இந்தியா ’நெட் ஜீரோ’ எனும் இலக்கை 2070ல் அடைய திட்டமிட்டுள்ள நிலையில், இந்தியர்கள் எத்தனை வேகமான மின்வாகனங்களை ஏற்றுக்கொள்கின்றனர் என்பது முக்கியமாகிறது. இந்த மாற்றத்தை வேகமாக்க, மத்திய அரசு ஃபேம் (FAME) இந்தியா திட்டத்தை கொண்டு வந்து மின்வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்கிறது.
இந்த திட்டத்தின் கீழ், 2023ல் அரசு ரூ.4,807 கோடி செலவிட்டுள்ளது. 2024-25 ல், ரூ.2,671 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில் சில திருத்தங்களும் அறிவிக்கப்பட்டன.
மின்வாகனங்களுக்கு சாதகமான இந்த செயல்களை பார்த்து, அனிருத் ரவி நாராயணன் மற்றும் டி.விநோத் 2019 ல் 'பிஎன்சி மோட்டார்ஸ்' (BNC Motors) நிறுவனத்தை துவக்கினர்.
கோவையைச் சேர்ந்த இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம், மின்சார இருசக்கர வாகனத்தின் அனைத்து பாகங்களையும் தயாரிக்கும் பொறியியல் நிறுவனம் எனும் தனித்துவம் பெற்றுள்ளது.
மின் வாகனங்களுக்கு தேவையான அடிப்படை கட்டுமானம் முதல் பேட்டரி, மின்னணு சாதனங்கள் என எல்லாமே நிறுவனத்தால் சொந்தமாக தயாரிக்கப்படுகிறது.
“எங்கள் சப்ளை செயின் செயல்பாடுகளில் 90 சதவீதம் தமிழகத்தில் உள்ள வகையில் நேர் அடுக்கிலான ஒருங்கிணைப்பே மின்வாகன நிறுவனமாக எங்கள் தனித்தன்மை,”என்று யுவர்ஸ்டோரியுடம் பேசிய பிஎன்சி மோட்டார்ஸ் சி.இ.ஓ நாராயணன் கூறுகிறார்.
2024 நிதியாண்டில் இந்திய மின்வாகன சந்தை ஏற்றம் கண்டு, 1.7 மில்லியன் வாகனங்கள் விற்பனை கண்டிருப்பதாக ஜேஎம்கே ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. மின்வாகன விற்பனையில் இரு சக்கர வாகனங்கள் 55 சதவீதம் மேல் என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இந்நிறுவனம் தயாரிப்பு செயல்முறையில் தீவிர தரக் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பதாக நாராயணம் கூறுகிறார். பேட்டரிகளுக்கு ஒரு லட்சம் கிமீக்கு அல்லது ஐந்தாண்டுக்கு வாரண்டி அளிக்கிறது. மேலும், அடிப்படையான சேஸிஸ் பகுதிக்கு ஏழு ஆண்டு வாரண்டி அளிக்கிறது.
“பயனர்கள் அனுபவத்தை எளிமைப்படுத்துவதே எங்கள் நிறுவனத்தின் நோக்கம். பயனர் நட்பான வடிவமைப்புக்கு முக்கியத்துவம் அளித்து பராமரிப்பு முறையை சீராக்கி, வாகனங்கள் தொழில்நுட்ப மேம்பாடு கொண்டிருப்பதோடு பராமரிக்க எளிதாகவும் அமைவதாக,“ நாராயணன் கூறுகிறார்.
மின்சக்கர வாகன மாடல்கள்
இந்த நிறுவனம், பலவகையான மின் இருசக்கர வாகனங்களை அளிக்கிறது. சாலெஞ்சர் S110, S125 இ-பைக், பர்பெட்டோ ஸ்கூட்டர், பாஸ் NR 150 இபைக் ஆகிய வாகனங்களைக் கொண்டுள்ளது. ரூ.99,900 மற்றும் ரூ. 1,45,000 விலை கொண்ட, சாலஞ்சர் S110, S125 மாடல்கள், நாடு முழுவதும் கிடைக்கின்றன.
தனது மற்ற இ-பைக் ரகங்களை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்ய உள்ளது. பிஎன்சி மோட்டார்ஸ் தனது வாகனங்களை ஜப்பானின் Musashi Seimitsu நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. ஜப்பான் நிறுவனம் ஆட்டோ பாகங்களில் சிறந்து விளங்கும் நிலையில், பிஎன்சி வாகன உருவாக்கம் மற்றும் விநியோகத்தில் கவனம் செலுத்துகிறது.
பாதுகாப்பான பாட்டரிகள்
பிஎன்சி நிறுவனம் சொந்தமாக தயாரிக்கப்பட்ட Etrol பேட்டிரியை அனைத்து வாகனங்களிலும் பயன்படுத்துகிறது. இந்தியாவின் பாதுகாப்பான பேட்டரி என நிறுவனர்கள் கூறுகின்றனர். 300 டிகிரிக்கு மேலான வெப்ப நிலையில் இந்த பேட்டரி தீவிரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. மேலும், மற்ற வகையிலும் தீவிரமாக சோதிக்கப்பட்டுள்ளது.
“IP67 ரேட்டிங் மற்றும் AIS-156 திருத்தம், பேஸ் 2 உள்ளிட்ட அரசு கட்டுப்பாடு விதிகளுக்கு ஏற்ற தன்மை கொண்டிருப்பதால், நிறுவன பேட்டரிகள் துறைக்கான புதிய தர நிர்ணயமாக இருப்பதாக நாராயணன்,“ கூறுகிறார்.
நிறுவனம் பேட்டரி மாற்று நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது மற்றும் தற்போது ஆய்வு நிலையில் இருக்கிறது. ஐந்து நிமிடங்களில் பேட்டரியை மாற்றிவிடமுடியும்.
மேலும், பயண விவரங்கள் மற்றும் பேட்டரி நிலையை கண்காணிப்பதற்கான செயலியையும் நிறுவனம் உருவாக்கி உள்ளது. பிளேஸ்டோர் மற்றும் ஐபோன் ஸ்டோரில் இது கிடைக்கிறது.
இந்த செயலியில், ஆர்சி புத்தகம், காப்பிடு போன்ற ஆவணங்களை சேமித்து வைக்கலாம். பாதுகாப்பை கருத்தில் கொண்டு, விபத்து எச்சரிக்கை, ஜியோ பென்சிங் தகவல்கள் ஆகியவற்றை செயலி கொண்டுள்ளது. இதன் சுற்றுச்சூழல் கண்காணிப்பு அம்சம், கரியமில வாயு வெளியேற்றம் மற்றும் மரங்கள் பாதுகாப்பு எண்ணிக்கையை அறிய உதவுகிறது.
வர்த்தக மாதிரி
ராஜ்ஸ்தானில் ஷோரூம் துவங்கியதன் மூலம் நிறுவனம் வட இந்தியாவில் நுழைந்துள்ளது. தமிழ்நாடு, கேரளா மற்றும் பெங்களூருவில் ஏழு, மூன்று மற்றும் ஒரு டீலர்கள் ஷோரூம் கொண்டுள்ளது.
மேலும், பூனாவில் 120 சதுர அடி நிறுவனத்தால் இயக்கப்படும் ஷோரூமை துவக்கியுள்ளது. மேற்கு மண்டல தலைமையமாக இது செயல்படுகிறது. மகாரஷ்டிரா, கோவா, குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய பகுதிகளில் கவனம் செலுத்தும் இந்த ஷோரூம் வாயில்லாக மாதம் ரூ.30 லட்சம் வருவாய் எதிர்பார்க்கிறது.
மேலும், ஆட்டோ டீலர்கள், வர்த்தகர்களுக்கான மையமாகவும் திகழ்கிறது. ஜெப்டோ, ரேபிடோ, ஜரோஸ் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது.
“பி2பி பங்குதாரர்களுக்கு வாகனங்கள் விற்பனை செய்து, நிதி ஏற்பாடு மற்றும் பராமரிப்பு சேவை அளிக்கிறோம்,” என்கிறார் நாராயணன்.
ஹீரோ, ஹோண்டா, ஓலா, பிகாஸ் உள்ளிட்ட நிறுவனங்களுடன் பிஎன்சி மோட்டார் போட்டியிடுகிறது. தமிழகம், கேரளா, மற்றும் கர்நாடாகவில் வலுவாக உள்ள நிறுவனம், குஜராத், மகாராஷ்டிரா, ஒடிஷாவுக்கு விரிவாக்கம் செய்துள்ளது.
எதிர்காலம்
நிறுவனம் இதுவரை. பி சுற்று வரை ரூ.150 முதல் 200 கோடி வரை நிதி திரட்டியுள்ளது. Musashi முன்னணி முதலீட்டாளராக உள்ளது. வருங்காலத்தில், தில்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப், அரியானா உளிட்ட மாநிலங்களில் 90 புதிய மையங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளது.
“தேசிய அளவில் 300 விற்பனை நிலையங்களை திட்டமிட்டுள்ளோம். இது 1500 வேலைவாய்ப்புகளை உருவாக்கும்” என்கிறார் நாராயணன். EBITDA நோக்கில் இந்த நிதியாண்டில் லாபத்தை எதிர்நோக்குகிறோம். நான்கு ஆண்டு ஆய்வு செய்து வலுவான சேவையை உருவாக்கியுள்ளோம். இனி வளர்ச்சிக்கான காலம்,“ என்கிறார்.
ஆங்கிலத்தில்: திரிஷா மேதி, தமிழில்: சைபர் சிம்மன்
ஏஐ மூலம் காட்சி வடிவமைப்புகளை உருவாக்க உதவும் கோவை தொழில் முனைவோர்களில் ஸ்டார்ட்-அப் Sivi
Edited by Induja Raghunathan