+

இந்தியாவின் டாப் 300 குடும்பத் தொழில் நிறுவனங்களின் மதிப்பு 1.46 டிரில்லியன் டாலர் - ஹுருன் அறிக்கை!

உலகின் முன்னணி பொருளாதாரங்களுக்கு இணையாக இந்தியாவின் டாப் 300குடும்பத் தொழில் நிறுவனங்களின் மதிப்பு 1.46 டிரில்லியன் டாலர் இந்தியாவின் டாப் 300 குடும்பத் தொழில் நிறுவனங்களின் ஒட்டுமொத்த மதிப்பு 1.46 டிரில்லியன் டாலராக, அதாவது சுமார் ரூ.138 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்று மதிப்பீட்டறிகை ஒன்று தெ

உலகின் முன்னணி பொருளாதாரங்களுக்கு இணையாக இந்தியாவின் டாப் 300குடும்பத் தொழில் நிறுவனங்களின் மதிப்பு 1.46 டிரில்லியன் டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் டாப் 300 குடும்பத் தொழில் நிறுவனங்களின் ஒட்டுமொத்த மதிப்பு 1.46 டிரில்லியன் டாலராக, அதாவது, சுமார் ரூ.138 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்று மதிப்பீட்டறிகை ஒன்று தெரிவிக்கின்றது.

இந்த நிறுவனங்கள் அனைத்தும் இணைந்து ஒரு நாடாக இருந்தால், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அடிப்படையில் உலகின் 18-வது மிகப்பெரிய பொருளாதாரமாக இருக்கும். நெதர்லாந்து, சவுதி அரேபியா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தைக் காட்டிலும் இந்த நிறுவனங்களின் ஒருங்கிணைந்த மதிப்பு அதிகமாகும்.

2026 பார்க்லேஸ் பிரைவேட் கிளையன்ட்ஸ் ஹுருன் இந்தியா வெளியிட்டுள்ள மிகவும் மதிப்புமிக்க குடும்பத் தொழில் நிறுவனங்களின் பட்டியலின்படி,

சந்தைகளில் அதிக ஏற்றத்தாழ்வுகள் நிலவிய காலத்திலும் இந்த நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில் நிஃப்டி 50 குறியீடு 1.1 சதவீதமும், சென்செக்ஸ் 3.7 சதவீதமும் சரிந்த நிலையில், இந்த குடும்ப நிறுவனங்களின் மொத்த மதிப்பு 27.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
millionaires

ஹுருன் இந்தியாவின் நிறுவனர் அனஸ் ரஹ்மான் ஜுனைத் கூறுகையில்,

"இந்த நிறுவனங்கள் வெறும் குடும்பச் செல்வத்தை வைத்திருக்கும் அமைப்புகள் அல்ல; அவை 'பொருளாதாரத்தின் செயல்படும் இயந்திரங்கள்' எனக் குறிப்பிட்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த நிறுவனங்கள் தினமும் சராசரியாக ரூ.4,076 கோடி மதிப்பை உருவாக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக அம்பானி குடும்பம் முதலிடத்தில் உள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு ரூ.25.8 லட்சம் கோடியாக உள்ளது. ரூ.8.14 லட்சம் கோடி மதிப்புடன் குமார் மங்கலம் பிர்லா குடும்பம் இரண்டாவது இடத்திலும், ரூ.8.02 லட்சம் கோடி மதிப்புடன் ஜிண்டால் குடும்பம் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

முதல் தலைமுறையைச் சேர்ந்த புதிய செல்வ உருவாக்குநர்களின் வளர்ச்சியும் இந்த அறிக்கையில் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இதில், அதானி குடும்பம் ரூ.19.6 லட்சம் கோடி மதிப்புடன் முன்னிலை வகிக்கிறது. இந்தியாவில் பார்க்லேஸ் பிரைவேட் வங்கியின் தலைவரான அட்ரிஷ் கோஷ் கூறுகையில்,

"முதல் தலைமுறை நிறுவனங்களைச் சேர்ந்த முதல் 100 குடும்பத் தொழில்களின் மொத்த மதிப்பு, பாரம்பரியமாக நிறுவப்பட்ட குடும்ப நிறுவனங்களின் மதிப்பில் தற்போது கிட்டத்தட்ட 62 சதவீதத்தை எட்டியுள்ளது. இது இந்தியாவில் புதிய தலைமுறை தொழில்முனைவோரின் வேகம் அதிகரித்து வருவதைக் காட்டுகிறது," என்று தெரிவித்துள்ளார்.

இந்த குடும்பத் தொழில் நிறுவனங்களின் தாக்கம் செல்வத்தைத் தாண்டியும் விரிவடைந்துள்ளது. இவை அனைத்தும் இணைந்து 54 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு வழங்குகின்றன. இது நியூசிலாந்தின் மொத்த மக்கள் தொகையைவிட அதிகமான பணியாளர்களைக் கொண்டதாகும். மேலும், இந்நிறுவனங்கள் ரூ.1.9 லட்சம் கோடி வரியாக செலுத்துகின்றன. இது இந்தியாவில் வசூலிக்கப்படும் மொத்த நிறுவன வரியில் சுமார் 17 சதவீதமாகும்.

இந்த நிறுவனங்களின் நிர்வாகத்திலும் தலைமுறை மாற்றம் ஏற்பட்டுள்ளது. சுமார் 70 சதவீத குடும்ப நிறுவனங்கள் தற்போது இரண்டாம் தலைமுறையினரால் நிர்வகிக்கப்படுகின்றன. அதே நேரத்தில், நிறுவன நிர்வாகத்தை தொழில்மயமாக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. குடும்ப உறுப்பினர்களுக்குப் பதிலாக தொழில்முறை தலைமைச் செயல் அதிகாரிகள் தலைமையில் 71 நிறுவனங்கள் தற்போது இயங்கி வருகின்றன.

நீண்டகால செல்வ மேலாண்மை மற்றும் முதலீடுகளை மேற்கொள்வதற்காக 79 குடும்பங்கள் குடும்ப அலுவலகங்களையும் (Family Offices) அமைத்துள்ளன. இவை குறிப்பிட்ட ஒரு குடும்பத்தின் செல்வம் மற்றும் முதலீடுகளை நிர்வகிக்கும் தனியார் நிறுவனங்களாகும்.

புவியியல் அடிப்படையில் மும்பை தொடர்ந்து குடும்பத் தொழில் நிறுவனங்களின் முக்கிய மையமாக உள்ளது. பட்டியலில் இடம்பெற்றுள்ள 119 நிறுவனங்களின் தலைமையகங்கள் மும்பையில் அமைந்துள்ளன. குடும்பப் பெயர்களைப் பொறுத்தவரை, இந்தப் பட்டியலில் குப்தா என்ற குடும்பப் பெயர், அகர்வாலை பின்னுக்குத் தள்ளி அதிகம் இடம்பெறும் பெயராக மாறியுள்ளது.

பெண்களின் தலைமையும் அதிகரித்து வருகிறது. தற்போது 18 நிறுவனங்களை பெண்கள் வழிநடத்துகின்றனர். ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தின் பிரியா அகர்வால் ஹெப்பார், பெண்கள் தலைமையிலான நிறுவனங்களில் அதிக மதிப்புடைய நிறுவனத்தின் தலைவராக உள்ளார். அதேவேளை, எஃப்எஸ்என் இ-காமர்ஸ் வெஞ்சர்ஸ் நிறுவனத்தின் ஃபால்குனி நாயர், இந்த முன்னணி பட்டியலில் முதல் தலைமுறையைச் சேர்ந்த நிறுவனத்தை வழிநடத்தும் ஒரே பெண் தொழில்முனைவோராக உள்ளார்.

facebook twitter