+

Stock News: பெரிய ஏற்றமோ இறக்கமோ இல்லாமல் தொடங்கிய பங்குச் சந்தை - ஐடி பங்குகள் உயர்வு!

இந்திய பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வியாழக்கிழமையான இன்று (12-12-2024) தட்டையாக பெரிய மாற்றமின்றி தொடங்கியுளன. சென்செக்ஸ் தொடக்க நிலவரங்களின் படி வெறும் 13 புள்ளிகள் ஏற்றம் காண தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 12 புள்ளிகள் பின்னடைவுடன் தொடங்கியுள்ளன. மும்பைப் பங்க

இந்திய பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வியாழக்கிழமையான இன்று (12-12-2024) தட்டையாக பெரிய மாற்றமின்றி தொடங்கியுளன. சென்செக்ஸ் தொடக்க நிலவரங்களின் படி, வெறும் 13 புள்ளிகள் ஏற்றம் காண தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 12 புள்ளிகள் பின்னடைவுடன் தொடங்கியுள்ளன.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை 10:07 மணி நிலவரப்படி, 81,539.44 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு 24,630.25 புள்ளிகளாகவும் உள்ளன.

நிப்டி பேங்க் குறியீடு இன்று 40 புள்ளிகள் சரிய நிப்டி ஐடி குறியீடு 576 புள்ளிகள் உயர்ந்துள்ளது. பிஎஸ்இ ஸ்மால் கேப் 210.49 புள்ளிகள் சரிவு கண்டது. ஐடி பங்குகள் ஏற்றம் காண பொதுத்துறை வங்கிப்பங்குகள் பின்னடைவு கண்டுள்ளன.

காரணம்:

அமெரிக்க டாலர் மதிப்பு கூடி வருகிறது. தங்கம் விலையும் 2 வாரத்தில் இல்லாத உயர்வை எட்டியது. அமெரிக்க பெடரல் ரிசர்வின் 3வது ரேட் கட் எதிர்நோக்கி முதலீட்டாளர்கள் காத்திருப்பதால் பங்குச் சந்தை பெரிய மாற்றங்களைச் சந்திக்காமல் ஃபிளாட்டாகத் தொடங்கியுள்ளது.

Stock Market

ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:

ஹிண்டால்கோ

டெக் மகீந்திரா

சிப்ளா

சன் பார்மா

இறக்கம் கண்ட பங்குகள்:

அல்ட்ரா டெக் சிமெண்ட்

எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ்

ஏஷியன் பெயிண்ட்ஸ்

டைட்டன் கம்பெனி

டிரெண்ட்

இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று டாலர் ஒன்றுக்கு இன்று ரூ.84.87ஆக உள்ளது.

facebook twitter