+

நகைச்சுவையை போராட்டத்தின் கருவியாக்கிய மாற்றுத்திறனாளி ஸ்டாண்ட்-அப் காமெடியன் ஸ்வேதா!

"எனது தேவைகளை மனதில் கொண்டு வடிவமைக்கப்படாத விஷயங்களை நான் ஏன் பயன்படுத்த வேண்டும் அல்லது ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்?" என்று கோபமாக கேள்வி எழுப்புகிறார் ஸ்டாண்ட் அப் காமெடிவழி மாற்றுதிறனாளிகளின் குரலாக ஒலிக்கும் மாற்றுதிறனாளி ஸ்வேதா.
"எனது தேவைகளை மனதில் கொண்டு வடிவமைக்கப்படாத விஷயங்களை நான் ஏன் பயன்படுத்த வேண்டும் அல்லது ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்?" என்று கோபமாக கேள்வி எழுப்புகிறார் ஸ்டாண்ட் அப் காமெடியனும் மாற்றுதிறனாளிகளின் குரலாக ஒலிக்கும் ஸ்வேதா.

ஸ்வேதா மந்த்ரியின் வாழ்க்கையில், எதிர்பாராத விதமாக ஸ்டாண்ட்-அப் காமெடி நுழைந்தாலும், அதனை மாற்றத்திற்கான கருவியாக்கிக் கொண்டார். ஏனெனில், 2014ம் ஆண்டில், உடல் குறைபாடு உள்ளவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துக்காட்டும் ஒரு திரைப்படத்தை உருவாக்கினார்.

ஆனால், வீடியோவின் உள்ளடக்கத்தினை பார்வையாளர்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற சூழல் இருந்தும் அவர் ஏன் புகார் செய்கிறார் என்று மக்கள் கேள்வி எழுப்பினர். இந்த அனுபவம், உடல்ஊனமுற்றவர்கள் குறித்து மக்களுக்கு இருக்கும் தவறான புரிதலும், அவர்களது மனநிலையையும் புரிந்து கொண்டார்.

உடல் குறைபாடுள்ளவர்களுக்கான திட்டங்கள், குழுவிவாதங்கள் என பல முயற்சிகளில் தீவிரமாகப் பணியாற்றினார். அப்போது தான் அவரது கருத்துக்களை முன்வைக்க ஸ்டாண்ட்-அப் காமெடி சரியான தேர்வாகத் தோன்றியது. குறைபாடுகள் பற்றி மக்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்ற அவரது விருப்பமும் கலை வடிவத்தின் மீதான ஆர்வமும் அவரை இரண்டையும் இணைக்க வழிவகுத்தது. இன்று ஸ்டாண்ட் அப் காமெடியனாக கலக்கும் ஸ்வேதா, மாற்றுதிறனாளிகளின் நலன் குறித்தும் தீவிரமாய் செயலாற்றி வருகிறார்.

swetha

ஸ்டாண்ட்அப் காமெடி வழி

மாற்றுத்திறனாளிகளின் குரலாக ஒலிக்கும் ஸ்வேதா...

'ஸ்பைனா பிஃபிடா' என்று அழைக்கப்படும் முதுகெலும்பு மற்றும் முதுகுத் தண்டு சரியாக வளர்ச்சி பெறாத நிலையில் பிறந்தவர். 'ஸ்பைனா பிஃபிடா' அல்லது 'ஸ்பிளிட் ஸ்பைன்' என்பது கர்ப்பக் காலத்தில் முதுகுத்தண்டு மற்றும் முதுகுத் தண்டைச் சுற்றியுள்ள சவ்வுகள் முழுமையடையாமல் மூடப்படும் ஒரு பிறப்பு குறைபாடு ஆகும். இதன் விளைவாய், அவரது இடது காலை இயக்க முடியவில்லை.

இருப்பினும், தொடர் சிகிச்சை மற்றும் பிசியோதெரபி மூலம் அவர் இப்போது 25 முதல் 30 சதவீதம் நடந்து வருகிறார். அவருக்கு 7 வயது இருக்கும் வரை உதவியாளரின் துணையோடு தான் பள்ளிக்கு சென்று வந்துள்ளார். அதன் பிறகு, ஊன்றுகோல் மற்றும் கால் பிரேஸ்களை பயன்படுத்தத் தொடங்கினார். முன்பு, அவரால் 5 முதல் 7 நிமிடங்கள் வரை கால் பிரேஸ்கள் இல்லாமல் நிற்க முடியும். இப்போது அவரால் ஒரு நிமிடம் மட்டுமே நிற்க முடியும்.

ஒருபுறம் உடல்ரீதியான சிரமங்களை மாற்றுதிறனாளிகள் எதிர்கொள்கையில், மறுபுறம் எங்கு சென்றாலும் சரியான உள்கட்டமைப்பு இன்றி இருப்பது அவர்களது சவால்களை அதிகரிக்கிறது. ஸ்வேதா கல்லுாரியில் சக்கர நாற்காலியை பயன்படுத்தி வந்துள்ளார். ஆனால், கல்லுாரி வளாகத்தில் பல இடங்களில் சக்கர நாற்காலி செல்வதற்கான சரிவுகள் இல்லை. அந்த பகுதிகளுக்கு செல்லாமல் தவிர்த்துவிடுவேன் என்று வருந்தும் ஸ்வேதா, இன்றும் கழிப்பறையை பயன்படுத்துவதில் பல இடங்களில் சவால்களை எதிர்கொள்வதாக தெரிவித்தார்.

"உடல் குறைப்பாட்டுடன் இருப்பதால் அன்றாட வாழ்க்கையை நகர்த்திடக் கூட நிறைய திட்டமிடல்கள் தேவைப்படுகிறது. ஏனெனில், சமூகத்தில் பெருவாரியான இடங்கள் மாற்றுதிறனாளிகளுக்கு ஏற்றவாறு கட்டமைக்கப்படவில்லை. காமெடி நிகழ்ச்சிகளுக்கு செல்கையில் சரியான தரைத்தளம், கழிப்பறை வசதி இருக்கிறதா, லிஃப்ட் வசதி உள்ளதா என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்வேன். சரியான கட்டமைப்பில் இல்லையென்றால், அந்நிகழ்ச்சிகளை தவிர்த்துவிடுவேன். ஆண்டுகள் பல கழிந்தாலும் இன்றும் நிலைமை பெரிதாக மாறவில்லை," என்கிறார்.

ஊனமுற்றவர்களின் வாழ்க்கையை ஆதரிக்க எங்களிடம் வளங்கள் உள்ளன. இருப்பினும், ஆணாதிக்கத்தைப் போலவே எபிலிசம் எனப்படும் ஊனமுற்றோர் அல்லாதவர்களுக்கு ஆதரவாக பாகுபாடு காட்டப்படுவது சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது.

swetha

மாற்றுத்திறனாளிகள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர விரும்ப மாட்டார்கள் என்ற சமூகத்தின் நம்பிக்கை பொய்யானது. ஊனமுற்றோருக்கு ஏற்ற உள்கட்டமைப்பு இல்லாததால், சமூகத்தில் ஊனமுற்றவர்களின் இயக்கம் குறைவாக உள்ளது. இந்த உடல் மற்றும் உளவியல் தடைகளை உடைக்க எங்களுக்கு ஒரு கூட்டு முயற்சி தேவை, என்று கோபம் கலந்த வருத்தத்துடன் பகிர்ந்தார் அவர்.

ஆரம்ப கால வாழ்க்கை...

இரண்டு பட்டயக் கணக்காளருக்கு மகளாக பிறந்த ஸ்வேதா, அக்கவுண்ட்ஸ், கால்குலேஷனுக்கு மத்தியிலே வளர்ந்தார். ஆனால், CA அவருக்கானது அல்ல என்பது அவருக்கு ஆரம்பத்திலேயே தெரியும். மாறாக, அவர் இசையால் ஈர்க்கப்பட்டார். இருப்பினும், அவர் அதை தொழில் ரீதியாக தொடரவில்லை. பட்டம் பெற்ற பிறகு, புனேவில் உள்ள சிம்பயோசிஸில் எம்பிஏ படிக்கத் தேர்வு செய்தார். அவரது படிப்பை முடித்தவுடன், ஸ்வேதா மும்பையில் உள்ள ஒரு PR நிறுவனத்தில் சேர்ந்தார். ஆனால், அவரை வீட்டை விட்டு வெகுதுாரம் அனுப்ப அவரது பெற்றோர்கள் தயக்க காட்டியுள்ளனர். இறுதியாக, ஸ்வேதா பணிபுரியவிருந்த நிறுவனத்தின் நிறுவனர் அவரது பெற்றோர்களுக்கு அளித்த உறுதியால், அவரை வேலைக்கு செல்ல அனுமதித்தனர்.

மும்பை போன்ற பெருநகரில் உதவிக்கு ஆளின்றி ஒரு மாற்றுத்திறனாளியாக இருப்பது சற்றே கடினமாக இருந்துள்ளது. குறிப்பாக, மழைநாட்களில் அதிக சவால்களை எதிர்கொண்டார். டாக்ஸியை கண்டறிவது, அவரது குடியிருப்புக்குள் செல்வது போன்ற எளிய வேலைகளும் கனமழை காலத்தில் அவருக்கு கடினமாகின. நாளுக்கு நாள் சவால்களும் அதிகரித்தன.

இறுதியாக, ஸ்வேதா வீட்டிற்கே சென்றிட முடிவெடுத்தார். சொந்த ஊருக்கு வந்த பிறகு, அவர் ஒரு ஃப்ரீலான்ஸ் எழுத்தாளராக பணியாற்றத் தொடங்கினார். தொடர்ந்து, சமூகப் பணியிலும் ஈடுப்பட்டு வந்தார். அவரது தோழியுடன் இணைந்து சக்கர நாற்காலியில் பயணிப்பவர்கள் புத்தகக் கடைகள், உணவகங்கள் போன்றவற்றிற்கு எளிதில் செல்வதற்காக சாலையில் சரிவுகளை அமைக்கும் ‘Give Some Space’ என்ற திட்டத்தில் பணிபுரிந்தார்.

2016ம் ஆண்டு வாக்கில், அவரது நகைச்சுவை நடிகர் நண்பர்களை அவருக்காக ஒரு ஸ்கிரிப்ட் எழுதச் சொன்னார். ஆனால், அவர்கள் உள்ளடக்கத்திற்கு நியாயம் செய்ய முடியாது என்று விளக்கி மறுத்துவிட்டனர். மாறாக, அவர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து அவரையே எழுத ஊக்கப்படுத்தினர். அவர்களின் ஆலோசனையைப் பெற்று, ஸ்வேதா ஒரு ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சியில் அவர் எழுதிய ஸ்கிரிப்டுடன் மேடை ஏறினார்.

அந்த நிகழ்ச்சிக்கு அவருக்கு பாசிட்டீவ் ஆன ரெஸ்பான்ஸ் குவிந்தது. அதுவே, இன்று காமெடியனாக கலக்கும் ஸ்வேதாவின் முதல் மேடை. அங்கு தொடங்கி ஒரு ஸ்டாண்ட்அப் காமெடியனாக அவரது பயணத்தைத் தொடக்கினார்.

swetha

மாற்றத்திற்கான பாதை...

ஸ்டாண்ட்-அப் காமெடியனாக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட அவர், உடல் ஊனமுற்றவர்கள் பற்றிய புரிதலை ஏற்படுத்த விழிப்புணர்வை ஏற்படுத்த முதலில் பொதுவெளியில் அதுகுறித்து பேச வேண்டும் என்பதை நம்புகிறார். அதற்காக அவருக்கு கிடைத்த ஆயுதமாகவே ஸ்டாண்ட் அப் காமெடியை பார்க்கிறார். நகைச்சுவையின் வழி மாற்றுத்திறனாளிகளின் குரலாக ஒலித்து வருகிறார்.

ஒரு ஊனமுற்ற பெண்ணாக அவரது தனிப்பட்ட போராட்டங்களை நகைச்சுவையாக மாற்றுகிறார். ‘With This Ability,’ எனும் ஒரு மணிநேர நகைச்சுவை மற்றும் உரையாடல் நிகழ்ச்சியை நடத்துகிறார். அத்துடன் மாற்றுதிறனாளிகள் குறித்த பல்வேறு திட்டங்கள் மற்றும் குழு விவாதங்களையும் அவர் தீவிரமாக பங்கேற்கிறார். குறைபாடுகள் உள்ளவர்களின் தங்குமிட தேவைகளை இயல்பாக்குவதன் அவசியத்தையும் அவர் தொடர்ந்து வலியுறுத்துகிறார்.

swetha
"இயலாமை பற்றி பேசுவது மாற்றத்திற்கான முதல் படி. எனது தேவைகளை மனதில் கொண்டு வடிவமைக்கப்படாத விஷயங்களை நான் ஏன் பயன்படுத்த வேண்டும் அல்லது ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது?" என்று கேள்வி எழுப்புகிறார்.

அவர் உரையாற்றும் தலைப்புகளின் உணர்ச்சிகரமானது என்பதால் அவரது நகைச்சுவைகளைப் பார்த்து மக்கள் சிரிக்காத நேரங்களும் உள்ளன என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார். இருப்பினும், நகைச்சுவை மற்றும் கதைசொல்லலின் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வதன் மூலம், இந்த சவாலை எவ்வாறு வெற்றிகரமாக வழிநடத்துவது என்பதைக் கற்றுக்கொண்டதாக, அவர் கூறினார்.

facebook twitter