+

Gold Rate Chennai: ஆரம்பமே அதிரடி - தங்கம் விலை மேலும் ரூ.5,360 வீழ்ச்சி!

ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.5,360 குறைந்தது. சவரன் விலை இப்போது ரூ.1.04 லட்சத்துக்கு கீழாக உள்ளது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் ஏதுமில்லை.

கடந்த வாரம் முழுவதுமே கடும் வீழ்ச்சி கண்ட ஆபரணத் தங்கத்தின் விலை, வாரத்தின் முதல் நாளான இன்றும் வெகுவாக சரிந்துள்ளது, நகை வாங்க விழைவோருக்கு ஜாக்பாட்டாக கருதப்படுகிறது.

ஆபரணத் தங்கம் விலை கடந்த வாரம் முழுவதுமே கடும் வீழ்ச்சி கண்டது. சனிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.13,620 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,08,960 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.14,858 ஆகவும், சவரன் விலை ரூ.1,18,864 ஆகவும் விற்பனை ஆனது.

ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.5,360 குறைந்தது. சவரன் விலை இப்போது ரூ.1.04 லட்சத்துக்கு கீழாக உள்ளது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் ஏதுமில்லை. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாரளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.

தங்கம் விலை நிலவரம் - திங்கள்கிழமை (23.3.2026):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.670 குறைந்து ரூ.12,950 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.5,360 குறைந்து ரூ.1,03,600 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.731 குறைந்து ரூ.14,127 ஆகவும், சவரன் விலை ரூ.5,848 உயர்ந்து ரூ.1,13,016 ஆகவும் விற்பனை ஆகிறது.
gold rate today

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (23.3.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.250 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,50,000 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.

தங்கம் விலை தடுமாற்றம் ஏன்?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.93.79 ஆக கடும் வீழ்ச்சி கண்டுள்ளது.

ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான போரும், வளைகுடாவில் பதற்றமும் நீடித்து வருகிறது. சர்வதேச நாடுகளில் பணவீக்க அச்சம் ஒருபுறம் இருக்க, அமெரிக்க டாலரின் மதிப்பு வெகுவாக கூடி வருகிறது. அதேவேளையில், கையிருப்பு தங்கத்தை விற்கும் போக்கு நீடிக்கிறது. இவையே ஆபரணத் தங்கம் விலையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கு காரணம்.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.12,950 (ரூ.670 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,03,600 (ரூ.5,360 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,127 (ரூ.731 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,13,016 (ரூ.5,848 குறைவு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.12,950 (ரூ.670 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,03,600 (ரூ.5,360 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,127 (ரூ.731 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,13,016 (ரூ.5,848 குறைவு)


Edited by Induja Raghunathan

facebook twitter