+

2021: இன்ஸ்டாகிராமில் அதிகம் விரும்பப்பட்ட 20 புகைப்படம் மற்றும் வீடியோக்கள்!

இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கில் லைக்குகளை வாங்கி குவிந்த டாப் 20 புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் பட்டியலில் விநோதம், நகைச்சுவை, உருக்கம் என பலவிதமான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கில் லைக்குகளை வாங்கி குவிந்த டாப் 20 புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் பட்டியலில் விநோதம், நகைச்சுவை, உருக்கம் என பலவிதமான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

1. முதலிடத்தில் முட்டை:

Instagram

இன்ஸ்டாகிராமில் 2021ம் ஆண்டிலேயே அதிக லைக்குகளை வாங்கிக் குவித்த புகைப்படம் ஒரு முட்டையுடையது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. ஆம், @world_record_egg என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் வெள்ளை நிற பேக் கிரவுண்டில் பிரவுன் நிற முட்டை ஒன்றின் புகைப்படம் பதிவிடப்பட்டது.


’Let's set a world record together and get the most liked post on Instagram’ என்ற வாக்கியத்தோடு பதிவிடப்பட்ட இந்த முட்டை புகைப்படம் 55 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளைப் பெற்று இன்ஸ்டாம்வாசிகளையே திகைப்பூட்டியுள்ளது. இன்றளவும் இந்த ஒற்றை முட்டை புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.


2. ரொனால்டோவுக்கு இரட்டை குழந்தைகள்:

Instagram

போர்ச்சுகலைச் சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கும், அவரது காதலியான ஸ்பெயினைச் சேர்ந்த மாடல் அழகி ஜோர்ஜியானா ரோட்ரிகஸ் இரட்டை குழந்தைகள் பிறக்கப்போவதாக கிறிஸ்டியானோ வெளியிட்ட புகைப்படம் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.


தங்களுக்கு இரட்டைக் குழந்தைகள் உறுதியானதை ரொனால்டோவும், ஜோர்ஜியானாவும் ஸ்கேன் புகைப்படத்துடன் தனது ரசிகர்களுக்கு இன்ஸ்டாகிராமில் அறிவித்தனர். 32 மில்லியன் லைக்குகளைப் பெற்ற அந்த புகைப்படம் இன்ஸ்டாகிராமில் அதிகம் லைக் செய்யப்பட்ட புகைப்படங்களில் 2வது இடத்தை பிடித்துள்ளது.

3.எக்ஸ்.எக்ஸ்.எக்ஸ் டெண்டசியன் கடைசி பதிவு:

Instagram

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகரும், பாடலாசிரியருமான டுவெய்ன் ஒன்ஃரொய் மர்ம நபரால் 2018ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார். எக்ஸ்.எக்ஸ்.எக்ஸ் டெண்டசியன் என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் அவர் முதலும், கடைசியுமாக பதிவிட்ட ஒற்றை புகைப்படம் இதுவரை 27 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளை பெற்று வருகிறது.


4.அமெரிக்க பாடகியின் திருமணப் புகைப்படம்:

Instagram

பிரபல அமெரிக்க பாடகி மற்றும் நடிகையான அரியானா கிராண்டே மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலதிபரான டால்டன் கோம்ஸ் இருவருக்கும் கடந்த மே மாதம் 15ம் தேதி திருமணம் நடைபெற்றது. இதில் டாப் ஆங்கிளில் இளம் ஜோடி மகிழ்ச்சியாக இருக்கும் தருணத்தில் கிளிக் செய்யப்பட்ட க்யூட் போட்டோ, 26 மில்லியன் லைக்குகளை பெற்று 4வது இடத்தை பிடித்துள்ளது.

5. மாடல் அழகிக்கு இரண்டாவது குழந்தை:

Instagram

அமெரிக்காவைச் சேர்ந்த டிவி நடிகையும், மாடல் அழகியுமான கைலி ஜென்னர் தனக்கு இரண்டாவது குழந்தை பிறக்கப்போவதை வீடியோவாக பதிவிட்டிருந்தார். இந்த பதிவை இதுவரை 15 கோடிக்கும் அதிமானவர்களால் லைக்கு செய்யப்பட்டதை அடுத்து 5வது இடம் பிடித்துள்ளது.


6. கோல்டன் கலர் முடிக்கு குவிந்த லைக்குகள்:

Instagram

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகியான பில்லி எலிஷ் முதன் முறையாக தனது பொன்னிற தலைமுடியுடன் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களால் கவரப்பட்டு 23 மில்லியன் லைக்குகளை குவித்தது.

7,9,10 அடுத்தடுத்து ஆக்கிரமித்த மெஸ்ஸி:

Instagram

அர்ஜெண்டினாவின் (Argentina) நட்சத்திரக் கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி (Lionel Messi), பார்சலோனா அணியுடன் தனக்கு இருந்த 21 ஆண்டு கால உறவை முறித்துக்கொண்டு, பாரிஸ் செயிண்ட் அணியில் இணைந்தார். இதுகுறித்து மெஸ்ஸி வெளியிட்ட அறிவிப்பு 22 மில்லியன் லைக்குகளுடன் 7வது இடம் பெற்றுள்ளது.


தென் அமெரிக்காவில் மிகப்பிரபலமான கோப்பா அமெரிக்கா கால்பந்துப் போட்டியின் சாம்பியன் பட்டத்தை 28 ஆண்டுகளுக்குப்பின் அர்ஜென்டினா அணி மீண்டும் கைப்பற்றியது. அந்த வெற்றி கோப்பையுடன் மெஸ்ஸி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் 22 மில்லியன் லைக்குகளைப் பெற்றதோடு, 9வது இடத்தையும் பிடித்துள்ளது.


பார்சிலோனா கால்பந்தாட்ட கிளப் அணியில் இருந்து கண்ணீர் மல்க விடைபெற்றார் கால்பந்து விளையாட்டின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி. இதுதொடர்பாக பிரஸ் மீட் புகைப்படங்களுடன் உருக்கமான மெஸ்லி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு, உலக ரசிகர்களால் 21 மில்லியன் லைக்குகளைப் பெற்று 10வது இடத்தில் உள்ளது.


8. ‘வோக்’ இதழின் அட்டைப்படம்:

Instagram

பிரிட்டனின் பிரபல 'வோக்' மாத இதழுக்காக தனது அழகிய வெள்ளை நிறக் கூந்தலுடன் செம்ம ஸ்டைலாக அமெரிக்க பாப் பாடகி பில்லி எலிஷ் நடத்திய போட்டோ ஷூட் 22 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை கவர்ந்திழுத்து 8வது இடத்தில் உள்ளது.

முதல் 10 இடங்களை பார்த்தாகிவிட்டது. அடுத்து உலக அளவில் கவனம் ஈர்த்த, கலக்க வைத்த சில புகைப்படங்களையும் அவை பெற்றுள்ள லைக்குகளையும் பார்க்கலாம்...

4. ‘அவெஞ்சர்ஸ்’ ரசிகர்களை அதிர வைத்த மரணம்:

Instagram

மார்வெல் சூப்பர்ஹீரோ கதாபாத்திரமான 'பிளாக் பாந்தர்' ரோலில் நடித்த சட்விக் போஸ்மேன் புற்றுநோய் காரணமாக 43 வயதில் மரணமடைந்தார். புற்றுநோயுடன் போராடி வந்த அவர், வீட்டிலேயே மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் அதிர்ச்சிகரமான தகவலை கடந்த ஆண்டு வெளியிட்டனர்.


உலகம் முழுவதும் உள்ள மார்வெல் ரசிகர்கள் கனத்த இதயத்துடன் பகிர்ந்து கொண்ட இந்த செய்தி 19 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளை பெற்றது.

6.தாய் அணிக்கு திரும்பி கால்பந்து பாட்ஷா:

Instagram

கால்பந்து உலகின் சூப்பர் ஸ்டாரான கிறிஸ்டியானோ ரொனால்டோ 2018 ஆம் ஆண்டு இத்தாலியின் ஜூவண்டஸ் கால்பந்து கிளப்பில் இணைந்தார் ரொனால்டோ. இந்நிலையில் அந்த அணியில் ஓராண்டு ஒப்பந்தம் இருக்கும் போதே கடந்த ஆகஸ்ட் மாதம் ரொனால்டோ, தன்னை சீராட்டி, பாராட்டி வளர்த்த மேன்செஸ்டர் யுனைடெட் அணிக்கே திரும்பினார். இதுகுறித்து உருக்கமான பதிவுடன் ரொனால்டோ வெளியிட்ட புகைப்படம் 19 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றது.


17.டிக்டாக்கர் கேபி லேம் வீடியோ:

Instagram

கொரோனாவால் வேலை இழந்து, எதேச்சையாக டிக்-டாக்கில் பொழுதுபோக்க வந்து கோடீஸ்வரரான 21 வயதான கேபி லேம்-யை தெரியாதவர்களே இருக்க முடியாது. டிக்-டாக்கிலேயே அதிக ஃபாலோயர்களைக் கொண்ட இரண்டாவது நபரான இவரது, இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். பெரும்பாலான வீடியோக்களில் அவர் பேசுவதே கிடையாது, முகப்பாவங்கள் வழியாகவே ஈஸியாக கவர்ந்துவிடுகிறார்.


அப்படி கீழே விழுந்த கார் சாவியை எடுக்க கருவி கண்டுபிடிக்கபட்டுள்ளதை கேலி செய்யும் விதமாக கேபி லேம் வெளியிட்ட வீடியோ இன்ஸ்டாகிராமில் 19 மில்லியனுக்கும் அதிகமானவர்களால் லைக் செய்யப்பட்டுள்ளது.


20. கடைசி இடத்திலும் பில்லி எலிஷ்:

Instagram

6,8, 15 ஆகிய இடங்களைப் பிடித்த அமெரிக்க பாடகி பில்லி எலிஷ் தான் 20வது இடத்திலும் உள்ளார். தூங்கி எழுந்தது போல் பில்லி எலிஷ் வெளியிட்ட போட்டோ ஒன்று 20வது இடத்தை பிடிக்கும் அளவிற்கு லைக்குகளை பெற்றுள்ளது. "என்னடா இது இதுக்கு எல்லாம் இவ்வளவு லைக்கா" என சலித்துக்கொள்ளும் அளவிற்கு பில்லி எலிஷின் இந்த போட்டோவுக்கு 18 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகள் என்றால் பாத்துக்கோங்க.

facebook twitter