Gold Rate Chennai: தங்கம் விலை ஒரே நாளில் ரூ.2,160 சரிவு - இது தங்கம் வாங்க நல்ல நேரமா?

11:08 AM Mar 19, 2026 | Jai s

தொடர்ந்து சரியும் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக ரூ.2,000-க்கும் மேலாக குறைந்தது நகை வாங்க விழைவோருக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது.

சென்னையில் புதன்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.80 குறைந்து ரூ.14,570 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.640 குறைந்து ரூ.1,16,560 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.87 குறைந்து ரூ.15,895 ஆகவும், சவரன் விலை ரூ.696 குறைந்து ரூ.1,27,160 ஆகவும் விற்பனை ஆனது.

ஆபரணத் தங்கம் விலை கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் ரூ.7,000-க்கும் மேல் குறைந்துள்ளது. சவரன் விலை இப்போது ரூ.1.15 லட்சத்துக்கு கீழாக உள்ளது. வெள்ளி விலையும் இன்று வீழ்ச்சி கண்டது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். அதேபோல், தங்கத்தில் முதலீடு செய்பவர்களும் தனிப்பட்ட ஆலோசனை பெற்று, இந்த சரிவை பயன்படுத்தி தங்கம் வாங்கலாம், என சில வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர்.

தங்கம் விலை நிலவரம் - வியாழக்கிழமை (19.3.2026):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.270 குறைந்து ரூ.14,300 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.2,160 குறைந்து ரூ.1,14,400 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.294 குறைந்து ரூ.15,600 ஆகவும், சவரன் விலை ரூ.2,352 குறைந்து ரூ.1,24,800 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (19.3.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.10 குறைந்து ரூ.265 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.10,000 குறைந்து ரூ.2,65,000 ஆகவும் விற்பனை ஆகிறது.

தங்கம் விலை குறைவு ஏன்?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.93.27 ஆக உள்ளது.

ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான போரும், வளைகுடாவில் பதற்றமும் நீடித்து வருகிறது. சர்வதேச நாடுகளில் பணவீக்க அச்சம் ஒருபுறம் இருக்க, அமெரிக்க டாலரின் மதிப்பு வெகுவாக கூடி வருகிறது. அதேவேளையில், கையிருப்பு தங்கத்தை விற்கும் போக்கு நீடிக்கிறது. இவையே ஆபரணத் தங்கம் விலை தொடர்ந்து குறைய காரணம்.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,300 (ரூ.270 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,14.400 (ரூ.2,160 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,600 (ரூ.294 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,24,800 (ரூ.2,362 குறைவு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,300 (ரூ.270 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,14.400 (ரூ.2,160 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,600 (ரூ.294 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,24,800 (ரூ.2,362 குறைவு)


Edited by Induja Raghunathan