
விண்வெளி சார்ந்த கண்காணிப்பு சேவைகளில் சர்வதேச அளவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஐ.சி.இ.ஒய்.இ., அடுத்த ஆண்டுக்குள், பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்பிற்கான சிறிய செயற்கைகோள் தொகுப்பிற்கான, தனது முதல் இந்திய உற்பத்தி வசதியை அமைக்க திட்டமிட்டுள்ளது.
இந்த உற்பத்தி வசதி, ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான நிறுவனத்தின் முதன்மை உற்பத்தி மையமாக அமையும், என ICEYE இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ., ரபேல் மோட்ஜேவிஸ்கி கூறியுள்ளார். ஏற்கனவே உள்ள ஐரோப்பிய மற்றும் அமெரிக்க வசதிகளுக்கு துணையாக இது அமையும்.

நிறுவனத்தின் செயற்கைகோள் தொகுப்பு, தற்போது பாதுகாப்பு, கண்காணிப்பு, காப்பீடு மற்றும் அவசரகால நிலை நிர்வாகம் ஆகிய பிரிவுகளில் பயன்படுகிறது. அதிகரித்து வரும் புவிசார் அரசியலுக்கு மத்தியில் நிறுவன செயற்கைகோள்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.
”இந்தியாவுக்கு என்ன தேவை மற்றும் எங்கள் உற்பத்தி திறன் இடையே நிறைய பொருத்தம் இருக்கிறது. சர்வதேச அளவில் இரண்டு முக்கிய போக்குகள் உள்ளன. பாதுகாப்பு செலவுகள் மற்றும் விண்வெளி சார்ந்த திறன் பயன்பாடு அதிகரித்துள்ளது,” என அவர் கூறியுள்ளார்.
”இந்தியா இந்த இரண்டு போக்குகளையும் பிரதிபலிக்கிறது. அண்மை மோதல்களில் இருந்து, விண்வெளி தான் பாதுகாப்பு, மற்றும் கண்காணிப்பிற்கான அடுத்த பிராந்தியம் என நாடுகள் உணர்ந்து வருகின்றன. எனவே இந்தியாவை எங்கள் தீர்வுகளுக்கான முக்கிய சந்தையாக பார்க்கிறோம்,” என்றும் அவர் கூறினார்.
வழக்கமாக கண்காணிப்பு அமைப்புகள் பல்வேறு தரவு புள்ளிகள் சார்ந்திருந்தன. இதில் விண்வெளி சார்ந்த தரவுகள் ஒரு அடுக்காக இருந்தது.
“இன்று, இது மாறி வருகிறது. விண்வெளி சார்ந்த தரவுகள் கண்காணிப்புக்கு முதன்மையாக மாறி வருகிறது. சிறிய செயற்கைகோள்களை பெரிய அளவில் வேகமாக உற்பத்தி செய்யும் திறனை பெற்றுள்ளோம். செயற்கைகோள்களை மட்டும் அளிக்கவில்லை. அதற்கான உள்கட்டமைப்பு மற்றும் பயிற்சியை அளிக்கிறோம்,” என்றும் அவர் கூறினார்.
இந்தியாவில் முதலாண்டில் நிறுவனம் 10 செயற்கைகோள்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது என்றும் அடுத்து வரும் ஆண்டுகளில் 20 முதல் 40 செயற்கைகோள்களாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கான முதலீடு குறிப்பிடத்தக்க அளவு இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். நிறுவனம் உலகின் மிகவும் மேம்பட்ட சிந்தடிக் அபெர்சர் ரேடார் செயற்கைகோள் தொகுப்பை கொண்டுள்ளது. இவற்றின் மூலம் பல துறைகளுக்கு நுண்ணறிவு மற்றும் கண்காணிப்பு சேவைகளை வழங்கி வருகிறது.
”அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போல, ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கு எங்கள் மையமாக இந்தியா உருவாக்க விரும்புகிறோம். இங்குள்ள வளர்ச்சி வாய்ப்பின் காரணமாக வலுவான அடித்தளம் அமைக்க விரும்புகிறோம்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
நிறுவனம் தற்போது, ஆண்டுக்கு 50 செயற்கைகோள்களை உற்பத்தி செய்து வருகிறது. இதை 2028ம் ஆண்டு வாக்கில் 100 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான செயற்கைகோள்களை செலுத்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
“இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் செயற்கைகோள்கள் சர்வதேச சந்தைக்கு சேவை அளிக்கும். உள்ளூர் தேவையையும் நிறைவேற்றும். அரசு ஆர்டர்கள் மட்டும் சார்ந்திருக்கவில்லை. ஏற்கனவே உள்ள செயல்பாடுகள் மூலம் இந்தியாவில் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளோம்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
செய்தி- பிடிஐ
Edited by Induja Raghunathan