நீலகிரி மலைப்பகுதி முழுவதும், 'லாண்டனா கமரா' எனும் ஆங்கில பெயர் கொண்ட உண்ணிச் செடியை தவறாமல் பார்க்கலாம். அடர் இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் நிற மலர்கள் பூத்துக்குலுங்கும் இந்த செடி, காடுகள், மலைகள் என எல்லா இடங்களிலும் பசுமை பின்னணியில் அலங்கரிக்கின்றன.
ஆனால், இந்த அழகின் பின்னே அவற்றின் ஊடுருவல் தன்மை மறைந்திருக்கிறது. இந்தியாவில் அலங்கார செடியாக கொண்டு வரப்பட்ட இந்த செடி, வேகமாக பரவி, இயல்பாக வளரும் புற்கள், செடிகள் உள்ளிட்ட மற்ற தாவிர வகைகளை மறைக்கும் வகையில் அடர்த்தியாக வளர்கின்றன. இதன் காரணமாக காடுகளின் அமைப்பை மாற்றி, வனவிலங்குகளுக்கான பரப்பையும் பாதிக்கின்றன.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள தீவிர ஊடுருவல் மிக்க தாவர வகையாக கருதப்படுகிறது. தமிழ்நாடு வனத்துறை அண்மையில் முதுமலை புலிகள் சரணாலயம் வனப் பகுதியில் இந்த செடிகளை அகற்றி, அவற்றை உயிரி எரிபொருளாக மாற்றுவதில் கவனம் செலுத்தியது. சுற்றுச்சூழல் சீரமைப்பை, வனப்பகுதியில் காலம் காலமாக வாழும், குறும்பர்கள் போன்ற பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்துடன் இணைக்கும் வகையில் இது மேற்கொள்ளப்பட்டது.
“ஊடுருவும் தன்மை கொண்ட தாவரங்களும், மரங்களும் இங்கு பல காலமாக உள்ளன என்கிறார். தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுபிரியா சாஹு. இந்த வகை செடிகள் எப்படி வந்தன என்பதில் பலவித கருத்துகள் இருந்தாலும், பல ஆண்டுகளாக இவை பரவி உள்ளூர் தாவரங்களை பாதித்துள்ளன, என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அண்மை காலம் வரை இத்தகைய ஊடுருவல் தாவரங்கள் வன நிர்வாகத்தில் முறையான கவனம் பெறவில்லை. 2022-23ல் அமலுக்கு வந்த தமிழ்நாடு ஊடுருவல் செடிகள் மற்றும் அவற்றின் நிர்வாகம் கொள்கை உண்ணிச் செடிகள் மற்றும் இதர வகை அந்நிய தாவரங்களை கையாள்வதற்கான வரைவு திட்டமாக அமைந்துள்ளது.
“இது நாங்கள் கொண்டு வந்த முதல் வலுவான கொள்கையாக அமைகிறது, என்கிறார் சுப்ரியா சாஹு. இந்த பிரச்சனைக்கான நடைமுறைத்தீர்வாகவும் அமைகிறது,” என்கிறார்.
இந்த கொள்கையின் கீழ், தமிழ்நாடு வனத்துறை, முதுமலையை சுற்றியுள்ள பகுதிகளில் உண்ணிச் செடிகளை அகற்றி, வனவிலங்கு நலன் மற்றும் உயிரி பெருக்கத்திற்கு உதவும், புற்கள், செடிகள் மற்றும் மரங்களை சீரமைக்க உள்ளது. இந்த செடிகளின் வேகமாக பரவும் தன்மை மற்றும் நிலையான விதை அமைப்பு இவற்றை கட்டுப்படுத்துவதை சிக்கலாக்குகிறது என்கிறார். இவற்றை வெட்டிய பிறகு, உள்ளார்ந்த விதைகள் மூலம் மீண்டும் துளிர்ப்பதால் தொடர்ந்து அகற்ற வேண்டியிருக்கிறது.
இந்த உயிரி பொருளை எரிப்பதற்கு அல்லது அழுக விடுவதற்கு பதில், வனத்துறை உயிரி எரிபொருள் மையத்தை அமைத்துள்ளது. மசினங்குடியில் உள்ள பழைய மின்வாரிய கட்டிடம் அருகே அமைந்துள்ள இந்த மையம் இவற்றை எரிபொருளாக மாற்றுகிறது. இங்கு மாதந்தோறும் 125 ஹெக்டேர் பரப்பிலான உண்ணிச் செடிகள் அகற்றப்படுகின்றன. இது வனவிலங்குகளுக்கான பரப்பை மீட்டுத்தரும்.
“பழங்குடியின தொழிலாளர்கள் வனத்துறை கீழ் கூலி தொழிலாளர்களாக பணியாற்றுகின்றனர்,” என்கிறார் சுபிரியா சாஹு.
இவர்களில் பலர் விளிம்பு நிலை சமூகத்தச் சேர்ந்தவர்கள். காடுகளில் மரம் அல்லாத பொருட்களை சேகரித்தல், வன கடத்தலுக்கு எதிரான செயல்பாடு மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலா ஆகியவற்றை இவர்கள் சார்ந்துள்ளனர். தற்போதைய எரிபொருள் பணி அவர்களுக்கு இன்னொரு வருமான வழியாகிறது.
உண்ணிச் செடிகளின் அமைப்பு இந்த செயல்முறைக்கு ஏற்றதாக அமைகிறது. அதன் பூச்சிகள் இல்லாத உயிரி நிடை மற்றும் மரம் சார்ந்த தண்டுகள் திட எரிபொருளாகின்றன. மற்ற ஊடுருவல் வகை செடிகளை தனியே செயல்முறைக்கு உள்ளாக்க வேண்டும். உதாரணத்திற்கு சென்னா ஸ்பெக்டபிலிஸ் தமிழ்நாடு அச்சு காகித நிறுவனத்திற்கு கூழாக அளிக்கப்படுகிறது.
உண்ணிச் செடிகளின் பரவல் இயற்கை புற்கள் மற்றும் பிற வகை செடிகளை பாதித்து, கால்நடைகள் உள்ளிட்ட விலங்குகளுக்கான மேய்ச்சல் பரப்பை குறைக்கிறது, என சுற்றுச்சூழல் வல்லுனர்கள் எச்சரித்து வருகின்றனர். அடர்த்தியான செடிகள் விலங்குகள் நடமாட்டத்தை பாதித்து, யானைகள், மான்களுக்கான தீவனத்தையும் பாதிக்கிறது. இந்த வகை செடிகளின் கீழ் மண்ணுக்கு ஏற்ற புற்கள் வளர முடியாமல் பாதிக்கப்படுகிறன. இது வனத்தின் புத்துயிர்ப்பு தன்மையை பாழாக்குகிறது.
“இதே போல சென்னா ஸ்பெக்டபிலிஸ் நச்சுத்தன்மை கொண்டது, மற்ற மரங்களை வளரவிடாமல் தடுகிறது,” என்கிறார். மற்ற செடிகளின் வளர்ச்சியை பாதிக்கும் ரசாயனத்தை இவை வெளிப்படுத்துவதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
உண்ணிச் செடிகளை அகற்றி, அவற்றை உயிரி எரிபொருளாக மாற்றுவதன் மூலம், வனத்துறை காடுகள் பாதிக்கப்படுவதை குறைப்பதோடு பழங்குடியினருக்கான வாழ்வாதாரக்த்தையும் ஏற்படுத்தி தருகிறது.
ஆங்கிலத்தில்: சரண்யா சக்ரபாணி, தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan