+

சென்னை டீப்டெக் ஸ்டார்ட்அப் Reneonix ரூ.1.7 கோடி நிதி திரட்டல்!

சென்னையில் உள்ள டீப்டெக் ஸ்டார்ட்அப் Reneonix நிறுவனம், குருகிராம் நகரை தலைமையிடமாகக் கொண்ட ஏஞ்சல் முதலீட்டு நிறுவனம் Inflection Point Ventures தலைமையில் நடைபெற்ற ‘தொடக்கத்திற்கு முந்தைய’ (Pre-seed) நிதி சுற்றில் ரூ.1.70 கோடி திரட்டியுள்ளது. இந்த முதலீட்டு சுற்றில் முன்னணி நிறுவனங்கள், ஏஞ்சல் முத

சென்னைச் சேர்ந்த டீப்டெக் ஸ்டார்ட்அப் Reneonix நிறுவனம், குருகிராம் நகரை தலைமையிடமாகக் கொண்ட ஏஞ்சல் முதலீட்டு நிறுவனம் Inflection Point Ventures தலைமையில் நடைபெற்ற ‘விதைக்கு முந்தைய நிதி’ (Pre-seed) சுற்றில் ரூ.1.70 கோடி திரட்டியுள்ளது.

இந்த முதலீட்டு சுற்றில் முன்னணி நிறுவனங்கள், ஏஞ்சல் முதலீட்டாளர்கள் மற்றும் பல்வேறு மானிய அமைப்புகள் பங்கேற்றன. குறிப்பாக, இந்திய அரசின் Department of Science and Technology, NSRCEL, IIM Bangalore, SustainTN மற்றும் ITEL Foundation உள்ளிட்டவை இதில் இடம்பெற்றன.

திரட்டப்பட்ட நிதி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக, ஹார்ட்வேர் புதுமைகள் மற்றும் பொருள் அறிவியல் (Material Science) துறைகளில் கவனம் செலுத்தி வணிகரீதியான மாதிரிகளை (commercial prototypes) மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Deep-tech funding

2023ஆம் ஆண்டு இவான் ரிச்சர்ட், கார்த்திக் சங்கர் மற்றும் வருண் பந்தித்துரை ஆகியோரால் தொடங்கப்பட்ட Reneonix, பொதுப் பயன்பாட்டுக்குப் பிந்தைய கழிவுகளை (post-consumer waste) தரநிலைக்கேற்ற சுற்றுச்சுழல் மூலப்பொருட்களாக மாற்றும் கட்டமைப்பை உருவாக்கி வருகிறது. குறிப்பாக கண்ணாடி பொருட்களை மையமாகக் கொண்டு தொடங்கியுள்ள இந்நிறுவனம், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான வகைப்பாடு (AI-led sorting), தொடக்கம் முதல் முடிவு வரை கண்காணிப்பு (end-to-end traceability) மற்றும் பொருள் அறிவியல் நுட்பங்களை இணைத்து செயல்படுகிறது.

Inflection Point Ventures இணை நிறுவனர் மிதேஷ் ஷா கூறுகையில்,

“இந்தியாவின் சுற்றுச்சுழல் பொருளாதார மாற்றத்திற்கு வெறும் நோக்கம் மட்டும் போதாது; அதற்கான வலுவான கட்டமைப்பு அவசியம். Reneonix நிறுவனம் அதற்கான அடித்தளத்தை உருவாக்கி வருகிறது. செயற்கை நுண்ணறிவு, பொருள் அறிவியல் மற்றும் கண்காணிப்பு முறைகளை இணைக்கும் இவர்களின் டீப்டெக் அணுகுமுறை, பிராண்டுகள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு அளவிடக்கூடிய சுற்றுச்சுழல் விளைவுகளை உருவாக்குகிறது,” என்றார்.

நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி இவான் ரிச்சர்ட் கூறுகையில்,

“பேக்கேஜிங் துறையில் சுற்றுச்சுழல் பொருட்களுக்கு தேவையான டீப்டெக் கட்டமைப்பை உருவாக்குவதே எங்கள் நோக்கம். கண்ணாடியிலிருந்து தொடங்கி, மறுசுழற்சி செய்ய கடினமான பிற பொருட்களுக்கும் விரிவாக்கம் செய்ய உள்ளோம். செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான வகைப்பாடு, முழுமையான கண்காணிப்பு மற்றும் பொருள் அறிவியல் வழியாக சுற்றுச்சுழலை அளவிடக்கூடியதும், விரிவாக்கக்கூடியதுமான ஒன்றாக மாற்ற முயற்சித்து வருகிறோம்,” என்றார்.

மேலும், ரெனியோனிக்ஸ் நிறுவனம் இந்திய அரசின் Startup India Seed Fund Scheme, HDFC Bank Parivartan ஆகியவற்றின் ஆதரவையும் பெற்றுள்ளது. இது NSRCEL, IIM Bangalore, ITEL Foundation, Anna Incubator, iTNT Hub மற்றும் Crescent Innovation and Incubation Council போன்ற புதுமை வளர்ப்பு மையங்களில் இன்கியுபேட் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய சுற்றுச்சுழல் பேக்கேஜிங் சந்தை 2024ஆம் ஆண்டில் சுமார் 245 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இருந்தது. இது 2030ஆம் ஆண்டுக்குள் சுமார் 352 பில்லியன் டாலராக உயருமென கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், 2023ஆம் ஆண்டு 273 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்ட நிலைத்தன்மை பேக்கேஜிங் சந்தை, 2030ஆம் ஆண்டில் 448 பில்லியன் டாலராக வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில், 2024-25 நிதியாண்டில் மொத்த பேக்கேஜிங் துறை 80 முதல் 100 பில்லியன் டாலர் மதிப்பில் இருக்கும், என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் நிலைத்தன்மை பேக்கேஜிங் பிரிவு மட்டும் 2025ஆம் ஆண்டில் 10 பில்லியன் டாலரை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு விதிமுறைகள், ESG நடைமுறைகள், மறுசுழற்சி செய்யப்பட்ட உள்ளடக்க இலக்குகள் மற்றும் இணக்கம் சார்ந்த சுற்றுச்சுழல் தேவைகள் ஆகியவை இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

facebook twitter