+

‘என் 20 வயது கனவு நனவானது' - டெல்லி அலுவலகத்தில் சுந்தர் பிச்சையை சந்தித்த ஊழியரின் நெகிழ்ச்சி பதிவு!

“பீக் கூக்ளர் கனவு”: குருகிராம் அலுவலகத்தில் சுந்தர் பிச்சையை சந்தித்த தருணம்! கூகுள் சி.இ.ஓ. இந்தியாவுக்கு வந்த நாள், குருகிராம் கூகுள் அலுவலகம் வழக்கமான வேலைநாளைப் போல இல்லை. அந்த நாளை “அலுவலகத்தின் சாதாரண நாள்” என்று யாரும் சொல்ல முடியாது. ஏனெனில், உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றை

கூகுள் சி.இ.ஓ. இந்தியாவுக்கு வந்த நாள், குருகிராம் கூகுள் அலுவலகம் வழக்கமான வேலைநாளைப் போல் இல்லை. அந்த நாளை ’அலுவலகத்தின் சாதாரண நாள்’ என்று யாரும் சொல்ல முடியாது. ஏனெனில், உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றை வழிநடத்தும் தலைமை நிர்வாக அதிகாரி நேரில் வந்து ஊழியர்களுடன் கலந்துரையாடினார் என்பதாலேயே அன்று களைகட்டியது.

இரண்டரை ஆண்டுகளாக கூகுளில் பணியாற்றி வரும் தருவர் மிட்டல், அந்த தருணத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து,

“என் 20 வயது கனவு இன்று நனவானது” என்று உணர்ச்சியுடன் கூறினார். பள்ளி நாட்களிலிருந்தே சுந்தர் பிச்சையை ரோல் மாடலாகக் கொண்டிருந்த அவர், அவருடன் ஒரே அறையில் உட்கார்ந்து உரையாடலைக் கேட்பது தான் ‘Peak Googler Dream’ என்று குறிப்பிட்டுள்ளார்.

AI India Impact Summit 2026-ல் முக்கிய உரை நிகழ்த்திய பிறகு, சுந்தர் பிச்சை, குருகிராம் அலுவலகத்துக்குச் சென்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். உரையாடலுக்கு இடையில் அவர் அலுவலக வளாகத்தில் சிரித்தபடி ஊழியர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் காட்சிகள் அனைவரையும் கவர்ந்தன.

அந்த நேரத்தில், இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் ஷுப்மன் கில் திடீர் வருகை தந்து, அவருக்கேயுரிய தனித்துவ பேட்டிங் ஷாட்டை பிச்சைக்கு கற்றுக் கொடுத்தது நிகழ்ச்சியை இன்னும் சிறப்பாக்கியது. தொழில்நுட்பமும் கிரிக்கெட்டும் இணைந்த அந்த தருணம், அங்கே இருந்த அனைவருக்கும் மறக்க முடியாத நினைவாக மாறியது.

மற்றொரு கூகுள் ஊழியரான தனுஷி குப்தா, லிங்க்ட்இனில் தனது அனுபவத்தை பகிர்கையில்,

“பிரபஞ்சத்தின் முழு வட்டச் சுழற்சி... என்று விவரித்தார். சின்ன வயதில் ‘Role Model’ என்று எழுதிக் கொண்டிருந்த பெயருடன் இன்று கை குலுக்கினேன்; சில நொடிகள் நேரமே நின்றது போல இருந்தது...” என்று அவர் எழுதியது சமூக வலைதளங்களில் பலரையும் உருக்கியது.
sundar pichai meet

Google இந்திய தலைமையகத்தில் நடந்த இந்த சந்திப்பு, ஒரு CEO-வின் அதிகாரபூர்வ வருகை மட்டுமல்ல; பல இளம் தொழில்நுட்ப வல்லுநர்களின் கனவுகளுக்கு உயிரூட்டிய தருணமாக மாறியது.

புதுடெல்லியில் நடந்த AI மாநாட்டில் இந்தியாவின் AI முன்னேற்றத்தைப் பற்றி பேசிவிட்டு, நேராக ஊழியர்களுடன் நேரத்தை செலவழித்த சுந்தர் பிச்சை, “வெற்றியின் உச்சியில் இருந்தாலும், எளிமையே உயர்வு,” என்பதைக் காட்டினார்.

அந்த நாளை நினைத்தாலே, தருவருக்கும் தனுஷிக்கும் மட்டும் அல்ல, குருகிராம் கூகுள் அலுவலகத்தில் இருந்த ஒவ்வொரு ஊழியருக்கும் இதயம் துடிக்கிறது — ஏனெனில் அது ஒரு சாதாரண வேலைநாள் அல்ல; அது கனவுகள் கைகூடிய நாள்.

facebook twitter