ஆபரணத் தங்கம் விலை நான்காவது நாளாக அதிகரித்துள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது, நகை வாங்க விழைவோருக்கு கவலை தந்துள்ளது.
சென்னையில் வெள்ளிக் காலையில் அமைதி காத்த தங்கம் விலை பிற்பகலில் ரூ.1,200 உயர்ந்தது. அதன்படி, சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.13,900 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,11,200 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.15,164 ஆகவும், சவரன் விலை ரூ.1,21,312 ஆகவும் விற்பனை ஆனது.
ஆபரணத் தங்கம் கடந்த 4 தினங்களில் ரூ.6,200 அளவில் அதிகரித்துள்ளது. சவரன் விலை இப்போது ரூ.1.12 லட்சத்தை நெருங்கிவிட்டது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் ஏதுமில்லை. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - சனிக்கிழமை (8.8.2026):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.65 உயர்ந்து ரூ.13,965 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.520 உயர்ந்து ரூ.1,11,720 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.69 உயர்ந்து ரூ.15,235 ஆகவும், சவரன் விலை ரூ.552 உயர்ந்து ரூ.1,21,880 ஆகவும் விற்பனை ஆகிறது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (8.8.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.250 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,50,000 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.95.14 ஆக உள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையே பதற்றமான சூழல் சற்று தணிந்துள்ளதும், சர்வதேச அளவில் தங்கம் மீதான முதலீடு அதிகரித்துள்ளதும் தங்கம் விலை மாற்றத்துக்கு காரணம்.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,965 (ரூ.65 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,11,720 (ரூ.520 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,235 (ரூ.69 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,21,880 (ரூ.552 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,965 (ரூ.65 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,11,720 (ரூ.520 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,235 (ரூ.69 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,21,880 (ரூ.552 உயர்வு)
Edited by Induja Raghunathan