+

Gold Rate Chennai: தொடரும் குட் நியூஸ் - தங்கம் விலை மேலும் சரிந்து ரூ.1.18 லட்சத்துக்கு கீழாக குறைவு!

ஆபரணத் தங்கம் விலை கடந்த 4 வர்த்தக தினங்களில் மட்டும் ரூ.3,500 அளவில் குறைந்துள்ளது. சவரன் விலை இப்போது ரூ.1.18 லட்சத்துக்கு கீழாக உள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை வாரத்தின் முதல் நாளான இன்றும் குறைந்தது. இது, நகை வாங்க விழைவோருக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

சென்னையில் சனிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.140 குறைந்து ரூ.14,760 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,120 குறைந்து ரூ.1,18,080 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.154 குறைந்து ரூ.16,102 ஆகவும், சவரன் விலை ரூ.1,232 குறைந்து ரூ.1,28,816 ஆகவும் விற்பனை ஆனது.

ஆபரணத் தங்கம் விலை கடந்த 4 வர்த்தக தினங்களில் மட்டும் ரூ.3,500 அளவில் குறைந்துள்ளது. சவரன் விலை இப்போது ரூ.1.18 லட்சத்துக்கு கீழாக உள்ளது. வெள்ளி விலையும் வீழ்ச்சி கண்டுள்ளது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு அவசரம் எனில் மட்டும் நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.

தங்கம் விலை நிலவரம் - திங்கள்கிழமை (16.3.2026):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.50 குறைந்து ரூ.14,710 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.400 குறைந்து ரூ.1,17,680 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.55 குறைந்து ரூ.16,047 ஆகவும், சவரன் விலை ரூ.440 குறைந்து ரூ.1,28,376 ஆகவும் விற்பனை ஆகிறது.
gold rate today

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (16.3.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.4 குறைந்து ரூ.276 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.4,000 குறைந்து ரூ.2,76,000 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.

தங்கம் விலை குறைவு ஏன்?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.92.47 ஆக உள்ளது.

ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான போரும், வளைகுடாவில் பதற்றமும் நீடித்து வருகிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு வெகுவாக கூடி வருகிறது. அதேவேளையில், கையிருப்பு தங்கத்தை விற்கும் போக்கு நீடிக்கிறது. இதுவே, ஆபரணத் தங்கம் விலை குறைய காரணம்.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,710 (ரூ.50 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,17,680 (ரூ.400 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.16,047 (ரூ.55 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,28,376 (ரூ.440 குறைவு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,710 (ரூ.50 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,17,680 (ரூ.400 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.16,047 (ரூ.55 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,28,376 (ரூ.440 குறைவு)


Edited by Induja Raghunathan

facebook twitter