
தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.400 குறைந்தது, நகை வாங்க விழைவோருக்கு மகிழ்ச்சி தந்துள்ளது.
சென்னையில் திங்கள்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.30 உயர்ந்து ரூ.13,250 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.240 உயர்ந்து ரூ.1,06,000 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.33 உயர்ந்து ரூ.14,455 ஆகவும், சவரன் விலை ரூ.264 உயர்ந்து ரூ.1,15,640 ஆகவும் விற்பனை ஆனது.
ஆபரணத் தங்கம் விலை இன்று ரூ.400 குறைந்தது. சவரன் விலை இப்போது ரூ.1.06 லட்சத்துக்கு கீழாக உள்ளது. வெள்ளி விலையில் இன்றும் மாற்றம் ஏதுமில்லை. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - செவ்வாய்க்கிழமை (4.8.2026):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.50 குறைந்து ரூ.13,200 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.400 குறைந்து ரூ.1,05,600 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.55 குறைந்து ரூ.14,400 ஆகவும், சவரன் விலை ரூ.440 குறைந்து ரூ.1,15,200 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று (4.8.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.235 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,35,000 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.95.30 ஆக உள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையே பதற்றமான சூழல் சற்று தணிந்துள்ளதும் தங்கம் விலை மாற்றத்துக்கு காரணம்.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,200 (ரூ.50 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,05,600 (ரூ.400 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,400 (ரூ.55 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,15,200 (ரூ.440 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,200 (ரூ.50 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,05,600 (ரூ.400 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,400 (ரூ.55 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,15,200 (ரூ.440 குறைவு)
Edited by Induja Raghunathan