+

ஊரக மகளிர் ஸ்டார்ட்-அப்`க'ளை ஊக்குவிக்க 'TN-Rise' நிறுவனம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைப்பு!

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை மேம்படுத்தும் வகையில் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், கிராமப்புற பெண்களின் முன்னேற்றம் என்பது மிக மிக முக்கியமானது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை: TN-RISE எனும் 'தமிழ்நாடு ஊரக தொழில் காப்பு மற்றும் – புத்தொழில் உருவாக்கு நிறுவனத்தை' இளையோர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

'வாழ்ந்து காட்டுவோம்' திட்டத்தின் கீழ் மகளிர் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை மேம்படுத்தும் வகையில் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், கிராமப்புற பெண்களின் முன்னேற்றம் என்பது மிக மிக முக்கியமானது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

மகளிர் தொழில் முனைவோர் நலன் கருதி அவர்களுக்குத் தேவையான தொழில் உதவிகளை வழங்கும் வகையில் புதிய திட்டம் தொடங்கப்படும் என்று கடந்த ஆண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்து இருந்தார்.

TN Rise

TN-RISE நிறுவனமானது அரசின் ஒரு அங்கமாக, உலக வங்கியின் ஆதரவுடன் தொடங்கப்பட்டு, தனியார் நிதி நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், சிறுகுறு தொழில் அமைப்புகள், உற்பத்தி தொழிற்சாலைகள், கட்டுமான தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில் அமைப்புகளுடன் கூட்டுறவு அமைத்துச் செயல்படும் நிறுவனமாகும்.

குறிப்பாக மகளிர் தொழில் முனைவோர் இதன் மூலம் அதிக கவனம் பெறுவார்கள். TN-RISE நிறுவனத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். அந்த நிறுவனத்தின் முத்திரை இலச்சினை, அதற்கான இணையதளம் ஆகியவற்றை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கினார்.

சென்னை, கிண்டி தொழிற்பேட்டையில் அமைந்திருக்கும் இந்த அலுவலகத்தில் அனைத்து நவீன வசதிகளையும் உள்ளடக்கிய வகையில் கலைநயத்துடன் மகளிர் தொழில் முனைவோருக்கு தேவையான பிரத்யேக வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த மையம், தற்போதுள்ள தொழில் காப்பு மையங்களை (Business Incubation Centers) எளிதில் அணுக இயலாத ஊரக, நகர்ப்புர மகளிர் நடத்தும் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான உயர் நிலை சேவைகளை வழங்குவதன் மூலம் மாநிலத்தின் தொழில் வணிக சூழலில் மகளிர் தொழில் முனைவோருக்கும் மற்ற தொழில் முனைவோருக்கும் உள்ள இடைவெளியை குறைக்கும் வகையில் செயல்படும்.

இந்த தொடக்க நிகழ்வின் போது, TN-RISE நிறுவனத்துடன் ஸ்விக்கி, ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட பிரபல நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பதிவு செய்துள்ளன.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியில் பேசும்போது,

"பெண்கள் முன்னேற்றம் அடையாமல் எந்த ஒரு நாடும் முன்னேற்றம் அடைய முடியாது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் பெண்கள் வளர்ச்சி குறித்து யோசிக்காத போது பெண்களைப் பற்றி யோசித்தது தமிழ்நாடு. அதனை யோசித்தவர் பெரியார். மகளிர் வேலைக்குச் செல்கிறார்கள் என்ற நிலையை மாற்றி, தொழில் முனைவோராக உருவாக்கிட இந்த திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது," என்றார்.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் TN RISE நிறுவனத்தை இன்று தொடங்கி வைத்த நிகழ்வில், தொழில் நிறுவனங்களை ஆரம்பிக்கும் மகளிருக்கு வழிகாட்டுதல்களையும் – ஆலோசனைகளையும் வழங்கும் வகையில், Flipkart , Hp, Start Up Tamil Nadu உள்ளிட்ட நிறுவனங்களுடன் TN-RISE நிறுவனம் சார்பில்… pic.twitter.com/xqSHeB67N8

— Udhay (@Udhaystalin) July 2, 2024 " data-type="tweet" align="center">

இந்தியாவில் மகளிரால் நடத்தப்படும் தொழில் நிறுவனங்களில் 13.5 சதவிகிதம் தமிழ்நாட்டில் இருக்கிறது.‌ மகளிருக்கு உறுதுணையாக இந்த TN-RISE நிறுவனம் இருக்கும். தொழில் செய்வதற்கு ஏற்ற நவீன கட்டமைப்புடன் இந்த நிறுவனம் இருக்கும். மகளிர் தொழில் முனைவோருக்கான உதவிகள் அனைத்தையும் செய்யவே இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.

TN Rise
"இதன் மூலம் ஏராளமான தொழில் முனைவோர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் பயன்பெறுவார்கள். உலக அளவில் புகழ்பெற்ற பல நிறுவனங்களிடம் இந்த மையம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளவிருக்கிறது. மகளிர் தேவைகளுக்கு அனைத்து உதவிகளையும் செய்து, உலக அளவில் தொழிலதிபர்களாக உருவாக்கும் முயற்சியில் TN RISE நிறுவனம் இருக்கும். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக தொழில் முனைவோர்கள் தொழிலதிபர்கள் இருக்கிறார்கள் என்ற நிலையை உருவாக்க பாடுபடுவோம்." என்றார் உதயநிதி ஸ்டாலின்.

இவ்வாறு பேசினார் உதயநிதி ஸ்டாலின்.

facebook twitter