+

Stock News: தொடர் சரிவில் இந்திய பங்குச்சந்தை; ரூபாய் மதிப்பு குறைவால் சென்செக்ஸ் 400 புள்ளிகள் சரிவு!

மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை ஆரம்ப நேர வர்த்தகத்தில், 168 புள்ளிகள் சரிந்து 79,049.92 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு 45 புள்ளிகள் சரிந்து 23,907.75 புள்ளிகளாகவும் இருந்தது.

மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை ஆரம்ப நேர வர்த்தகத்தில், 168 புள்ளிகள் சரிந்து 79,049.92 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு 45 புள்ளிகள் சரிந்து 23,907.75 புள்ளிகளாகவும் இருந்தது.

இந்திய பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வெள்ளிக்கிழமையான இன்று (20-12-2024) சரிவுடன் தொடங்கியது. தொடர்ந்து 5வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் சரிந்துள்ளன. வியாழக்கிழமை பங்குச்சந்தை முடிவை விட இன்று காலை தொடக்கத்தில் சற்று உயர்ந்தது சென்செக்ஸ் தொடக்க நிலவரங்களின் படி, சுமார் 168 புள்ளிகள் சரிந்தது. நிப்டி 45 புள்ளிகள் சரிந்தது. மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 10 மணி நிலவரப்படி, 427,35 புள்ளிகள் சரிந்து 78,790.70 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு 109.75 புள்ளிகள் குறைந்து 23,841.95 புள்ளிகளாகவும் உள்ளன.

stock market

காரணம்: அமெரிக்க வெளியிட்ட பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகித குறைப்பு அறிவிப்பை அடுத்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்கத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக இந்தியப் பங்குச்சந்தைகள் சரிவில் உள்ளன. எனினும், இந்த வாரத்தில் தொடர்ந்து 5 நாட்களாக இந்தியப் பங்குச் சந்தைகள் சரிவிலேயே இருக்கின்றன, பங்குவர்த்தகத்தின் வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) பங்குகள் சற்றே சரிந்தாலும் மீண்டு வருகின்றன.

நிப்டி பேங்க் குறியீடு இன்று 213.35 புள்ளிகள் சரிய நிப்டி ஐடி குறியீடு 42.20 புள்ளிகளும் பிஎஸ்இ ஸ்மால் கேப் 35.99 புள்ளிகளும் சரிவு கண்டன. வங்கி, நிதித்துறை, FMCG மற்றும் மீடியா செக்டார்களில்மற்றும் நிதிநிறுவன பங்குகள் பின்ண்டைவு காண, பார்மா, ஹெல்த் துறை சார்ந்த பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.

ஏற்றம் கண்டுவரும் பங்குகள்: டாக்டர் ரெட்டி, ஹிண்டல்கோ, டைடன், அப்பலோ ஹாஸ்பிடல், ஏசியன் பெயின்ட்ஸ்

இறக்கம் கண்ட பங்குகள்: ஆக்சிஸ் வங்கி, டெக்மஹிந்திரா, எம் & எம், அல்ட்ராசெம்கோ, இண்டஸ் இன்ட் வங்கி

இந்திய ரூபாயின் மதிப்பு : வெள்ளிக்கிழமையன்று பெரிய மாற்றமில்லாமல் தொடர்கிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இனடாலர் ஒன்றுக்கு இன்று ரூ.85. 09 ஆக உள்ளது.

facebook twitter