+

ரூ.1 கோடி நிதி திரட்டிய மதுரை அழகுசாதன ஸ்டார்ட் அப் ‘த்விஸி ஸ்கின்கேர்’

மதுரையைச் சேர்ந்த இயற்கை அழகு கலை ஸ்டார்ட் அப் த்விஸி ஸ்கின்கேர் (Tvishi Skincare) அதிக நிகர மதிப்பு கொண்ட தனிநபர்கள் மற்றும் என்.ஆர்.ஐ முதலீட்டாளர்கள் உள்ளிட்ட நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் இருந்து விதைக்கு முந்தைய சுற்றில் ரூ.1 கோடி நிதி திரட்டுவதாக அறிவித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த இயற்கை அழகு கலை ஸ்டார்ட் அப் 'த்விஸி ஸ்கின்கேர்' (Tvishi Skincare) அதிக நிகர மதிப்பு கொண்ட தனிநபர்கள் மற்றும் என்.ஆர்.ஐ முதலீட்டாளர்கள் உள்ளிட்ட நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் இருந்து விதைக்கு முந்தைய சுற்றில் ரூ.1 கோடி நிதி திரட்டுவதாக அறிவித்துள்ளது.

இந்த முதலீடு, அழகு சாதன பொருட்கள் புதுமையாக்கம், தென்னிந்திய அளவிலான விரிவாக்கம் மற்றும் நேரடி வாடிக்கையாளர் சார்ந்த வளர்ச்சியை வேகமாக பயன்படுத்தப்படும், என நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Tvishi

மூலப்பொருட்கள் சார்ந்த அறிவியல், வெளிப்படைத்தன்மை, நீண்ட கால சரும நலன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நிறுவப்பட்டுள்ள இந்நிறுவனம், வழக்கமான அழகு கலை உடனடி தீர்வுகள் மற்றும் தெளிவில்லாத உறுதிகளில் இருந்து விலகி, உண்மையான பலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் இது தொடர்பான செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

நிறுவத்தின் நிறுவனர்களில் ஒருவரான கிருத்திகா.எஸ், தனிப்பட்ட அனுபவத்தால் உணர்ந்த தேவையின் அடிப்படையில் இந்த நிறுவனத்தை உருவானக்கியுள்ளார். த்விஷி நிறுவனர் கிருத்திகா, தன் மகள் தொடர்ந்து சரும ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட போது, வீட்டிலேயே அதற்கான மென்மையான சரும நலன் தீர்வுகளை முயன்று பார்த்துள்ளார். சந்தையில் உள்ள பெரும்பாலான இயற்கை அல்லது மூலிகை தயாரிப்புகள், என குறிப்பிடப்படும் சேவைகள் மூலப்பொருட்கள் தொடர்பான தெளிவில்லாமல் இருப்பதையும் உணர்ந்துள்ளார்.

இதன் விளைவாக, சரும நலனுக்கான மூலப்பொருட்கள் தொடர்பாக ஆழமாக ஆய்வு செய்து பாரம்பரிய மற்றும் அறிவியல் அறிவை இணைத்து, தீர்வுகளை உருவாக்கினார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து வெளிப்படைத்தன்மை மற்றும் அறிவியல் அணுகுமுறை அடிப்படையிலான செயல்பாட்டில் நம்பிக்கை கொண்டு இந்நிறுவனத்தை துவக்கினார், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனம்; சரும நலன், உடல் நலன், உதடு நலன் உள்ளிடவற்றுக்கான அழகுசாதன பொருட்களை கொண்டுள்ளது. மேலும், தாழம்பூ குங்குமம் மற்றும் மூலிகை பொருட்கள் உள்ளிட்ட பாரம்பரிய பொருட்களையும் கொண்டுள்ளது.

த்விஷி நிறுவனர் கிருத்திகா

" align="center">Tvishi handmade

த்விஷி நிறுவனர் கிருத்திகா

தற்போது திரட்டியுள்ள விதை நிதியின் பெரும் பகுதியை ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கு பயன்படுத்த உள்ளது. புதிய பதப்படுத்தல் பொருட்கள் இல்லாத மென்மையான சரும நலன் பொருட்களும் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

த்விஷி நிறுவனம் தற்போது சொந்த டி2சி இணையதளம் மற்றும் இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சானல்களில் செயல்படுகிறது. அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் மூலமும் விற்பனை செய்கிறது. தமிழகத்தில் தனது நிலையை வலுவாக்கி அடுத்த கட்டமாக இந்திய அளவில் மற்றும் வெளிநாடுகளில் விரிவாக்கம் செய்ய உள்ளது.

நிதித்துறை, வர்த்தக உத்திகள் ஆகியவற்றில் 20 ஆண்டுகால அனுபவம் உள்ள கார்த்திக், இணை நிறுவனராக உள்ளார். வியூக திட்டமிடல் மற்றும் முதலீட்டாளர்கள் தொடர்பில் கவனம் செலுத்துகிறார். சசிகலா தயாரிப்பு மற்றும் செயல்பாடுகளில் கவனம் செலுத்துகிறார்.


Edited by Induja Raghunathan

facebook twitter