+

ஏஐ தொழில்நுட்பத்தை டேட்டா போல மலிவாக்க ரூ.10 லட்சம் கோடி முதலீடு - முகேஷ் அம்பானி அதிரடி!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு (AI) கட்டமைப்பை மேம்படுத்த அடுத்த ஏழு ஆண்டுகளில் 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்போவதாக ஓர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 'இந்தியா ஏஐ இம்பாக்ட்' (India AI Impact Summit) உச்சிமாநாட்டில் பேசிய அவர், ஜியோ எவ்வாறு இ

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு (AI) கட்டமைப்பை மேம்படுத்த அடுத்த ஏழு ஆண்டுகளில் 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்போவதாக ஓர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

'இந்தியா ஏஐ இம்பாக்ட்' (India AI Impact Summit) உச்சிமாநாட்டில் பேசிய அவர், ஜியோ எவ்வாறு இணையக் கட்டணங்களைக் குறைத்து புரட்சியை ஏற்படுத்தியதோ, அதேபோல் ஏஐ தொழில்நுட்பத்தையும் ஒவ்வொரு இந்தியருக்கும் மலிவு விலையில் கொண்டு சேர்ப்பதே தங்களது இலக்கு என்று குறிப்பிட்டார்.

"ஜியோ இந்தியாவை இணைய யுகத்துடன் இணைத்தது; இப்போது இந்தியாவை அறிவாற்றல் (Intelligence) யுகத்துடன் இணைக்கும்," என்று முழங்கிய அவர், இந்தியா இனி அறிவாற்றலுக்காக வெளிநாடுகளைச் சார்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், டேட்டா கட்டணங்கள் குறைந்ததைப் போலவே ஏஐ சேவைகளின் செலவும் பெருமளவு குறைக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

இந்த பிரம்மாண்ட திட்டத்தின் ஒரு பகுதியாக, குஜராத்தின் ஜாம்நகரில் பல ஜிகாவாட் திறன் கொண்ட ஏஐ தரவு மையங்களின் (AI-ready data centres) கட்டுமானப் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. இதில் முதல் கட்டமாக 120 மெகாவாட் திறன் கொண்ட கட்டமைப்பு 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் பயன்பாட்டுக்கு வரும், என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மையங்களுக்குத் தேவையான மின்சாரத்தை வழங்க, கட்ச் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சூரியசக்தி திட்டங்கள் மூலம் 10 ஜிகாவாட் உபரி பசுமை ஆற்றலைப் பயன்படுத்த ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது.

மேலும், ஜியோவின் நாடு தழுவிய தொலைத்தொடர்பு நெட்வொர்க்குடன் ஒருங்கிணைக்கப்பட்ட 'எட்ஜ்-கம்ப்யூட்டிங்' வசதி மூலம், கிராமப்புறக் கடைகள், வகுப்பறைகள், பண்ணைகள் மற்றும் கிளினிக்குகளுக்கு மிகக் குறைந்த தாமதத்தில் (low-latency) அதிவேக ஏஐ சேவைகள் சென்றடையும். இதன் மூலம் உலகளாவிய ஏஐ போட்டியில் இந்தியா ஒரு முக்கிய சக்தியாக உருவெடுக்கும் என்றும், உள்நாட்டிலேயே தரவுகளைச் சேமித்து கையாளும் 'Sovereign AI' கட்டமைப்பு வலுப்பெறும் என்றும் அம்பானி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மூன்று கட்டத் திட்டம்: செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படை கட்டமைப்பை உருவாக்க மூன்று கட்டத் திட்டத்தை அறிவித்துள்ளளார் முகேஷ் அம்பானி:

முதல் கட்டம்:

குஜராத் மாநிலம் ஜாம்நகர் பகுதியில் பல கிகாவாட் திறன் கொண்ட, AI-க்கு தயாரான தரவு மையங்கள் (Data Centres) கட்டும் பணிகளை ரிலையன்ஸ் தொடங்கியுள்ளது. 2026ஆம் ஆண்டு இரண்டாம் பாதியில் 120 மெகாவாட் திறன் கொண்ட கட்டமைப்பு செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், எதிர்காலத்தில் கிகாவாட் அளவிலான கணிப்பொறி (compute) திறனை உருவாக்கும் சாலைவரைபடமும் தயாரிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டம்:

இந்த தரவு மையங்களுக்கு தேவையான மின்சாரத்தை பசுமை ஆற்றல் மூலம் வழங்க ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, கட்ச் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள சூரிய மின்சார உற்பத்தி திறனை மையமாகக் கொண்டு, மொத்தம் 10 கிகாவாட் வரை உபரி பசுமை ஆற்றலை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மூன்றாம் கட்டம்:

Jio நிறுவனம் தனது தொலைத்தொடர்பு வலையமைப்புடன் ஒருங்கிணைந்த நாடு முழுவதும் எட்ஜ்-கம்ப்யூட் (edge compute) கட்டமைப்பை உருவாக்க உள்ளது. இதன் மூலம் குறைந்த தாமதத்துடன் (low latency) AI சேவைகளை மக்களிடம் நேரடியாக வழங்க முடியும்.

இந்த முயற்சியின் முக்கிய நோக்கம், செயற்கை நுண்ணறிவை “வேகமானது, குறைந்த தாமதம் கொண்டது மற்றும் மலிவானது” ஆக்குவது என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். கிராம கடைகள், பள்ளிகள், விவசாய நிலங்கள் மற்றும் மருத்துவ மையங்கள் வரை AI சேவைகளை கொண்டு செல்லும் நோக்கத்துடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

facebook twitter