+

Gold Rate Chennai: தொடரும் இன்ப அதிர்ச்சி - தங்கம் விலை ரூ.1,120 குறைவு!

ஆபரணத் தங்கம் விலை கடந்த 3 தினங்களில் மட்டும் ரூ.3,000 அளவில் குறைந்துள்ளது. சவரன் விலை ரூ.1.18 லட்சமாக உள்ளது. வெள்ளி விலையும் வீழ்ச்சி கண்டுள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை மூன்றாவது நாளாக இன்றும் குறைந்து, நகை வாங்க விழைவோருக்கு இன்ப அதிர்ச்சி தந்துள்ளது.

சென்னையில் வெள்ளிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.70 குறைந்து ரூ.14,900 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.560 குறைந்து ரூ.1,19,200 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.75 குறைந்து ரூ.16,256 ஆகவும், சவரன் விலை ரூ.600 குறைந்து ரூ.1,30,048 ஆகவும் விற்பனை ஆனது.

ஆபரணத் தங்கம் விலை கடந்த 3 தினங்களில் மட்டும் ரூ.3,000 அளவில் குறைந்துள்ளது. சவரன் விலை ரூ.1.18 லட்சமாக உள்ளது. வெள்ளி விலையும் வீழ்ச்சி கண்டுள்ளது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு அவசரம் எனில் மட்டும் நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.

தங்கம் விலை நிலவரம் - சனிக்கிழமை (14.3.2026):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.140 குறைந்து ரூ.14,760 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,120 குறைந்து ரூ.1,18,080 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.154 குறைந்து ரூ.16,102 ஆகவும், சவரன் விலை ரூ.1,232 குறைந்து ரூ.1,28,816 ஆகவும் விற்பனை ஆகிறது.
gold rate today

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (14.3.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.10 குறைந்து ரூ.280 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.10,000 குறைந்து ரூ.2,80,000 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.

தங்கம் விலை குறைவு ஏன்?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.92.60 ஆக உள்ளது.

ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான போரும், வளைகுடாவில் பதற்றமும் நீடித்து வருகிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு வெகுவாக கூடி வருகிறது. அதேவேளையில், கையிருப்பு தங்கத்தை விற்கும் போக்கு நீடிக்கிறது. இதுவே, ஆபரணத் தங்கம் விலை குறைய காரணம்.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,760 (ரூ.140 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,18,080 (ரூ.1,120 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.16,102 (ரூ.154 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,28,816 (ரூ.1,232 குறைவு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,760 (ரூ.140 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,18,080 (ரூ.1,120 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.16,102 (ரூ.154 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,28,816 (ரூ.1,232 குறைவு)


Edited by Induja Raghunathan

facebook twitter