Gold Rate Chennai: தங்கம் விலை மீண்டும் அதிரடியாக ரூ.1,200 சரிவு!

11:15 AM Mar 12, 2026 | Jai s

கடந்த இரு தினங்களாக அதிகரித்து வந்த ஆபரணத் தங்கம் விலை இன்று மீண்டும் அதிரடியாக சரிந்துள்ளது, நகை வாங்க விழைவோருக்கு நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் புதன்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.70 உயர்ந்து ரூ.15,120 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.560 உயர்ந்து ரூ.1,20,960 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.77 உயர்ந்து ரூ.16,495 ஆகவும், சவரன் விலை ரூ.616 உயர்ந்து ரூ.1,31,960 ஆகவும் விற்பனை ஆனது.

ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.1,200 குறைந்து, சவரன் விலை ரூ.1.20 லட்சத்துக்கு கீழாக சென்றுள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.10,000 சரிந்துள்ளது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு அவசரம் எனில் மட்டும் நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.

தங்கம் விலை நிலவரம் - வியாழக்கிழமை (12.3.2026):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.150 குறைந்து ரூ.14,970 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,200 குறைந்து ரூ.1,19,760 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.164 குறைந்து ரூ.16,331 ஆகவும், சவரன் விலை ரூ.1,312 குறைந்து ரூ.1,30,648 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (12.3.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.10 குறைந்து ரூ.290 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.10,000 குறைந்து ரூ.2,90,000 ஆகவும் விற்பனை ஆகிறது.

தங்கம் விலை குறைவு ஏன்?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.92.36 ஆக உள்ளது.

ஈரானில் போரும், வளைகுடாவில் பதற்றமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு வெகுவாக கூடி வருகிறது. அதேவேளையில், கையிருப்பு தங்கத்தை விற்கும் போக்கு தொடங்கியுள்ளது. இதுவே, ஆபரணத் தங்கம் விலை குறைய காரணம்.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,970 (ரூ.150 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,19,760 (ரூ.1,200 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.16,331 (ரூ.164 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,30,648 (ரூ.1,312 குறைவு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,970 (ரூ.150 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,19,760 (ரூ.1,200 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.16,331 (ரூ.164 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,30,648 (ரூ.1,312 குறைவு)


Edited by Induja Raghunathan