
ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவர்களால் உருவாக்கப்பட்ட ஆழ்நுட்ப ஸ்டார்ட் அப் 'டிஸ்கவர்டு மெட்டிரியல்ஸ்' (Discovered Materials), லைட்ஸ்பீடு இந்தியா பார்ட்னர்ஸ் தலைமையிலான விதை நிதி சுற்றில் 9 மில்லியன் டாலர் திரட்டியுள்ளது. இந்த சுற்றில் ஒய் காம்பினேட்டர், பீக் எக்ஸ்வி பார்ட்னர்ஸ் மற்றும் பால் கிரகாம், கோகுல் ராஜாராம், தாரீக் ஷிஹிபார் உள்ளிட்ட தேவதை முதலீட்டாளர்கள் பங்கேற்றனர்.
செமிகண்டக்டர் சிப்களில் பயன்படுத்தக்கூடிய புதிய பொருட்களை கண்டறிந்து ஏற்கச் செய்வதை வேகமாக்குவதற்கான ஏஐ ஏஜெண்ட்களை டிஸ்கவர்டு மெடிரியல்ஸ் நிறுவனம் உருவாக்குகிறது. செமிகண்டக்டர் நிஜ உலக பிரச்சனைகளுக்கான ஏஜெண்டிக் பொருட்கள் கண்டறிதல் அளவுகோளான டிஸ்கவரி பெஞ்ச மற்றும் ஏஐ கண்டறிந்த நூற்றுக்கணக்கான புதிய பொருட்களையும் வெளியிட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏஐ சிப்கள் அதிக அளவில்லான வெப்பத்தை வெளியிடுவதால், அனல் நிர்வாகம் பெரும் சவாலாக இருப்பதாக நிறுவனம் தெரிவிக்கிறது. புதிய பொருட்களை கண்டறிவதன் மூலம், 3டி பேக்கிங் மற்றும் வெப்ப நிர்வாக செயல்திறன் மூலம் சிப் செயல்திறனை மேம்படுத்தும் வாய்ப்பு உள்ளது. நிறுவனத்தின் ஏஜெண்ட்கள், சிமுலேஷன், சின்தசிஸ், சோதனை மூலம் உறுதிப்படுத்தல் ஆகிய செயல்முறைகளை கையாண்டு வழக்கமான முறையை விட வேகமாக கண்டறிதலுக்கு உதவுகின்றன.

இந்த புதிய நிதியை நிறுவனம் தனது குழுவை விரிவாக்க, ஆய்வக மேம்பாடு மற்றும் ஏஐ ஆய்வு ஏஜெண்ட்கள் வளர்ச்சிக்கு பயன்படுத்த உள்ளது. அத்வைத் ஸ்ரீதர் மற்றும் ஆகாஷ் ராம்தாஸ் ஆகியோர் இதன் நிறுவனர்களாக உள்ளனர்.
"கம்ப்யூட்டிங் ஆற்றலில் ஏற்பட்ட மேம்பாடுகளே கடந்த 50 ஆண்டுகளில் தொழில்நுட்ப முன்னேற்றத்தை வழிநடத்தியுள்ளன. ஆனால், இன்றைய சிப்கள் மனித மூளையை விட 10,000 மடங்கு குறைந்த மின் செயல்திறன் கொண்டுள்ளன,” என்கிறார் இணை நிறுவனர் ஆகாஷ் ராம்தாஸ்.
"புதிய பொருட்கள் மூலம் இந்த இடைவெளியை குறைக்கிறோம். கடந்த 3 மாதங்களில் உலகின் பெரிய ரசாயன நிறுவனங்கள் பல ஆண்டுகளில் உருவாக்கிய தெர்மல் பொருட்களுக்கு நிகரான புதிய பொருட்களை உருவாக்கியுள்ளோம்,” என்கிறார்.
ஆகாஷ்; ஸ்டான்போர்டு பல்கலையில் மெட்டிரியல் சயின்சில் பிஎச்டி பெற்றவர். அத்வைத் கார்னகி மெலானில் ஏஐ படித்தார்.
“ஏஐ; மேம்பட்ட சிப்களுக்கான தேவையை உருவாக்கியுள்ளது. ஆனால், புதிய பொருட்கள் உற்பத்தி நிலைக்கு வரும் செயல்முறை மெதுவாக உள்ளது. ஆகாஷ் மற்றும் அத்வைத், மெட்டிரியல் சயின்ஸ், ஏஐ இணைந்த அரிய தன்மையோடு, புதிய பொருட்களுக்கான ஆய்வு காலத்தை பெருமளவு குறைத்துள்ளனர்,” என்று லைட்ஸ்பிடு இந்தியா பாடனர்ஸ், ஹேமந்த் மொஹோபாத்ரா கூறியுள்ளார்.
யுவர்ஸ்டோரி குழு
Edited by Induja Raghunathan