Gold Rate Chennai: ஒரே நாளில் தங்கம் விலை கிடுகிடு உயர்வு - 58 ஆயிரத்தை எட்டுமா தங்கம்?

11:18 AM Dec 10, 2024 | muthu kumar

செவ்வாய்க்கிழமையான இன்று (10-12-2024) சென்னையில் ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத்தங்கங்களின் விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளன. ஆபரணத்தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.600 உயர்ந்தது.

தங்கம் விலை நிலவரம்: செவ்வாய்க்கிழமை (10.12.2024):

சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.75 உயர்ந்து 7,205 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.82 உயர்ந்து 7,860 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.57,640 ஆகவும் விற்பனையாகி வருகின்றன.

சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.750 உயர்ந்து ரூ.72,050 ஆகவும் 24 காரட் சுத்தத்தங்கம் ஒரு கிராம் விலை ரூ.820 உயர்ந்து ரூ.78,600-ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.656 உயர்ந்து ரூ.62,880 என்றும் விற்பனையாகின்றன.

வெள்ளி விலையும் கடும் உயர்வு:

வெள்ளி விலை செவ்வாய்க்கிழமையான இன்று (10-12-24) 1 கிராம் விலை ரூ.4 அதிகரித்து 104 என்றும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,04,000 என்றும் உள்ளன.

காரணம்:

உலகப் பொருளாதார நிலை அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகித எதிர்ப்பார்ப்பு, ரூபாய்க்கு நிகரான டாலர் மதிப்பு அதிகரித்து வருவதாலும், உலக அளவில் தங்கம் விலை அதிகரித்திருப்பதாலும் இன்று தங்கம் விலை இந்தியாவிலும் கடுமையாக உயர்ந்துள்ளன.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,205(மாற்றம்ரூ.75அதிகம்)

> 22 காரட் தங்கம்8கிராம்-ரூ.57,640(மாற்றம்ரூ600அதிகம்)

> 24 காரட் தங்கம்1கிராம்-ரூ.7,860(மாற்றம்ரூ.82அதிகம்)

> 24 காரட் தங்கம்8கிராம்-ரூ.62,880(மாற்றம்ரூ656அதிகம்)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,205(மாற்றம்ரூ.75அதிகம்)

> 22 காரட் தங்கம்8கிராம்-ரூ.57,640(மாற்றம்ரூ600அதிகம்)

> 24 காரட் தங்கம்1கிராம்-ரூ.7,860(மாற்றம்ரூ.82அதிகம்)

> 24 காரட் தங்கம்8கிராம்-ரூ.62,880(மாற்றம்ரூ656அதிகம்)