+

Stock News: பங்குச் சந்தை தொடர் சரிவு; சென்செக்ஸ் 500 புள்ளிகள், வங்கிப் பங்குகள் சரிவு!

இந்திய பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் செவ்வாய்க்கிழமையான இன்று (17-12-2024) சரிவைச் சந்தித்து வருகின்றன. சென்செக்ஸ் தொடக்க நிலவரங்களின் படி சுமார் 500 புள்ளிகள் சரிந்து அதிர்ச்சித் தொடக்கம் கண்டது. நிப்டி 140 புள்ளிகளுக்கும் மேல் சரிந்துள்ளது. மும்பைப் பங்குச் சந்தையின் சென

இந்திய பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் செவ்வாய்க்கிழமையான இன்று (17-12-2024) சரிவைச் சந்தித்து வருகின்றன. சென்செக்ஸ் தொடக்க நிலவரங்களின் படி, சுமார் 500 புள்ளிகள் சரிந்து அதிர்ச்சித் தொடக்கம் கண்டது. நிப்டி 140 புள்ளிகளுக்கும் மேல் சரிந்துள்ளது.

மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை 10:11 மணி நிலவரப்படி, 480 புள்ளிகள் சரிந்து 81,268.53 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு 149 புள்ளிகள் சரிந்து 24,519.35 புள்ளிகளாகவும் உள்ளன.

நிப்டி பேங்க் குறியீடு இன்று 355 புள்ளிகள் சரிய நிப்டி ஐடி குறியீடு 44 புள்ளிகளும் பிஎஸ்இ ஸ்மால் கேப் 181 புள்ளிகளும் சரிவு கண்டன. செக்டார்களில் வங்கிப் பங்குகள் பின்ண்டைவு காண, மீடியா, ரியல் எஸ்டேட் ஏற்றம் கண்டுள்ளன.

காரணம்:

அமெரிக்க டாலர் மதிப்பு வலுவாக இருப்பதால் மெட்டல் துறைப் பங்குகள் கடும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. இன்று மெட்டல் பங்குகள் மற்றும் வங்கிகள் உள்ளிட்ட நிதித்துறைப் பங்குகள் பின்னடைவினால் பங்குச் சந்தை சரிவைச் சந்தித்துள்ளன.

sensex

ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:

சிப்ளா

டாடா மோட்டார்ஸ்

ஓ.என்.ஜி.சி.

டைட்டன் கம்பெனி

பஜாஜ் பைனான்ஸ்

இறக்கம் கண்ட பங்குகள்:

ஸ்ரீராம் பைனானஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ஹிண்டால்கோ

பார்தி ஏர்டெல்

பிரிட்டானியா

இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று பின்னடைவு கண்டு டாலர் ஒன்றுக்கு இன்று ரூ.84.91ஆக உள்ளது.

facebook twitter