பேமெண்ட் அக்ரகேட்டராக CRED செயல்பட ஆர்பிஐ அனுமதி!

12:54 PM Mar 12, 2026 | YS TEAM TAMIL

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நிதி தொழில்நுட்ப நிறுவனம் CRED-க்கு Payment Aggregator (PA) ஆக செயல்பட அனுமதி வழங்கியுள்ளது.

இந்த அனுமதியின் மூலம் நிறுவனம் வணிகர்களை தனது தளத்தில் இணைத்து, பல்வேறு கட்டண முறைகள் மூலம் அவர்களுக்காக பணப் பரிவர்த்தனைகளை வசூலித்து, பின்னர் அந்த தொகைகளை தீர்வு செய்தல் மற்றும் பணம் திரும்ப வழங்குதல் போன்ற செயல்பாடுகளை மேற்கொள்ள முடியும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

CRED நிறுவனம் ஏற்கனவே Prepaid Payment Instrument (PPI) உரிமத்தை பெற்றுள்ளது. மேலும், அதன் குழு நிறுவனங்கள் இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (Insurance Regulatory and Development Authority of India) வழங்கிய கார்ப்பரேட் முகமை உரிமம் (corporate agency licence), பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையம் (SEBI) வழங்கிய பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகர் உரிமம் (registered investment adviser licence) மற்றும் National Payments Corporation of India வழங்கிய TPAP licence ஆகியவற்றையும் பெற்றுள்ளன.

நிறுவனர் குனால் ஷா கூறுகையில்,

“தொடக்கம் முதல் CRED உருவாக்கத்தில் பங்குதாரர்களின் நம்பிக்கையே முக்கியமானதாக இருந்து வருகிறது. செயல்திறன், நம்பகத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் நிர்வாகத் தரநிலைகளில் உயர்ந்த அளவுகோல்களைக் கடைப்பிடித்து வருகிறோம்,” என்று தெரிவித்தார்.

2024–25 நிதியாண்டில் CRED தளத்தின் 1.5 கோடி உறுப்பினர்களுக்காக ரூ.8.5 லட்சம் கோடியைத் தாண்டிய பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்றதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் நடைபெறும் மொத்த கிரெடிட் கார்டு பில் கட்டணங்களில் மூன்றில் ஒரு பங்கு இந்த தளத்தின் மூலம் நடைபெறுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

“Payment Aggregator ஆக செயல்பட வழங்கப்பட்ட இந்த அனுமதி, நாங்கள் உருவாக்கியுள்ள நம்பிக்கையின் பிரதிபலிப்பாகும். இந்தியாவின் அதிக கடன் நம்பகத்தன்மை கொண்ட மக்களுக்கு நிதி முன்னேற்றத்தை ஏற்படுத்தும் அடுத்த கட்டத்திற்கு இது அடித்தளமாக அமையும்,” என்று குனால் ஷா தெரிவித்தார்.