
புதிய வரலாற்று உச்சத்தை எட்டிய ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மாற்றமின்றி விற்பனையாவது, நகை வாங்க விழைவோருக்கு ஓரளவு நிம்மதி தரும் செய்தியாக உள்ளது.
சென்னையில் செவ்வாய்க்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.85 உயர்ந்து ரூ.8,510 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.680 உயர்ந்து ரூ.68,080 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.93 அதிகரித்து ரூ.9,284 ஆகவும், சவரன் விலை ரூ.744 உயர்ந்து ரூ.74,272 ஆகவும் இருந்தது. தற்போது தங்கம் விலை சைலைன்ட் மோடுக்குச் சென்றுள்ளது.
தங்கம் விலை நிலவரம் - புதன்கிழமை (2.4.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.8,510 ஆகவும், ஒரு சவரன் ரூ.68,080 ஆகவும் இருக்கிறது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.9,284 ஆகவும், சவரன் விலை ரூ.74,272 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (2.4.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.114 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,14,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தடுமாற்றத்துடன் காணப்படுகிறது. அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பு முறை அமலுக்கு வந்துள்ள நிலையில், பங்குச் சந்தைகளும் தடுமாறி வருவதால், பாதுகாப்பு கருதி தங்கத்தின் மீது முதலீடு செய்வதில் முதலீட்டாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து ஆபரணத் தங்கம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.

தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,510 (மாற்றம் இல்லை)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.68,080 (மாற்றம் இல்லை)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.9,284 (மாற்றம் இல்லை)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.74,272 (மாற்றம் இல்லை)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,510 (மாற்றம் இல்லை)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.68,080 (மாற்றம் இல்லை)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.9,284 (மாற்றம் இல்லை)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.74,272 (மாற்றம் இல்லை)
Edited by Induja Raghunathan