+

கூகுளில் இருந்து விலகி ஸ்டார்ட் அப் துவங்கும் முன்னணி ஆய்வாளர்கள்!

கூகுள் நிறுவனத்தின் மூத்த ஆய்வாளரான ஜெப் டீன், 27 ஆண்டுகள் பணியாற்றிய பின் அந்நிறுவனத்தில் இருந்து விலகி டிஸ்கவரி லூப் எனும் புதிய ஸ்டார்ட் அப் நிறுவனத்தை துவக்கியுள்ளார்.

கூகுள் நிறுவனத்தின் மூத்த ஆய்வாளரான ஜெப் டீன், 27 ஆண்டுகள் பணியாற்றிய பின் அந்நிறுவனத்தில் இருந்து விலகி 'டிஸ்கவரி லூப்' (Discovery Loop) எனும் புதிய ஸ்டார்ட் அப் நிறுவனத்தை துவக்கியுள்ளார். சஞ்சய் கெமாவத் மற்றும் மேலும் இரண்டு ஏஐ ஆய்வாளர்களுடன் இணைந்து புதிய நிறுவனத்தை துவக்குகிறார்.

புதிய நிறுவனத்தில் கூகுள், பங்குகளை கொண்டிருக்கும், என எதிர்பார்க்கப்பட்டாலும், அதன் முன்னணி ஏஐ ஆய்வாளர் ஒருவர் வெளியேறியிருப்பது குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைகிறது.

jeff dean

டீப் மைண்ட் துணைத்தலைவர் மற்றும் ஜெமினி தொழில்நுட்ப தலைவர் Oriol Vinyals மற்றும் கூகுள் பிரைன் இணை நிறுவனர் Quoc Le ஆகியோரும் புதிய நிறுவனத்தில் இணைகின்றனர்.

இந்த குழு, டிஸ்கவரி லூப் நிறுவனத்திற்கான வரைவு திட்டத்தை ஏற்கனவே உருவாக்கி இருப்பதாக தெரிகிறது. இந்நிறுவனம் முதல் கட்டமாக மேம்பட்ட இயந்திர கற்றல் மாதிரியை உருவாக்க முயற்சிக்கும். பல்வேறு துறைகளில் சிக்கலான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் திறன் படைத்த ஏஐ அமைப்பிற்கு அடிப்படையாக இது அமையும்.

தொடர்ந்து, டிஸ்கவரி லூப், இந்த ஏஐ அமைப்புகள் செமிகண்டண்டர் சில், உயிரியல் மருந்து கண்டுபிடிப்பு உள்ளிட்ட துறைகளில் பயன்படுத்தும்.

கூகுள் கவனம் செலுத்தும் இரண்டு பகுதிகளில் இந்த ஸ்டார்ட் செயல்பட உள்ளது. டீப்மைண்ட் மூலம் கூகுள் ஏஐ சார்ந்த மருந்து கண்டுபிடிப்பு மற்றும் ஏஐ திறன் கொண்டு சிப் வடிவமைப்பிலும் கவனம் செலுத்தி வருகிறது.

மருந்தக துறையில் ஏஐ சார்ந்த மருந்து கண்டிபிடிப்பு பிரிவில் அதிக முதலீடு செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், ஏஐ மூலமான சிப் தயாரிப்பிலும் கவனம் செலுத்தப்படுகிறது.

முன்னணி நிறுவனங்களில் இருந்து ஏஇ ஆய்வாளர்கள் விலகி ஸ்டார்ட் அப் நிறுவனம் துவக்கி வரும் போக்கின் தொடர்ச்சியாக இது அமைந்துள்ளது.


Edited by Induja Raghunathan

facebook twitter