+

2024ல் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படம் எது? புக்மைஷோ ஆண்டு அறிக்கையில் தகவல்!

இந்த ஆண்டின் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படமாக தெலுங்கு நட்சத்திரம் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 – தி ரூல் விளங்குவதாக புக்மைஷோ நிறுவனத்தின் ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த ஆண்டின் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படமாக தெலுங்கு நட்சத்திரம் அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா 2 தி ரூல்' விளங்குவதாக புக்மைஷோ நிறுவனத்தின் ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது.

2024ம் ஆண்டு விடைபெற உள்ள நிலையில், பொழுதுபோக்கு, இசை சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் ஆண்டின் முக்கிய நிகழ்வுகளை திரும்பி பார்க்கும் வகையில் இணைய பொழுதுபோக்கு சேவை நிறுவனமான புக்மைஷோ அதன் ஆண்டு அறிக்கையை ’புக்மைஷோ த்ரோபேக்’ (#BookMyShowThrowback) எனும் பெயரில் வெளியிட்டுள்ளது.

திரைப்படத்துறையில் முக்கிய மைல்கற்கள், நேரடி நிகழ்ச்சிகளில் முக்கிய நினைவுகள், ஸ்டிரீமிங் சேவை தொடர்பான புள்ளிவிவரங்கள் உள்ளிட்டவை இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. இந்திய ரசிகர்களின் பொழுதுபோக்கு ஆர்வத்தை பல விதங்களில் படம் பிடித்து காட்டுவதாக அமைகிறது.

pushpa

புஷ்பா 2 சாதனை

இந்த ஆண்டை பொறுத்தவரை பெரும் எதிர்பார்ப்பை ஏற்பத்திய தெலுங்கு நட்சத்திரம் அல்லு அட்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த புஷ்பா 2 – தி ரூல் திரைப்படம் அதிகம் பார்க்கப்பட்ட படமாக விளங்குகிறது. இந்த படம் 10.8 லட்சம் தனி பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

மேலும், நவம்பர் 1ம் தேதி புக்மைஷோர் தளத்திற்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்த நாளாக அமைந்தது. அன்றைய தினம் 2.3 மில்லியன் டிக்கெட்கள் 24 மணி நேரத்தில் விற்பனை ஆயின.

பழைய நினைவுகள்

திரைப்பட ரசிகர்கள் புதிய படங்களுக்கு ஆதரவு அளித்தது போலவே பழைய படங்களையும் விரும்பி பார்த்துள்ளனர். கல் ஹோ நா ஹோ, ராக்ஸ்டார், லைலா மஜ்னு ஆகிய பாலிவுட் திரைப்படங்கள் மறு வெளியீட்டில் நல்ல வரவேற்பு பெற்றன.


சர்வதேச அளவில், டெட்பூல் & வால்வரைன், காட்ஜில்லா எக்ஸ் காங்- தி நியூ எம்பயர் உள்ளிட்ட படங்கள் வரவேற்பை பெற்றன. இந்திய திரைப்பட ரசிகர்களில் ஒருவர், 221 திரைப்படங்களை பார்த்து சாதனை படைத்துள்ளார்.

நேரடி நிகழ்ச்சிகள்

நேரடி இசை நிகழ்ச்சிகளை பொருத்தவரை, 319 நகரங்களில் 30,687 நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட்களை புக்மைஷோ வழங்கியது. நேரடி பொழுதுபோக்கு இந்தியாவில் 18 சதவீதம் வளர்ச்சி அடைந்தது.

நிக் ஜோனாஸ் மற்றும் ஜோனாஸ் பிரதர்ஸ் இசை நிகழ்ச்சி ஆண்டின் துவக்கத்தில் ரசிகர்களை துள்ளிக்குதிக்க வைத்தது. எட் ஷிரான் மற்றும் திலிஜித் கூட்டு முயற்சி ரசிகர்களை கவர்ந்தது.

இசை சுற்றுலா

இசை சுற்றுலா இந்த ஆண்டின் முக்கிய போக்குகளில் ஒன்றாக அமைந்தது. 4,77,393 ரசிகர்கள் நேரடி இசை நிகழ்ச்சிகளுக்காக பல்வேறு நகரங்களுக்கு பயணம் செய்தனர். இந்தியாவில் கோல்ட்பிளேவின் இசை நிகழ்ச்சி தொடர் 500 மேற்பட்ட நகரங்களில் இருந்து ரசிகர்களை அகமாதாபாத்திற்கு கவர்ந்திழுத்தது.

காந்திநகர், ஷில்லாங், கான்பூர் உள்ளிட்ட இரண்டாம் அடுக்கு நகங்கள் இசை நிகழ்ச்சியில் 62 சதவீத வளர்ச்சி கண்டன.

சிறிய பட்ஜெட் படங்கள்

இந்த ஆண்டு கவனத்தை ஈர்த்தவை பெரிய பட்ஜெட் படங்கள் மட்டும் அல்ல, மஞ்சுமல் பாய்ஸ், ஆவேஷம், லபாடா லேடீஸ், மெரி கிறிஸ்துமஸ் போன்ற சிறிய பட்ஜெட் படங்கள், நல்ல கதை மற்றும் சுவாரஸ்யமான கதை சொல்லலால் வெற்றி பெற்றன.

நைகாலாந்த் 2024, வான்கா 360 உள்ளிட்ட படங்களும் கவர்ந்தன.

புக்மைஷோ ஸ்டிரீம் சேவை 107,023 மணி நேர உள்ளடக்கத்தை வழங்கியது. 446 புதிய படங்கள் வழங்கப்பட்டன. டியூன் பார்ட் 2 பெரும் வரவேற்பை பெற்றது. 8,87,166 ரசிகர்கள் நேரடி நிகழ்ச்சிகளை காண தனியே சென்றனர். மும்பையைச் சேர்ந்த கஞ்ஜன் எனும் ரசிகர் 157 நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்தார். நேரடி நிகழ்ச்சிகளில் பிரிமியம் சேவைகளை நாடிய ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.

BookMyShow

Image source: Shutterstock

அறிக்கையில் இடம்பெற்றுள்ள மற்ற முக்கிய அம்சங்கள்:

  • கல்கி, தேவரா, ஹனுமான், கோட், அமரன் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களால் மீண்டும் மீண்டும் பார்க்கப்பட்டன.

  •  போபால் நகரைச் சேர்ந்த கவுரவ் என்பவர், ஸ்தீரி 2 திரைப்படத்தை 29 முறை பார்த்தார்.


  • 1,07,023 மணி நேரங்கள் ஸ்டிரீமிங்கில் செலவிடப்பட்டன.

  • கொரியன், பிரெஞ்சு, ஸ்பானிஷ், நார்வேஜியன் உள்ளிட்ட மொழிகளில் உள்ளடக்கத்தை அணுகினர். ஜப்பான், இத்தாலியின, டேனிஷ் உள்ளிட்ட மொழிகளும் அடக்கம்.

Edited by Induja Raghunathan

facebook twitter