
ஆபரணத் தங்கம் விலை சரிந்த வேகத்தில் எகிறி வருவது, நகை வாங்க விழைவோருக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் திங்கள்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.100 குறைந்து ரூ.14,950 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.800 குறைந்து ரூ.1,19,600 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.109 குறைந்து ரூ.16,309 ஆகவும், சவரன் விலை ரூ.872 குறைந்து ரூ.1,30,472 ஆகவும் விற்பனை ஆனது.
ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.800 உயர்ந்து, சவரன் விலை ரூ.1.20 லட்சத்தை மீண்டும் தாண்டியுள்ளது. வெள்ளி விலை இன்று கிலோவுக்கு ரூ.10,000 அதிகரித்தது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு அவசரம் எனில் மட்டும் நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - செவ்வாய்க்கிழமை (10.3.2026):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.100 உயர்ந்து ரூ.15,050 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.800 உயர்ந்து ரூ.1,20,400 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.109 உயர்ந்து ரூ.16,418 ஆகவும், சவரன் விலை ரூ.872 உயர்ந்து ரூ.1,31,344 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று (10.3.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.10 உயர்ந்து ரூ.300 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.10,000 உயர்ந்து ரூ.3,00,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
தங்கம் விலை உயர்வு ஏன்?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.92.11 ஆக உள்ளது. ஈரானில் போரும், வளைகுடாவில் பதற்றமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் தங்கம் மீதான முதலீடு மீண்டும் அதிகரித்துள்ளது, ஆபரணத் தங்கம் விலையில் எதிரொலிக்கிறது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,050 (ரூ.100 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,20,400 (ரூ.800 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.16,418 (ரூ.109 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,31,344 (ரூ.872 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,050 (ரூ.100 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,20,400 (ரூ.800 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.16,418 (ரூ.109 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,31,344 (ரூ.872 உயர்வு)
Edited by Induja Raghunathan