
ஆபரணத் தங்கம் விலை சில தினங்களாக கடும் வீழ்ச்சி கண்டு வந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்திருப்பது, நகை வாங்க விழைவோருக்கு சற்று கவலை அளித்துள்ளது.
சென்னையில் வியாழக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.210 குறைந்து ரூ.13,140 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,680 குறைந்து ரூ.1,05,120 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.229 குறைந்து ரூ.14,335 ஆகவும், சவரன் விலை ரூ.1,832 குறைந்து ரூ.1,14,680 ஆகவும் விற்பனை ஆனது.
சென்னையில் 3 தினங்களுக்குப் பிறகு தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. ரூ.640 உயர்ந்தாலும் கூட சவரன் விலை ரூ.1.06 லட்சத்துக்கு கீழாகவே உள்ளது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்தது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - வெள்ளிக்கிழமை (26.6.2026):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.80 உயர்ந்து ரூ.13,220 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.640 உயர்ந்து ரூ.1,05,760 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.87 உயர்ந்து ரூ.14,422 ஆகவும், சவரன் விலை ரூ.696 உயர்ந்து ரூ.1,15,376 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று (26.6.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.5 உயர்ந்து ரூ.235 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.5,000 உயர்ந்து ரூ.2,35,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.94.64 ஆக உள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையில் அமைதி ஒப்பந்தம் உறுதியான, தங்கம் மீதான முதலீடும் ஏற்றமும் இறக்கமுமாக உள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,220 (ரூ.80 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,05,760 (ரூ.640 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,422 (ரூ.87 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,15,364 (ரூ.696 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,220 (ரூ.80 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,05,760 (ரூ.640 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,422 (ரூ.87 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,15,364 (ரூ.696 உயர்வு)
Edited by Induja Raghunathan