Gold Rate Chennai: ஒரே நாளில் ரூ.3,000 உயர்வு - ரூ.1.22 லட்சத்தை தாண்டிய தங்கம் விலை!

11:38 AM Jan 28, 2026 | Jai s

ஆபரணத் தங்கம் விலையும், வெள்ளி விலையும் இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது, நகை வாங்க விழைவோருக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் செவ்வாய்க்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.65 குறைந்து ரூ.14,960 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.520 குறைந்து ரூ.1,19,680 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.71 குறைந்து ரூ.16,320 ஆகவும், சவரன் விலை ரூ.568 குறைந்து ரூ.1,30,560 ஆகவும் விற்பனை ஆனது.

ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரே நாளில் கிட்டத்தட்ட ரூ.3,000 உயர்ந்து ரூ.1.22 லட்சத்தை கடந்துள்ளது. கிலோ வெள்ளி விலையும் ரூ.4 லட்சத்தை எட்டி புதிய உச்சம் தொட்டுள்ளது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு அவசரம் எனில் மட்டும் நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.

தங்கம் விலை நிலவரம் - புதன்கிழமை (28.1.2026):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.370 உயர்ந்து ரூ.15,330 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.2,960 உயர்ந்து ரூ.1,22,640 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.414 உயர்ந்து ரூ.16,734 ஆகவும், சவரன் விலை ரூ.3,312 உயர்ந்து ரூ.1,33,872 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (28.1.2026) 1 கிராம் வெள்ளி ரூ.13 உயர்ந்து ரூ.400 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.13,000 உயர்ந்து ரூ.4,00,000 ஆகவும் விற்பனை ஆகிறது.

தங்கம் விலை உயர்வு ஏன்?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.91.61 ஆக உள்ளது. சர்வதேச அரசியல் சூழல் பதற்ற நிலை காரணமாக தங்கம், வெள்ளி மீதான முதலீடு அதிகரித்து வருவதால் ஆபரணத் தங்கம் விலை புதிய உச்சம் கண்டுள்ளது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,330 (ரூ.370 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,22,640 (ரூ.2,960 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.16,734 (ரூ.414 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,33,872 (ரூ.3,312 உயர்வு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,330 (ரூ.370 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,22,640 (ரூ.2,960 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.16,734 (ரூ.414 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,33,872 (ரூ.3,312 உயர்வு)


Edited by Induja Raghunathan