுத்தும். ஒரு கணக்கிற்கான மாதச் செலவு ரூ.170 முதல் ரூ.300 ஆக அமையும். இதற்கான சேமிப்பு, 30 ஜிபி முதல் 100 ஜிபி அமையும்.
இந்த சந்தா முறை, பணியாளர்கள் பரப்பிற்கு ஏற்ப ஒப்பந்தம் விரிவாக அல்லது குறைக்கப்பட வழி செய்கிறது. இது வழக்கமான மென்பொருள் முறையை விட வளைந்து கொடுக்கக் கூடியது.
தொழில் துறை கட்டண ஒப்பீடு, உலக அளவிலான சேவைகளை விட உள்ளூர் சேவைகள் குறைந்த கட்டணம் கொண்டுள்ளதாக உணர்த்துகிறது. லட்சக்கணக்கான பயனாளிகளை கொண்ட திட்டங்களில் இது முக்கிய அம்சமாகும்.
அரசின் மின் சந்தை கொள்முதல் அமைப்பின் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட வெளிப்படையான, போட்டிமிக்க முறையில் இதற்கான மேடை தேர்வு செய்யப்பட்டது என்றும் அமைச்சர் கூறினார். பெரிய அளவிலான பொதுத்துறை மாற்ற திட்டங்களில் கொள்முதல் முறை மற்றும் விதிகள் பின்பற்றல் தொழில்நுட்பம் போலவே முக்கியமானது. ஏற்கனவே உள்ள கொள்முதல் மேடையை பயன்படுத்துவது நம்பகத்தன்மையை உறுதி செய்கிறது.
இந்த மாற்றத்தில் பாதுகாப்பு மைய அம்சமாக அமைகிறது. தரவுகள் பரிமாற்றம், சேமிப்பில் என்கிரிப்ஷன், பல அடுக்கு ஆதன்டிகேஷன், ஜியோ வேலி, ஐபி சார்ந்த கட்டுப்பாடுகள் ஆகியவை இதில் உள்ளன. மேலும், பேரிடர் மீட்பு அமைப்புகளையும் கொண்டுள்ளது. இதன் காரணமாக தரவுகள் பரிமாற்றத்தில் மற்றும் சேமிப்பில் பாதுகாக்கப்படுவதோடு, லாகினுக்கு கூடுதல் அனுமதி தேவை. அணுகலை இடம் சார்ந்து கட்டுப்படுத்தலாம் மற்றும் பேக்கப் அமைப்பு பேரிடர் கால பாதுகாப்பான பகுதிகளில் உள்ளன.
தரவுகள் மீதான கட்டுப்பாடு மற்றும் உரிமம் அரசிடம் உள்ளது முக்கிய அம்சம் என்றும் அமைச்சர் கூறினார். பொதுத்துறை தரவுகள் வெளி மேடைகளில் சேமிக்கப்படும் போது இது முக்கியமாகும்.
டிஜிட்டல் உள்கட்டமைப்பின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை அண்மைக்கால சைபர் தாக்குதல்கள் உணர்த்துகின்றன. தில்லி எய்ம்ஸ்-ல் 2022 நடத்தப்பட்ட ரான்சம்வேர் தாக்குதல் இதற்கான உதாரணம். இந்த சம்பவத்தில் பல்வேறு சர்வர்கள் பாதிக்கப்பட்டு, அதிக தரவுகள் என்கிரிப்ட் செய்யப்பட்டு, பொதுத்துறை அமைப்புகளின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு இடரை உணர்த்தியது. இந்த சம்பவங்கள் வலுவான பாதுகாப்பான கட்டுமானத்தை அவசியத்தை உணர்த்துகின்றன.
பெரிய மாற்றம்
இந்தியா உள்ளூர் தொழில்நுட்ப திறனுக்கு மாறிக்கொண்டிருக்கும் நிலையில், Zoho-வின் இந்த தேர்வு பொருத்தமாகிறது. இந்தியர் உருவாக்கிய இந்நிறுவனம், உலக கிளவுட் சேவைகளை இயக்குவதோடு, இந்தியாவில் தரவு மையங்கள் கொண்டுள்ளது. அரசைப் பொருத்தவரை, உள்ளூர் தொழில்நுட்ப சேவை நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவது உள்நாட்டு டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்கும், முக்கிய அரசு செயல்பாடுகளுக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் சார்ப்பை குறைக்கும் பரந்த கொள்கைக்கு ஏற்ப அமைகிறது.

இந்த மாற்றம் ஒரே நேரத்தில் அல்லாமல் படிப்படியாக செயல்படுத்தப்படுகிறது. இதற்கு முன் நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட பதில் 2025 வாக்கில் 12 லட்சம் கணக்குகள் மாற்றப்படும், என தெரிவித்தது. பின்னர், இது 16.68 லட்சமாக உயர்த்தப்பட்டது. இந்த படிப்படியான அணுகுமுறை இடர்களை குறைத்து, தொழிநுட்ப கோளாறுகள் படிப்படியாக கையாளப்பட வழி செய்கிறது. அதே நேரத்தில், பரவலான நிர்வாக போக்கையும் உணர்த்துகிறது. உரிமம் மற்றும் தரவு கட்டுப்பாடுகளை கொண்டிருக்கும் அதே நேரத்தில், பெரிய டிஜிட்டல் உள்கட்டமைப்பிற்காக பிரத்யேக தொழில்நுட்ப நிறுவவனங்களுடன் செயல்படுவதாக இந்த போக்கு அமைகிறது.
இ-மெயில் மாற்றம் தவிர நவீன அரசுப் பணிகள் ஆவண உருவாக்கம், காட்சி விளக்கம், கோப்புகள், உள் மெசேஜிங் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பை கொண்டுள்ளது. கிளவுட் சார்ந்த மேடைக்கு மாறுவது இந்த சேவைகள் ஒருங்கிணைக்கப்பட வழி செய்கிறது. இது அமைச்சகங்கள், துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்த பல்வேறு தனி அமைப்புகளை சார்ந்திருப்பதை குறைக்கிறது.
கடந்த பத்தாண்டுகளில், அரசு சேவைகள், பதிவுகள், தகவல் தொடர்பு டிஜிட்டல் மேடைகளுக்கு மாறி வருகின்றன. இந்த டிஜிட்டல் அடுக்குகள் அதிகரிக்கும் நிலையில், உள்கட்டமைப்பு ஆதரவு சாலைகள் மற்றும் மின்சாரம் போலவே முக்கியமாகின்றன. இ-மெயில், கோப்பு பகிர்வு, உள்ளூர் தகவல் தொடர்பு பொதுமக்கள் பார்வைக்கு தெரியாவிட்டாலும், அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாக அமைகின்றன.
இ-மெயில் கணக்குகள் கிளவுட் மேடைக்கு மாற்றப்படுவது, கட்டுப்படுத்தப்பட்ட பாதுகாப்பான செயல்முறையில் முக்கிய தரவுகள் மீதான கட்டுப்பாட்டை கொண்டிருப்பதோடு, அரசு கொள்திறனை விரிவாக்கி, ஒருங்கிணைப்பை மேம்படுத்த வளர்த்தெடுக்கக் கூடிய டிஜிட்டல் மேடைக்கு மாறும் பரந்த போக்கை உணர்த்துகிறது.
ஆங்கிலத்தில்: இஷான் பத்ரா, தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan