+

‘AI ஏஜெண்ட்கள் வணிக வெற்றிக்கு முக்கியமென 94% இந்திய சேல்ஸ் வல்லுனர்கள் கருத்து’ - Salesforce அறிக்கை!

இந்தியாவில் விற்பனைத் துறையில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு வேகமாக அதிகரித்து வருவதாக Salesforce வெளியிட்ட புதிய State of Sales அறிக்கை தெரிவிக்கிறது. அந்த அறிக்கையின் படி, இந்திய விற்பனை நிபுணர்களில் 91% பேர் AI ஏஜென்ட்கள் தொழிலின் வெற்றிக்குத் தவிர்க்க முடியாதவை என்று கருதுகின்றனர். உலகம் முழ

இந்தியாவில் விற்பனைத் துறையில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு வேகமாக அதிகரித்து வருவதாக Salesforce வெளியிட்ட புதிய State of Sales அறிக்கை தெரிவிக்கிறது. அந்த அறிக்கையின் படி, இந்திய விற்பனை நிபுணர்களில் 91% பேர் AI ஏஜென்ட்கள் தொழிலின் வெற்றிக்குத் தவிர்க்க முடியாதவை என்று கருதுகின்றனர்.

உலகம் முழுவதும் 4,050 விற்பனை நிபுணர்களை உள்ளடக்கிய இந்த ஆய்வில் இந்தியாவிலிருந்து 250 பேர் கலந்து கொண்டனர். இந்தியாவில் விற்பனை அமைப்புகளில் 90% தற்போது AI தொழில்நுட்பத்தை ஏற்கனவே பயன்படுத்தி வருகின்றன. குறிப்பாக prospecting, lead scoring, sales forecasting மற்றும் மின்னஞ்சல் வடிவமைத்தல் போன்ற பணிகளில் AI பயன்பாடு அதிகமாக உள்ளது.

Salesforce நிறுவனத்தின் தென் ஆசியா பிராந்தியத்தின் மூத்த துணைத் தலைவர் மற்றும் செயல் இயக்குநரான சங்கீதா கிரி கூறுகையில்,

"விற்பனை நிபுணர்கள் தங்களது நேரத்தின் சுமார் 60% பகுதியை விற்பனைக்கு நேரடியாக சம்பந்தமில்லாத நிர்வாக மற்றும் சந்தை ஆய்வு பணிகளில் செலவிடுகின்றனர். இந்தச் சூழலில் AI ஏஜென்ட்கள் அந்தச் சுமையை குறைத்து அவர்களுக்கு உதவுகின்றன," என்று தெரிவித்தார்.

இந்த ஆய்வில் கலந்து கொண்ட AI பயன்படுத்தும் இந்திய விற்பனையாளர்களில் 94% பேர், AI தொழில்நுட்பம் வாடிக்கையாளர்களைப் பற்றிய புரிதலை அதிகரிக்க உதவுகிறது என்று கூறியுள்ளனர். மேலும், 89% பேர், AI பயன்படுத்துவதால் வேலை குறைவாக மன அழுத்தமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். எதிர்காலத்தில் AI ஏஜென்ட்களை பயன்படுத்துவதன் மூலம் prospect research நேரத்தை 35% மற்றும் மின்னஞ்சல் எழுதும் நேரத்தை 38% வரை குறைக்க முடியும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

AI

அறிக்கை மேலும் விற்பனைத் திறனில் ஒரு பெரிய வேறுபாட்டையும் சுட்டிக்காட்டுகிறது. ஆண்டுதோறும் வருவாய் அதிகரித்துள்ள சிறந்த விற்பனையாளர்கள், குறைவாக செயல்படும் விற்பனையாளர்களை விட 1.7 மடங்கு அதிகமாக AI prospecting ஏஜென்ட்களை பயன்படுத்துகின்றனர். Prospecting என்பது புதிய வாடிக்கையாளர்களை கண்டறிந்து, அவர்களை ஆராய்ந்து, விற்பனை வாய்ப்புகளாக மாற்றும் செயல்முறையாகும்.

இருப்பினும், சவால்கள் இன்னும் உள்ளன. இந்திய விற்பனை நிபுணர்களில் 61% பேர், prospecting க்கு வாரத்திற்கு ஒரு முழு வேலை நாளை செலவிட்டாலும் கூட, cold outreach செய்ய போதுமான நேரம் இல்லை என்று கூறியுள்ளனர். மேலும், 58% பேர் ‘cold calling’ தான் தங்களது வேலைக்குள் மிகவும் கடினமான பகுதி என்று தெரிவித்துள்ளனர்.

நிர்வாக பணிச்சுமை இளம் பணியாளர்களுக்கு அதிகமாக உள்ளது. குறிப்பாக இளம் தலைமுறை விற்பனை நிர்வாகிகள் தங்களது நேரத்தின் வெறும் 35% மட்டுமே உண்மையான விற்பனைச் செயல்பாடுகளுக்காக செலவிடுகின்றனர். மூத்த பணியாளர்களுடன் ஒப்பிடும்போது அவர்கள் வாரத்திற்கு சுமார் இரண்டு மணி நேரம் குறைவாகவே விற்பனை செய்கின்றனர், காரணம் அவர்கள் அதிகமாக கையேடு தரவு உள்ளீடு போன்ற பணிகளில் ஈடுபட வேண்டியிருப்பதாக அறிக்கை கூறுகிறது.

மேலும், 46% விற்பனையாளர்கள் தங்களது விற்பனை உரையாடல்களுக்கு அரிதாகவே கருத்து பெறுகின்றனர் என்றும், 47% பேர் வாடிக்கையாளர் அழைப்புகளுக்கு முன் போதுமான பயிற்சி கிடைப்பதில்லை, என்றும் தெரிவித்துள்ளனர்.

AI பயன்பாட்டில் தரவு தரம் முக்கிய தடையாக உருவாகியுள்ளது. AI கருவிகளை பயன்படுத்தும் இந்திய விற்பனை தலைவர்களில் 66% பேர், இணைக்கப்படாத தரவு அமைப்புகள் முன்னேற்றத்தை மந்தமாக்குகின்றன, என்று கூறியுள்ளனர். இதனால் 82% இந்திய விற்பனை நிபுணர்கள் தரவு சுத்திகரிப்பை முக்கிய முன்னுரிமையாகக் கருதுகின்றனர். சிறந்த செயல்திறன் கொண்ட விற்பனையாளர்களில் 79% பேர் data hygiene க்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர், ஆனால் குறைந்த செயல்திறன் கொண்டவர்களில் இது 54% மட்டுமே உள்ளது.

“இப்போது AI ஏஜென்ட்கள் மூலம் குறிப்பிட்ட தொழில் துறைகளுக்கேற்ப தீர்வுகளை வழங்க முடிகிறது. மேலும், வாடிக்கையாளர்களுடன் தகவல் சார்ந்த உரையாடல்களையும் நடத்த முடிகிறது. மனித தீர்மானத்தையும் பின்னணியில் இயங்கும் AI-யையும் இணைத்து செயல்படும் விற்பனையாளர்களே 2026ஆம் ஆண்டில் வெற்றி பெறுவார்கள்,” என்று சங்கேதா கிரி கூறினார்.
facebook twitter