Gold Rate Chennai: இன்ப அதிர்ச்சி... தங்கம் விலை அதிரடியாக ரூ.1,440 சரிவு!

11:47 AM Aug 14, 2026 | Jai s

தங்கம் விலை வெகுவாக அதிகரித்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் ரூ.1,440 சரிந்தது, நகை வாங்க விழைவோருக்கு இன்ப அதிர்ச்சி தந்துள்ளது.

சென்னையில் வியாழக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.20 உயர்ந்து ரூ.14,220 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.160 உயர்ந்து ரூ.1,13,760 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.22 உயர்ந்து ரூ.15,513 ஆகவும், சவரன் விலை ரூ.176 உயர்ந்து ரூ.1,24,104 ஆகவும் விற்பனை ஆனது.

ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.1,440 குறைந்தது. சவரன் விலை இப்போது ரூ.1.12 லட்சத்துக்கு நெருக்கமாக உள்ளது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.5,000 குறைந்தது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.

தங்கம் விலை நிலவரம் - வெள்ளிக்கிழமை (14.8.2026):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.180 குறைந்து ரூ.14,040 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,440 குறைந்து ரூ.1,12,320 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.197 குறைந்து ரூ.15,316 ஆகவும், சவரன் விலை ரூ.1,576 குறைந்து ரூ.1,22,528 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (14.8.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.5 குறைந்து ரூ.255 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.5,000 ரூ.2,55,000 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.

காரணம் என்ன?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.95.30 ஆக உள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையே பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் தங்கம் மீதான முதலீடு வெகுவாக குறைந்ததும் தங்கம் விலை மாற்றத்துக்கு காரணம்.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,040 (ரூ.180 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,12,320 (ரூ.1,440 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,316 (ரூ.197 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,22,528 (ரூ.1,576 குறைவு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,040 (ரூ.180 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,12,320 (ரூ.1,440 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,316 (ரூ.197 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,22,528 (ரூ.1,576 குறைவு)


Edited by Induja Raghunathan