தமிழக தேர்தலில் அதிகம், குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்கள் யார்? யார்?

12:15 PM May 05, 2021 |

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிந்துள்ள நிலையில் அறுதிப் பெரும்பான்மைக்கு அதிகமான தொகுதிகளை வென்றுள்ள திமுக ஆட்சி அமைக்கத் தயாராகி வருகிறது. எளிமையான வகையில் ஆளுநர் மாளிகையில் மே 7ம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்கிறது.


இந்நிலையில், இந்தத் தேர்தலில் அதிகம், குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்கள் யார் யார் என்பதைப் பார்க்கலாம்.

அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற வேட்பாளர்கள்

  1. ஐ. பெரியசாமி (திமுக) – ஆத்தூர் தொகுதி -1,35,671 வாக்குகள் வித்தியாசம்
  2. எ.வ.வேலு (திமுக) – திருவண்ணாமலை தொகுதி - 94,673 வாக்குகள் வித்தியாசம்
  3. கிருஷ்ணசாமி (திமுக)– பூவிருந்தவல்லி தொகுதி - 94,110 வாக்குகள் வித்தியாசம்
  4. எடப்பாடி பழனிசாமி (அதிமுக) – எடப்பாடி தொகுதி – 93,802 வாக்குகள் வித்தியாசம்
  5. கே.என்.நேரு (திமுக)– திருச்சி மேற்கு தொகுதி - 85,109 வாக்குகள் வித்தியாசம்
  6. மு.க.ஸ்டாலின் (திமுக)– கொளத்தூர் தொகுதி - 70,384 வாக்குகள் வித்தியாசம்
  7. உதயநிதி ஸ்டாலின் (திமுக)– சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதி – 69,355 வாக்குகள் வித்தியாசம்
  8. தங்கம் தென்னரசு (திமுக)– திருச்சுழி தொகுதி - வாக்குகள் வித்தியாசம்
  9. பொன்முடி (திமுக)– திருக்கோவிலூர் தொகுதி- 59,680 வாக்குகள் வித்தியாசம்
  10. கதிரவன் (திமுக)– மண்ணச்சநல்லூர் தொகுதி- 59,618 வாக்குகள் வித்தியாசம்
  11. சுதர்சனம் (திமுக)– மாதவரம் தொகுதி- 57,071 வாக்குகள் வித்தியாசம்
  12. ராமச்சந்திரன் (இ.கம்யூ)– தனி தொகுதி- 56,226 வாக்குகள் வித்தியாசம்
  13. ராஜேஷ்குமார் (காங்.)– கிள்ளியூர் தொகுதி- 55,400 வாக்குகள் வித்தியாசம்
  14. மணி (அதிமுக)– ஓமலூர் தொகுதி- 55,294 வாக்குகள் வித்தியாசம்
  15. நாசர் (திமுக)– ஆவடி தொகுதி- 55,275 வாக்குகள் வித்தியாசம்
  16. சிவகுமார் (திமுக) – திரு.வி.க நகர் தொகுதி- 55,013 வாக்குகள் வித்தியாசம்
  17. ஆர்.டி.சேகர் (திமுக) - பெரம்பூர் தொகுதி- 54,976 வாக்குகள் வித்தியாசம்
  18. இனிக்கோ இருதயராஜ் (திமுக)– திருச்சி கிழக்கு தொகுதி- 53,797 வாக்குகள் வித்தியாசம்
  19. துரை சந்திரசேகரன் (திமுக) – திருவையாறு தொகுதி- 53,650 வாக்குகள் வித்தியாசம்
  20. அப்துல் வகாப் (திமுக) – பாளை தொகுதி – 52,141 வாக்குகள் வித்தியாசம்


திமுக-வின் மூத்த தலைவரான ஐ.பெரியசாமி, ஆத்தூர் தொகுதியில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 82 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றிபெற்று, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கச் செய்தார். இவர் ஆத்தூர் தொகுதியில் 1989, 1996, 2006, 2011, 2016 என 5 முறை வென்றவர், தற்போது 6-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள்

  1. ஜெ.கருணாநிதி (திமுக)– தி.நகர் தொகுதி- 137 வாக்குகள் வித்தியாசம்
  2. சரஸ்வதி (பாஜக) – மொடக்குறிச்சி தொகுதி – 281 வாக்குகள் வித்தியாசம்
  3. பழனி நாடார் (காங்.)– தென்காசி தொகுதி- 370 வாக்குகள் வித்தியாசம்
  4. சதாசிவம் (பாமக)– மேட்டூர் தொகுதி- 656 வாக்குகள் வித்தியாசம்
  5. துரைமுருகன் (திமுக)– காட்பாடி தொகுதி- 746 வாக்குகள் வித்தியாசம்
  6. அசோக்குமார் (அதிமுக)– கிருஷ்ணகிரி தொகுதி- 794 வாக்குகள் வித்தியாசம
  7. ராதாகிருஷ்ணன் (காங்.) – விருத்தாசலம் தொகுதி- 862 வாக்குகள் வித்தியாசம்
  8. சபா ராஜேந்திரன் (திமுக) –நெய்வேலி தொகுதி- 977 வாக்குகள் வித்தியாசம்
  9. தேவராஜி (திமுக)– ஜோலார்பேட்டை தொகுதி- 1091 வாக்குகள் வித்தியாசம்
  10. தாமோதரன்(அதிமுக)- கிணத்துக்கடவு தொகுதி- 1095 வாக்குகள் வித்தியாசம்
  11. வெங்கடாச்சலம்(திமுக)– அந்தியூர் தொகுதி- 1275 வாக்குகள் வித்தியாசம்
  12. ரகுபதி (திமுக)– திருமயம் தொகுதி- 1382 வாக்குகள் வித்தியாசம்
  13. கயல்விழி(திமுக)–தாராபுரம் தொகுதி-1393 வாக்குகள் வித்தியாசம்
  14. சுந்தர் (திமுக)– உத்திரமேரூர் தொகுதி- 1622 வாக்குகள் வித்தியாசம்
  15. பொள்ளாச்சி ஜெயராமன் (அதிமுக)– பொள்ளாச்சி தொகுதி- 1725 வாக்குகள் வித்தியாசம்
  16. வானதி சீனிவாசன் (பாஜக)– கோவை தெற்கு தொகுதி- 1728 வாக்குகள் வித்தியாசம்
  17. பொன் ஜெயசீலன் (அதிமுக)– கூடலூர் தொகுதி- 1945 வாக்குகள் வித்தியாசம்
  18. பாலாஜி (விசிக) – திருப்போரூர் தொகுதி – 1947 வாக்குகள் வித்தியாசம்
  19. மதிவேந்தன் (திமுக)– ராசிபுரம் தொகுதி- 1952 வாக்குகள் வித்தியாசம்
  20. சிவக்குமார்(பாமக) – மயிலம் தொகுதி – 2230 வாக்குகள் வித்தியாசம்


அதே போல், தமிழகத்திலயே மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் சென்னை தியாகராயநகர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெ கருணாநிதி வெற்றி பெற்றுள்ளார். ஜெ கருணாநிதி தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சத்தியநாராயணனை 137 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். அடுத்து, மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சரஸ்வதி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசனை 281 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.