+

Gold Rate Chennai: தங்கம் வாங்க நல்ல நேரம் தொடர் சரிவு; சவரன் விலை ரூ.1.19+ லட்சம்!

ஆபரணத் தங்கம் விலை இரு தினங்களில் மட்டும் ரூ.1,800 அளவில் குறைந்துள்ளது. சவரன் விலை ரூ.1.19 லட்சமாக உள்ளது. வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை.

கடந்த இரு தினங்களாக ஆபரணத் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இது, நகை வாங்க விழைவோருக்கு நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் வியாழக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.150 குறைந்து ரூ.14,970 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,200 குறைந்து ரூ.1,19,760 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.164 குறைந்து ரூ.16,331 ஆகவும், சவரன் விலை ரூ.1,312 குறைந்து ரூ.1,30,648 ஆகவும் விற்பனை ஆனது.

ஆபரணத் தங்கம் விலை இரு தினங்களில் மட்டும் ரூ.1,800 அளவில் குறைந்துள்ளது. சவரன் விலை ரூ.1.19 லட்சமாக உள்ளது. வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு அவசரம் எனில் மட்டும் நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.

தங்கம் விலை நிலவரம் - வெள்ளிக்கிழமை (13.3.2026):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.70 குறைந்து ரூ.14,900 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.560 குறைந்து ரூ.1,19,200 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.75 குறைந்து ரூ.16,256 ஆகவும், சவரன் விலை ரூ.600 குறைந்து ரூ.1,30,048 ஆகவும் விற்பனை ஆகிறது.
gold rate today

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (13.3.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.290 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,90,000 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.

தங்கம் விலை குறைவு ஏன்?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.92.40 ஆக உள்ளது.

ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான போரும், வளைகுடாவில் பதற்றமும் நீடித்து வருகிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு வெகுவாக கூடி வருகிறது. அதேவேளையில், கையிருப்பு தங்கத்தை விற்கும் போக்கு நீடிக்கிறது. இதுவே, ஆபரணத் தங்கம் விலை குறைய காரணம்.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,900 (ரூ.70 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,19,200 (ரூ.560 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.16,256 (ரூ.75 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,30,048 (ரூ.600 குறைவு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,900 (ரூ.70 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,19,200 (ரூ.560 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.16,256 (ரூ.75 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,30,048 (ரூ.600 குறைவு)


Edited by Induja Raghunathan

facebook twitter