இந்திய விவசாயிகள் சப்ளையில் உதவி செய்ய Coromandel International உடன் Samunnati புரிந்துணர்வு ஒப்பந்தம்!

01:11 PM Jun 09, 2026 | cyber simman

இந்தியாவின் முன்னணி வேளாண் தீர்வுகள் சேவை நிறுவனங்களில் ஒன்றான கோரமண்டல் இண்டர்நேஷனல் நிறுவனம், முன்னணி வேளாண் சூழல் மேடையான 'சமுனாட்டி அக்ரி சொல்யூஷன்ஸ்' (Samunnati Agri Value Chain Solutions) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த கூட்டு முயற்சி, இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் உற்பத்தி அமைப்புகளுக்கு (FPOs) வேளாண் இடுபொருட்களை சப்ளை செய்ய, முன்னிறுத்த விநியோகிக்க வழி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோரமண்டல் உரம், எஸ்.எஸ்பி, நேனோ வர்த்தக தலைவர் மற்றும் செயல் துணைத்தலைவர் மாதவ் அதிகாரி மற்றும் சமுனாட்டி செயல் இயக்குனர் சுரேஷ் ராஜகோபாலன் ஆகியோர், கோரமண்டல் பயிர் ஊட்டச்சத்து செயல் இயக்குனர் நாராயணன் வெள்ளையன் மற்றும் மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் கையெழுத்திட்டனர்.

கோரமண்டலின் தரமான வேளாண் இடுபொருட்கள் சமுனாட்டியின் விரிவான எப்பிஓ வலைப்பின்னல் மூல, மேம்பட்ட சந்தை அணுகலை பெற இந்த கூட்டு முயற்சி வழி வகுக்கும். பிரத்யேகமான சந்தை ஆதரவு முயற்சிகள், காட்சி விளக்கம், தொழில்நுட்ப ஏற்பு திட்டங்கள் ஆகியவற்றையும் நீடித்த விவசாயம் காக்க இந்த கூட்டு முயற்சி வாய்ப்புகளை ஆராயும்.

"Samunnati உடனான இந்த கூட்டு, இந்தியா முழுவதும் உள்ள விவசாகளுக்கு புதுமையான, நீடித்த வேளாண் தீர்வுகளை அளிக்கும் எங்கள் ஈடுபாட்டுடன் பொருந்துகிறது. கோரமண்டல் நிறுவனத்தின் வலுவான சேவைகளுடன் சமுனாட்டியின் வேளான் சப்ளை சைன் ஆற்றல் வலு சேர்க்க வழி சேர்க்கிறது,” என கோரமண்டல் செயல் இயக்குனர் நாராயணன் வெள்ளையன் கூறியுள்ளார்.

"சமுனாட்டியில் நாங்கள் இந்தியா முழுவதும் உள்ள வேளாண் சூழலை செழுமையாக்க உறுதி கொண்டுள்ளோம். இந்த கூட்டு, எங்களது கடைசி மைல் சேவையை வலுவாக்கி எப்பிஓகளுக்கு மேம்பட்ட மதிப்பு அளிக்க வழி செய்கிறது,” என சமுனாட்டி செயல் இயக்குனர் சுரேஷ் ராஜகோபாலன் கூறியுள்ளார்.


Edited by Induja Raghunathan