+

GalaxEye-இன் ‘மிஷன் த்ருஷ்டி’ செயற்கைக்கோள் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்டில் வெற்றிகரமாக ஏவப்பட்டது!

பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட விண்வெளி ஸ்டார்ட்அப் GalaxEye உருவாக்கிய ‘மிஷன் த்ருஷ்டி’ செயற்கைக்கோள் ஞாயிற்றுக்கிழமை SpaceX நிறுவனத்தின் Falcon 9 ராக்கெட்டின் மூலம் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது. ‘மிஷன் த்ருஷ்டி’ உலகின் முதல் OptoSAR (Optical + Synthetic Aperture

பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட விண்வெளி ஸ்டார்ட்அப் 'GalaxEye' உருவாக்கிய ‘மிஷன் த்ருஷ்டி’ (Mission Drishti) செயற்கைக்கோள் ஞாயிற்றுக்கிழமை SpaceX நிறுவனத்தின் Falcon 9 ராக்கெட்டின் மூலம் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.

‘மிஷன் த்ருஷ்டி’ உலகின் முதல் OptoSAR (Optical + Synthetic Aperture Radar) செயற்கைக்கோளாகும். இது electro-optical (EO) மற்றும் synthetic aperture radar (SAR) சென்சார்களை ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கும் புதிய தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

EO சென்சார்கள் வெளிச்சம் மற்றும் தெளிவான வானிலை நிலையில் உயர்தரப் படங்களை பதிவு செய்யும் போது, SAR சென்சார்கள் எந்தவொரு வானிலையிலும், இரவு-பகல் வேறுபாடின்றி ரேடார் அலைகளை பயன்படுத்தி தகவல்களை சேகரிக்கும் திறன் கொண்டவை.

GalaxEye நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சுயாஷ் சிங் கூறுகையில்,

“மிஷன் த்ருஷ்டி தற்போது வெற்றிகரமாக புவி வட்டப் பாதையில் சென்றுள்ளது. அடுத்த கட்டமாக அதன் செயல்பாட்டு சோதனைகளை நிறைவு செய்யும் பணிகளில் கவனம் செலுத்துகிறோம். இதன் மூலம் கிடைக்கும் தனித்துவமான தரவுகளுக்கு உலகளவில் அதிக வரவேற்பு கிடைக்கத் தொடங்கியுள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.
Mission Drishti

இந்த செயற்கைக்கோள் பாரம்பரிய கண்காணிப்பு அமைப்புகளின் வரம்புகளை தாண்டி, எந்த சூழ்நிலையிலும் துல்லியமான மற்றும் தொடர்ச்சியான தரவுகளை வழங்கும் திறனை கொண்டதாகும். இது பாதுகாப்பு, வேளாண்மை, பேரிடர் மேலாண்மை, கடல் கண்காணிப்பு மற்றும் உட்கட்டமைப்பு திட்டமிடல் போன்ற பல துறைகளில் பயன்படும்.

மேலும், இது ISRO அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 29 பூமி கண்காணிப்பு செயற்கைக் கோள்களின் செயல்பாடுகளுக்கு துணையாக இருக்கும், என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐந்து ஆண்டுகள் நீண்ட உள்நாட்டு ஆராய்ச்சி மற்றும் பல்வேறு சுற்றுச்சூழல் சோதனைகள் மற்றும் செயல்திறன் மதிப்பீடுகளுக்குப் பிறகு இந்த மிஷன் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சாதனை குறித்து இந்திய விண்வெளி சங்கத்தின் (ISpA) தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே. பட்டு (ஓய்வு) பகிர்கையில்,

“ஒளியியல் மற்றும் SAR தொழில்நுட்பங்களை ஒரே தளத்தில் இணைத்து தொடர்ந்து தகவல் வழங்கும் திறனை உருவாக்கியுள்ளதால், GalaxEye உலகளவில் சில நிறுவனங்களே அடைந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது,” என்று கூறினார்.

இதற்கிடையில், பிரதமர் மோடி இந்தச் சாதனையைப் பாராட்டி,

“மிஷன் த்ருஷ்டி இந்திய விண்வெளிப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல். இளம் தலைமுறையின் புதுமை ஆற்றலும், நாட்டை முன்னேற்றும் உறுதியும் இதன் மூலம் வெளிப்படுகிறது,” என்று தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இந்த ஏவுதலை இந்தியாவின் விண்வெளி வளர்ச்சியில் ஒரு முக்கிய முன்னேற்றமாகக் குறிப்பிட்டார்.

GalaxEye நிறுவனம் 2030 ஆம் ஆண்டுக்குள் மொத்தம் 10 செயற்கைக்கோள்களைக் கொண்ட ஒரு கூட்டமைப்பை உருவாக்கும் இலக்குடன் செயல்பட்டு வருகிறது. இது இந்தியாவுக்கான வலுவான மற்றும் தன்னிறைவு கொண்ட பூமி கண்காணிப்பு அமைப்பை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

facebook twitter