+

Gold Rate Chennai: சரிந்த வேகத்தில் எகிறிய தங்கம் விலை ரூ.1,040 உயர்வு!

ஆபரணத் தங்கம் விலை இன்று ரூ.1,040 அதிகரித்தது. தற்போது சவரன் விலை ரூ.1.13 லட்சத்துக்கு மேலாக உள்ளது. வெள்ளி விலையில் இன்றும் மாற்றம் ஏதுமில்லை.

தங்கம் விலை நேற்று எவ்வளவு சரிந்ததோ அதே அளவில் இன்று உயர்ந்திருப்பது, நகை வாங்க விழைவோருக்கு சற்றே கவலை தந்துள்ளது.

சென்னையில் திங்கள்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.130 குறைந்து ரூ.14,070 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,040 குறைந்து ரூ.1,12,560 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.142 குறைந்து ரூ.15,349 ஆகவும், சவரன் விலை ரூ.1,136 குறைந்து ரூ.1,22,792 ஆகவும் விற்பனை ஆனது.

ஆபரணத் தங்கம் விலை இன்று ரூ.1,040 அதிகரித்தது. தற்போது சவரன் விலை ரூ.1.13 லட்சத்துக்கு மேலாக உள்ளது. வெள்ளி விலையில் இன்றும் மாற்றம் ஏதுமில்லை. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.

தங்கம் விலை நிலவரம் - செவ்வாய்க்கிழமை (9.6.2026):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.130 உயர்ந்து ரூ.14,200 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,040 உயர்ந்து ரூ.1,13,600 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.142 உயர்ந்து ரூ.15,491 ஆகவும், சவரன் விலை ரூ.1,136 உயர்ந்து ரூ.1,23,928 ஆகவும் விற்பனை ஆனது.
gold rate today

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (9.6.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.270 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,70,000 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.

காரணம் என்ன?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.95.60 ஆக உள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையில் அமைதி ஒப்பந்தம் இறுதியாகாத நிலையில், தங்கம் மீதான முதலீடும் ஏற்றமும் இறக்கமுமாக உள்ளது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,200 (ரூ.130 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,13,600 (ரூ.1,040 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,491 (ரூ.142 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,23,928 (ரூ.1,136 உயர்வு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,200 (ரூ.130 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,13,600 (ரூ.1,040 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,491 (ரூ.142 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,23,928 (ரூ.1,136 உயர்வு)


Edited by Induja Raghunathan

facebook twitter