காஷ்மீர் தால் ஏரியில் படகுச் சவாரி: உபர் தொடங்கியுள்ள புதிய சேவை!

12:36 PM Dec 03, 2024 | muthu kumar

இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் தால் ஏரியில், உல்லாசப் படகுச் சவாரி சேவையை Uber திங்களன்று தொடங்கியது.

சேவையைப் பயன்படுத்துபவர்கள் குறைந்தது 12 மணிநேரத்திற்கு முன்னதாகவோ, 15 நாட்களுக்கு முன்னதாகவே முன்பதிவு செய்தால், ஏரியின் பாரம்பரிய ஷிகாரா மரப் படகுகளில் பயணம் செய்யலாம் என்று உபெர் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சேவையை ஏற்கனவே லண்டன் மற்றும் வேறு சில நகரங்களில் நீர் போக்குவரத்து சேவைகளை வழங்குகிறது, ஆனால் இது இந்தியாவில் முதல் முறையாகும்.

தால் ஏரியில் சுமார் 4,000 ஷிகாராக்கள், பெரும்பாலும் அலங்கரிக்கப்பட்டவையாக உள்ளன. இது பயணிகள் மத்தியில் பிரபலம்.

Uber இந்த சவாரியில் வாடிக்கையாளர்களை ஷிகாரா ஆபரேட்டர்களுடன் சேர்த்து வைக்குமே தவிர, அதன் பயன்பாட்டின் மூலம் முன்பதிவு செய்யும் சவாரிகளுக்கு கட்டணம் வசூலிக்காது. பயணிகள் செலுத்தும் படகு டிக்கெட் அனைத்தும் ஷிகாரா ஆபரேட்டரிடம் சென்று சேரும் என உபர் தெரிவித்துள்ளது.

ஷிகாரா ஆபரேட்டர்கள் தங்கள் துறைக்கு உபெரின் நுழைவு குறித்து வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளனர். சிலர் இப்போது சுற்றுலாப் பயணிகள் சவாரிகளை முன்கூட்டியே முன்பதிவு செய்ய முடியும் என்பதால் இது அவர்களின் வணிகத்தை மேம்படுத்தும், என்று கூறினாலும் வேறு சிலரோ இதன் மூலம் சிறு வித்தியாசம் ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், ஷிகாரா ஆபரேட்டர்களில் சிலர் கூறும்போது எங்களுக்கென்றே பிரத்யேக வாடிக்கையாளர்கள் உள்ளனர், எனவே உபர் வந்து ஒன்றும் பெரிய வர்த்தக முன்னேற்றம் பெரிய அளவில் ஏற்படப்போவதில்லை, என்கின்றனர்.