ஆபரணத் தங்கம் விலை இன்று இரண்டாம் நாளாக அதிகரித்துள்ளது, நகை வாங்க விழைவோருக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் செவ்வாய்க்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.100 உயர்ந்து ரூ.15,050 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.800 உயர்ந்து ரூ.1,20,400 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.109 உயர்ந்து ரூ.16,418 ஆகவும், சவரன் விலை ரூ.872 உயர்ந்து ரூ.1,31,344 ஆகவும் விற்பனை ஆனது.
ஆபரணத் தங்கம் விலை இன்று ரூ.560 உயர்ந்து, சவரன் விலை ரூ.1.21 லட்சத்தை நெருங்கிவிட்டது. ஈரான் போர்ச் சூழலின் தாக்கத்தால் இந்த உயர்வுப் போக்கு நீடிக்கலாம் என அஞ்சப்படுகிறது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.
தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு அவசரம் எனில் மட்டும் நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - புதன்கிழமை (11.3.2026):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.70 உயர்ந்து ரூ.15,120 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.560 உயர்ந்து ரூ.1,20,960 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.77 உயர்ந்து ரூ.16,495 ஆகவும், சவரன் விலை ரூ.616 உயர்ந்து ரூ.1,31,960 ஆகவும் விற்பனை ஆகிறது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (11.3.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.300 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.3,00,000 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.
தங்கம் விலை உயர்வு ஏன்?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.91.93 ஆக உள்ளது.
ஈரானில் போரும், வளைகுடாவில் பதற்றமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் தங்கம் மீதான முதலீடு மீண்டும் அதிகரித்துள்ளதுடன், பங்குச் சந்தைகளிலும் கடும் வீழ்ச்சி நிலவுவது, ஆபரணத் தங்கம் விலையில் எதிரொலிக்கிறது. போர் பதற்றம் தணிந்தால் மட்டுமே தங்கம் விலையில் மிகப் பெரிய ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவது மட்டுப்படும் என வர்த்தகர்கள் கருதுகின்றனர்.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,120 (ரூ.70 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,20,960 (ரூ.560 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.16,495 (ரூ.77 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,31,960 (ரூ.616 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,120 (ரூ.70 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,20,960 (ரூ.560 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.16,495 (ரூ.77 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,31,960 (ரூ.616 உயர்வு)
Edited by Induja Raghunathan