
eplane கம்பெனி, விமானத்தின் துணை அமைப்புகளை ஒற்றை அமைப்பில் ஒருங்கிணைத்து, தனது 'eVTOL' விமானம் இ 200 எக்ஸ் வாகனத்தை முழு அளவில் அசம்பிள் செய்திருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த முன்னோட்ட வடிவம் (prototype- PT-01) நிறைவு மூலம், e200X வடிவமைப்பு மற்றும் சிமுலேஷனில் இருந்து, பறப்பதற்கு முந்தைய சோதனை கட்டத்திற்கு தயாராகி இருக்கிறது. பயணிகள் ஏர் டாக்சி, நகர்புற சரக்கு வாகனம் மற்றும் ஏர் ஆம்புலன்ஸ் ஆகிய மூன்று சந்தைக்கு ஏற்ற வகையில் இந்த விமானத்தின் ஏர்பிரேம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முழு அளவில் முடிக்கப்பட்ட ஏர்பிரேம் ஒரு விமான திட்டத்தின் தீர்மானமான கட்டமாக அமைகிறது. ஏனெனில், சிமுலேஷனில் சாத்தியமாகாததை இது உறுதிபடுத்துகிறது. வடிவமைப்பு முழு வீச்சில் உற்பத்தி செய்ய சாத்தியம் என்பதை உறுதிப்படுத்துகிறது. துணை அமைப்புகள் ஒற்றை அமைப்பில் ஒருங்கிணைவதையும் உறுதி செய்கிறது. விமானத்தை சோதனைக்கு ஏற்ற கட்டத்திற்கு தயார் செய்கிறது, என இது தொடர்பாக நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

இனி e200X களத்தில் சோதனை செய்ய தயாராக உள்ளது. இதில் அமைப்பு மற்றும் அதில் உள்ள செயல்முறைகள் ஏரோடைனமிஸ் மற்றும் மெக்கானிகல் சுமைக்கு பிரத்யேக சாதனங்கள் வாயிலாக உள்ளாக்கபப்டும். இதன் பிறகு விமான சோதனை மற்றும் சான்றிதழ் முயற்சி மேற்கொள்ளப்படும்.
இத்தகைய வாகனத்தை வடிவமைப்பது சமகால ஏரோஸ்பேஸ் துறையில் பெரும் சாவலாக உள்ளது என்றும் உலக அளவில் சிறிய எண்ணிக்கையில் நிறுவனங்கள் மட்டுமே இதில் ஈடுபட்டுள்ளன என்றும், இபிளேன் அவற்றில் ஒன்று என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விமானம் இபிளேன் இடத்தில் வடிவமைக்கப்பட்டு அசம்பிள் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 21 மில்லியன் டாலர் நிதி திரட்டி இந்த கட்டத்தை நிறுவனம் அடைந்துள்ளது. இது போன்ற சர்வதேச முயற்சிகளுக்கு தேவைப்படும் நிதியில் இது ஒரு சிறிய பகுதியாக அமைகிறது.
“இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படும் உலகத்தரமான மின் விமானத்தை இந்தியாவில் உருவாக்கும் நோக்கம் கொண்டுள்ளோம். e200X வாகனத்தை திட்டமிட்டு மிகவும் கச்சிதமாக வடிவமைத்துள்ளோம். ஏனெனில், நகரை மாற்றி அமைக்க கோரும் ஒரு விமானம், தான் தீர்வாக விரும்பும் பிரச்சனைக்கு தீர்வாகாது. ஒரே ஏர்பிரேம் விமானம் ஏர் டாக்சி, சரக்கு விமானம், ஏர் ஆம்புலன்சாக செயல்படும் திறன் கொண்டது,” என்று இபிளேன் கம்பெனி நிறுவனர் பேராசிரியர்.சத்யா சக்ரவர்த்தி கூறியுள்ளார்.
முதன்மை முதலீட்டாளர் ஸ்பெஷல் இன்வெஸ்ட் நிறுவனர், நிர்வாக இயக்குனர் விசேஷ் ராஜாராம், டெஜ்புளு டெக்னாலஜி வென்சர்ஸ் நிறுவனர் ஈஷ் சுந்தரம், ஆகாஸா ஏர் இணை நிறுவனர் ஆதித்ய கோஷ் உள்ளிட்டோர் இதன் பின்னணியில் ஆதரவாக உள்ளனர்.

நிறுவனத்தின் ஆழ்நுட்ப, பொறியியல் பிரிவை சி.எப்.ஒ.ஜெயகிருஷ்ணன் கவனித்துக்கொள்கிறார். வரும் வாரங்களில் முழுவதும் நிறைவு பெற்ற இ200 எக்ஸ் வாகனத்தை பொதுவெளியில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பிறகு, முழு அளவில் சோதனை மேற்கொள்ளப்படும். தொடர்ந்து சான்றிதழ் பெறுவதற்கான செயல்முறை மேற்கொள்ளப்படும்.
இந்த முயற்சி ஏற்கனவே சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது. ஐஐடி மெட்ராசில் உருவான இந்த ஆழ்நுட்ப ஸ்டார்ட் அப் பிரான்சில் நடைபெற்ற பாரத் இன்னவேட்ஸ் நிகழ்ச்சியில் இடம்பெற்றது. மேலும், அண்மையில் என்விடியா நிறுவனர் ஜென்சன் ஹாங் சிறப்புறையிலும் இடம் பெற்றது.
Edited by Induja Raghunathan