கடந்த சில தினங்களாக அதிரடியாக வீழ்ச்சி கண்டு வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சிறிதளவு மட்டும் உயர்ந்துள்ளது.
சென்னையில் வியாழக்கிழமை ஒரே நாளில் ரூ.5,360 குறைந்தது தங்கம் விலை. அதன்படி, சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.13,900 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,11,200 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.15,164 ஆகவும், சவரன் விலை ரூ.1,21,312 ஆகவும் விற்பனை ஆனது.
ஆபரணத் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் ரூ.5,360 குறைந்த நிலையில், இன்று ரூ.400 மட்டும் உயர்ந்துள்ளது. சவரன் விலை இப்போது ரூ.1.12 லட்சத்துக்கு கீழாகவே நீடிக்கிறது. வெள்ளி விலை இன்றும் சரிவைக் கண்டது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு அவசரம் எனில் மட்டும் நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - வெள்ளிக்கிழமை (20.3.2026):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.50 உயர்ந்து ரூ.13,950 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.400 உயர்ந்து ரூ.1,11,600 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.55 உயர்ந்து ரூ.15,218 ஆகவும், சவரன் விலை ரூ.440 உயர்ந்து ரூ.1,21,744 ஆகவும் விற்பனை ஆகிறது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (20.3.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.5 குறைந்து ரூ.260 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.5,000 குறைந்து ரூ.2,60,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
தங்கம் விலை தடுமாற்றம் ஏன்?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.93.25 ஆக உள்ளது.
ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான போரும், வளைகுடாவில் பதற்றமும் நீடித்து வருகிறது. சர்வதேச நாடுகளில் பணவீக்க அச்சம் ஒருபுறம் இருக்க, அமெரிக்க டாலரின் மதிப்பு வெகுவாக கூடி வருகிறது. அதேவேளையில், கையிருப்பு தங்கத்தை விற்கும் போக்கு நீடிக்கிறது. இவையே ஆபரணத் தங்கம் விலையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கு காரணம்.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,950 (ரூ.50 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,11,600 (ரூ.400 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,218 (ரூ.55 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,21,744 (ரூ.440 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,950 (ரூ.50 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,11,600 (ரூ.400 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,218 (ரூ.55 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,21,744 (ரூ.440 குறைவு)
Edited by Induja Raghunathan