+

அமெரிக்காவில் டீ விற்கும் ஐஐடி பட்டதாரி - வேலையிழப்பால் டீக்கடை போட்டு பிரபலமான ‘பிஹாரி சாய்வாலா’

பீஹாரின் பார்ஹ் என்ற சிறிய நகரத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த பிரபாகர் பிரசாத் இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் “பிஹாரி சாய்வாலா” அல்லது “Chaiguy” என்ற பெயரில் தேநீர் விற்பவராக இணையத்தில் வைரலாகியுள்ளார். தற்போது அவர் விற்கும் ஒரு கப் சாய் சுமார் 8 டாலர், அதாவது இந்திய மதிப்பில் ரூ.

பீகாரின் பார்ஹ் என்ற சிறிய நகரத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த பிரபாகர் பிரசாத் இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் “பிஹாரி சாய்வாலா”, “Chaiguy” என்ற பெயரில் தேநீர் விற்பவராக இணையத்தில் வைரலாகியுள்ளார். தற்போது அவர் விற்கும் ஒரு கப் சாய் சுமார் 8 டாலர், அதாவது இந்திய மதிப்பில் ரூ.780 ஆகும்.

பிரபாகர் தனது வாழ்க்கைப் பயணத்தை பகிர்ந்தபோது, சிறு வயதில் குடும்பம் கடுமையான பொருளாதார சிக்கல்களை சந்தித்ததாக கூறினார்.

“நாங்கள் மிகவும் ஏழைகள். குளிர்காலத்தில் போர்வை கூட வாங்க முடியாத நிலை. அதனால் குளிரை தாங்க அரிசி அல்லது பருப்பு சாக்குப் பைகளைப் போர்த்தித் தூங்கிய நாட்கள் இருந்தன,” என்று அவர் நினைவுகூர்கிறார்.

அவரது தந்தை பல தொழில்களை முயன்றாலும் எந்த ஒன்றிலும் பெரிய வெற்றி கிடைக்கவில்லை. இருப்பினும், பெற்றோர் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தனர்.

LA Chai guy

அவரது வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பமாக அமைந்த சம்பவம் அவரது அண்ணனை கடத்த முயன்ற சம்பவம். அதற்குப் பிறகு குடும்பம் உடனடியாக பீஹாரை விட்டு போபாலுக்கு குடிபெயர்ந்தது. அங்கு பீஹார் மாநில பாடத்திட்டத்தில் படித்திருந்த பிரபாகர் திடீரென ஆங்கில CBSE பள்ளியில் சேர்ந்தார்.

“எனக்கு எளிய ஆங்கில வார்த்தைகளே புரியாது. என் உச்சரிப்பை பார்த்து பலர் சிரித்தார்கள். ஆனால், நான் கடுமையாக உழைத்து படிப்பில் முன்னேறினேன்,” என்று அவர் கூறினார். அதன் பிறகு அவர் IIT நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஐடி-யில் சேர முடிந்தது.

IITயில் பட்டம் பெற்ற பிறகு, 2008 ஆம் ஆண்டு தனது முதல் கார்ப்பரேட் பணியில் சேர்ந்தார். ஆனால் அந்த வேலை அவருக்கு பெரிதாக பிடிக்கவில்லை.

“Coding என்னை ஈர்க்கவில்லை. ஜிம் தான் எனக்கு பிடித்தது. நான் வேலையை விட அதிக நேரம் உடற்பயிற்சியில் செலவிட்டேன்,” என்கிறார்.

உடற்பயிற்சி மீது உள்ள ஆர்வம் காரணமாக அவர் மும்பைக்கு சென்று மாடலிங் வாய்ப்புகளுக்காக முயற்சி செய்தார். ஆனால் வாழ்க்கை எதிர்பார்த்த அளவுக்கு பிரகாசமாக இருக்கவில்லை. அந்தேரியில் சிறிய அறைகளில் வாழ்ந்து நீண்ட ஆடிஷன் வரிசைகளில் காத்திருக்கும் நிலை இருந்தது.

அமெரிக்கா சென்ற பிரபாகர் பிரசாத்

சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர் வெளிநாட்டில் வாய்ப்புகளை தேட முடிவு செய்தார். அப்போது அவரது காதலி அமெரிக்காவில் இருந்ததால் அங்கு செல்ல விரும்பினார். விசா இரண்டு முறை நிராகரிக்கப்பட்டாலும் மூன்றாவது முறையில் அவர் வெற்றி பெற்று 2014ம் ஆண்டு டெக்சாஸுக்கு சென்று MBA படித்தார். அதன் பின்னர், பல நகரங்களில் பல கார்ப்பரேட் வேலைகளில் பணியாற்றினார். அந்த காலத்தில் வேலை இழப்புகள், காதல் பிரிவு மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் போன்ற பல சவால்களையும் சந்தித்தார்.

“ஒரு இரவு நான் என்னை நானே கேட்டுக் கொண்டேன் – வாழ்க்கையில் எப்போதும் என்னுடன் இருந்த ஒன்று என்ன? அப்போது நண்பர் ஒருவர் ‘டீ’ பற்றி சொன்னார். எந்த நகரமாக இருந்தாலும், எந்த சிக்கலாக இருந்தாலும், நான் எனக்காக டீ தயாரித்து குடிப்பது வழக்கம். அது எனக்கு வீட்டை நினைவூட்டும்,” என்று அவர் கூறுகிறார்.
chaiguy

2025 பிப்ரவரியில் நடந்த டெக் நிறுவன பணிநீக்கங்களின் போது தனது வேலையை இழந்தபின், அந்த டீ-யையே தொழிலாக மாற்ற முடிவு செய்தார். அதிக பணம் இல்லாத நிலையிலும் லாஸ் ஏஞ்சல்ஸில் இந்திய ஸ்டைல் டீ விற்கும் சிறிய கடையை தொடங்கினார். தற்போது அவர் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள farmers’ market-களில் டீ விற்று வருகிறார். இந்திய தெரு டீ சுவையை அறிய ஆவலாக வரும் பலர் அவரது கடையை நோக்கியே வருகிறார்கள்.

“பீஹாரில் சாக்குப் பைகளை விரித்துத் தூங்கிய நான் இன்று அமெரிக்காவில் டீ விற்கிறேன். நான் CEO ஆகவில்லை, ஆனால் ‘Chai Guy’ ஆகிவிட்டேன். இப்போது தான் வாழ்க்கை நிலைபெற்றது போல உணர்கிறேன்,” என்றார்.

இன்று இணையத்தில் “LA-வின் பிஹாரி சாய்வாலா” என்ற பெயரில் பிரபலமான இந்த இளைஞர், தனது வேர்களையும் இந்திய தெரு டீக்கடைக் கலாச்சாரத்தையும் உலகிற்கு அறிமுகப்படுத்தி வருகிறார்.

facebook twitter