+

'வீட்டில் எவ்வளவு நேரம் தான் மனைவியை பாத்துட்டு இருப்பீங்க? - வேலை நேரம் பற்றிய L&T தலைவர் கருத்தால் இணையத்தில் சர்ச்சை!

ஊழியர்கள் வாரத்திற்கு 90 மணி நேரம் உழைக்க வேண்டும் என்றும், ஞாயிறு அன்றும் வேலை செய்ய வேண்டும் என்றும் லார்சன் அண்டு டியூப்ரோ ( எல் & டி) நிறுவன தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியன் கருத்து தெரிவித்து இணையவாசிகளின் கடும் விமர்சனத்திற்கு இலக்காகியுள்ளார்.

ஊழியர்கள் வாரத்திற்கு 90 மணி நேரம் உழைக்க வேண்டும் என்றும், ஞாயிறு அன்றும் வேலை செய்ய வேண்டும் என்றும் லார்சன் அண்டு டியூப்ரோ (L&T) நிறுவன தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியன் கருத்து தெரிவித்து இணையவாசிகளின் கடும் விமர்சனத்திற்கு இலக்காகியுள்ளார்.

எல் & டி நிறுவன தலைவர் பேசியதாக சொல்லப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளமான ரெட்டிட்டில் பகிரப்பட்டது. நிறுவனத்திற்குள் நடைபெற்ற உரையாடலாக கருதப்படும் அந்த வீடியோவில் சுப்பிரமணியன் ஊழியர்கள் சனிக்கிழமைகளில் பணி செய்ய வேண்டும், என்று கூறியுள்ளார். வெளிப்படையாக கூறுவது என்றால்,

ஞாயிற்றுக்கிழமைகளில் கூட பணி செய்ய வைக்க முடியாததற்கு வருந்துவதாகவுக் கூறியவர், ஞாயிறுகளில் பணி செய்ய வைக்க முடிந்தால் மகிழ்வேன், ஏனெனில் நான் ஞாயிறுகளில் பணியாற்றுகிறேன், என்றும் அவர் கூறியுள்ளார்.
Subramanian L&T
"வீட்டில் இருப்பதால் ஊழியர்களுக்கு கிடைப்பது என்ன என கேட்டுள்ளவர், வீட்டில் உட்கார்ந்து என்ன செய்வீர்கள்? எவ்வளவு நேரம் தான் மனைவியை பார்த்துக்கொண்டிருப்பீர்கள்? எவ்வளவு நேரம் தான் மனைவி கணவரை பார்த்துக்கொண்டிருப்பார்? அலுவலகம் சென்று வேலை பாருங்கள்," என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்கு ஆதரவாக அவர் ஒரு உதாரணமும் கூறினார். தன்னிடம் பேசிய சீனர் ஒருவர் கடின உழைப்பு மூலமே சீனா அமெரிக்காவை மிஞ்சியதாக தெரிவித்ததாகவும் அவர் கூறினார். சீனர்கள் வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்கின்றனர் என்றால் அமெரிக்கர்கள் 50 மணி நேரம் வேலை செய்கின்றனர்.

எனவே, உலகில் முன்னிலை வகிக்க வேண்டும் என்றால், நீங்கள் வாரத்த்திற்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

ரெட்டிட் பயனாளிகள் இந்த வீடியோவில் தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு கடுமையான விமர்சனம் செய்துள்ளனர்.

”நான் எல்&டி யில் வேலை செய்கிறேன். இதை முழுவதும் கேட்க நேர்ந்தது. எங்கள் திகைப்பை கற்பனை செய்து பாருங்கள், 70 மணிநேரம் வேலை பார்க்கச்சொன்ன நாரயணமூர்த்தியை நாம் விமர்சித்து கொண்டிருக்கிறோம்,” என ஒரு பயனாளி தெரிவித்திருந்தார்.

இன்னொரு சி.இ.ஓ, வெட்கம் இல்லாமல் அடிமை முறையை முன் வைக்கிறார், என இன்னொரு ரெட்டிட் பயனாளி கூறியிருந்தார்.

மிக அதிக சம்பளம் வாங்கும் சி.இ.ஓக்கள் குறைந்த சம்பளம் வாங்கும் ஊழியர்களை மட்டும் அதிகம் வேலை பார்க்கச்சொல்வது ஏன்? என பலரும் கேட்டிருந்தனர்.

நிறுவனங்கள் ஏன், 30 மணி நேர பணி, 40 மணி நேர பணி, 50 மணி நேர பணி போன்ற தேர்வுகளை வழங்கக் கூடாது என்றும் ஒருவர் கூறியிருந்தார்.

பணி சூழல் என்று வரும் போது எல்&டி மோசமானது, மிகக் குறைந்த சம்பளம் தருகின்றனர், என ஒருவர் தெரிவித்திருந்தார். பணி வாழ்க்கை சமன் பற்றிய கவலை அதிகரித்து வரும் நிலையில் இந்த சர்ச்சை வெடித்துள்ளது.


Edited by Induja Raghunathan

facebook twitter