தங்கம் விலை இன்று இரண்டாவது நாளாக அதிரடியாக சவரனுக்கு ரூ.2,400 குறைந்திருப்பது, நகை வாங்க விழைவோருக்கு ஜாக்பாட் ஆக கருதப்படுகிறது.
சென்னையில் புதன்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.400 குறைந்து ரூ.13,800 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.3,200 குறைந்து ரூ.1,10,400 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.436 குறைந்து ரூ.15,055 ஆகவும், சவரன் விலை ரூ.3,488 குறைந்து ரூ.1,20,440 ஆகவும் விற்பனை ஆனது.
ஆபரணத் தங்கம் விலை கடந்த இரு தினங்களில் மட்டுமே ரூ.5,600 சரிந்துள்ளது. தற்போது சவரன் விலை ரூ.1.08 லட்சம் ஆக உள்ளது. வெள்ளி விலையில் மாற்றம் ஏதுமில்லை. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - வியாழக்கிழமை (11.6.2026):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.300 குறைந்து ரூ.13,500 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.2,400 குறைந்து ரூ.1,08,000 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.328 குறைந்து ரூ.14,727 ஆகவும், சவரன் விலை ரூ.2,624 குறைந்து ரூ.1,17,816 ஆகவும் விற்பனை ஆகிறது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (11.6.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.260 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,60,000 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.95.62 ஆக உள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையில் அமைதி ஒப்பந்தம் இறுதியாகாத நிலையில், தங்கம் மீதான முதலீடும் ஏற்றமும் இறக்கமுமாக உள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,500 (ரூ.300 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,08,000 (ரூ.2,400 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,727 (ரூ.328 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,17,816 (ரூ.2,624 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,500 (ரூ.300 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,08,000 (ரூ.2,400 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,727 (ரூ.328 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,17,816 (ரூ.2,624 குறைவு)
Edited by Induja Raghunathan