இளமை என்பது வெறும் வயதின் எண் அல்ல... அது புதுமைகளைப் படைக்கும்... தடைகளைகளை உடைக்கும்.. பயமறியா ஒரு மனநிலை கொண்ட வயது ஆகும். அதனால்தான், இளங்கன்று பயமறியாது என்பார்கள். அது தொழிலிலும் துணிந்து முடிவுகள் எடுக்கும் காலகட்டமாகவும் இளமைக்காலம் பார்க்கப்படுகிறது. 35 வயதிற்குள் ஒருவர் தொழிலில் எடுக்கும் துணிகரமான முடிவு பெரும்பாலும் அவர்களது எதிர்காலத்தைப் பாதிப்பதில்லை.
கிடைத்தால் வெற்றி; தோற்றால் அனுபவம், என அடுத்து அவர்களக்கு திருத்திக் கொள்ள காலமும் நிறைய இருக்கும், குடும்பப் பொறுப்புகளும் குறைவாக இருக்கும். இந்தத் தெளிவு முன்பைவிட தற்போது இளைய தலைமுறையினரிடையே அதிகமாக உள்ளது.
தொழில்முனைவோர் புரட்சி
அப்படிப்பட்ட 35 வயதிற்குட்பட்ட இளம் தொழில்முனைவோர்களின் துணிச்சலான முடிவுகளால்தான், இந்தியா ஒரு தொழில்முனைவோர் புரட்சியை சந்தித்து வருவதாக கூறுகிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். அதோடு, இந்த இளம் தொழில்முனைவோர்கள், தங்களது ஆர்வத்தை நோக்கமாகவும், ஸ்டார்ட்அப்களை யூனிகார்ன்களாகவும், கனவுகளை செழிப்பான பேரரசுகளாகவும் மாற்றி வருவதாக அவர்கள் பாராட்டுகின்றனர்.
பணம் செலுத்துதல், தளவாடங்கள் அல்லது டிஜிட்டல் பொழுதுபோக்குகளில் புரட்சியை ஏற்படுத்தியிருந்தாலும், இந்த இளம் தொழில்முனைவோர் இந்தியாவை மறுவடிவமைக்கிறார்கள், என்கிறார்கள் அவர்கள்.
அப்படி, 2024ம் ஆண்டில் சிற்பிகளாக உளி கொண்டு தங்களைத் தாங்களே தொழிலில் செதுக்கிக் கொண்ட சில வெற்றிகரமான இளம் தொழில்முனைவோர்களைப் பற்றித் தான் இங்கே சுருக்கமாகப் பார்க்கப் போகிறோம். இதில், அவர்களின் எழுச்சியூட்டும் பயணங்கள் மட்டுமின்றி, மாற்றி யோசித்து எப்படி அவர்கள் வெற்றியைச் சாத்தியப்படுத்தினார்கள் என்பதைப் படிக்கும்போது, உங்களது தொழிலில் எப்படி உங்களை மெருகேற்றிக் கொள்ளலாம் என்பதற்கு, நல்லதொரு ஊக்கம் கிடைக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
இதோ ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக, 2024ல் தொழிலில் சாதித்த 10 இளம் தொழில்முனைவோர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்...
1. கைவல்யா வோஹ்ரா (21) - Zepto-ன் இணை நிறுவனர்
நிறுவப்பட்ட ஆண்டு : 2021
தலைமையகம்: மும்பை
இந்தியாவில் இளம் தொழில்முனைவோர்களில் ஒருவராகக் கருதப்படும் கைவல்யா வோஹ்ரா, Zepto-வின் இணை நிறுவனர் ஆவார். வீட்டில் இருந்தபடியே, தேவையான மளிகை உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை ஆர்டர் செய்து, அதனை விரைவாக மக்கள் பெறும் வகையில் இவர் வடிவமைத்த Zeptoவிற்கு நாளுக்குநாள் வரவேற்பு அதிகரித்து வருகிறது. நகரங்களில் வாழும் மக்களின் அசௌகரியங்களை நீக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, 10 நிமிடங்களுக்குள் மளிகைப் பொருட்களை டெலிவரி செய்யும் அவரது ஐடியா மக்களின் வாழ்க்கை முறையை மாற்றியுள்ளது என்றே கூறலாம்.
Zepto உருவான காரணம் : ஊரடங்கு காலத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியிலும் செல்ல முடியாமல், ஆன்லைனில் ஆர்டர் செய்தால் அது தாமதமாக வரும் அசௌகரியங்களை அனுபவித்து வந்தனர். மக்களின் அந்த இடர்பாடுகளைக் களையும் வகையில், இந்தியாவின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக, வேகமாக பொருட்களை மக்களிடம் டெலிவரி செய்ய வேண்டும், என கைவல்யா வோஹ்ரா முடிவெடுத்ததால் Zepto உருவானது.
தாக்கம்: Zepto ரூ9,100 கோடி மதிப்பீட்டை எட்டியுள்ளது. அதோடு உலகளாவிய அளவில் பல நிறுவனங்களின் முதலீடுகளையும் ஈர்த்துள்ளது.
2. ஆதித் பலிச்சா (22) - Zepto-ன் இணை நிறுவனர்
நிறுவப்பட்ட ஆண்டு : 2021
தலைமையகம்: மும்பை
கைவல்யா வோஹ்ராவின் சிந்தனைகளோடு ஒத்துப் போனதால், zeptoவின் இணை நிறுவனர் ஆனவர் ஆதித் பலிச்சா (22). ‘உங்கள் பசியைவிட வேகமாக மளிகை சாமான்கள் மக்களை வந்தடையும்’ என்ற உறுதியுடன் கைவல்யா வோஹ்ராவுடன் கைகோர்த்தவர் இவர். தனது ஸ்டார்ட் அப் கனவைத் துரத்த, ஸ்டான்போர்டை விட்டு வெளியேறினார். இன்று, மெட்ரோ நகரங்களில் மில்லியன் கணக்கான திருப்திகரமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது Zepto.
உந்துசக்தி: தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால், இந்தியாவின் டெலிவரி அமைப்புகளை மறுவரையறை செய்ய விரும்பினார் ஆதித்.
வளர்ச்சி அளவீடுகள்: முக்கிய நகரங்களில் Zepto 300% ஆண்டு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
3. ஷாஷ்வத் நக்ரானி (26) - BharatPe நிறுவனர்
நிறுவப்பட்ட ஆண்டு : 2018
தலைமையகம்: டெல்லி
இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் முக்கிய இடத்தைப் பிடித்தபோது, சிறு வணிகர்கள் பணமில்லா முறைகளைப் பின்பற்றுவதில் பெரும் சிரமங்களை உணர்வதைக் கண்டார்ஷாஷ்வத் நக்ரானி. எனவே, தனது 26 வயதில், அவர் BharatPe ஐ நிறுவினார். இது யுபிஐ கட்டணங்களை தடையின்றி ஏற்றுக்கொள்ள கடை உரிமையாளர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. எனவே, இது ஒரு புரட்சிகரமான fintech செயலியாக சிறுவணிகர்களால் கொண்டாடப்படுகிறது.
BharatPe-வின் பின்னால் உள்ள சிந்தனை: "அனைவருக்கும் தொழில்நுட்பம்" என்ற சிந்தனையின் அடிப்படையில், இந்தியாவின் அமைப்புசாரா சில்லறை வணிகத் துறையை முறையான டிஜிட்டல் பொருளாதாரத்தில் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டு BharatPe-வை உருவாக்கினார் ஷாஷ்வத்.
சாதனைகள்: BharatPe தினசரி ரூ.800 கோடி பரிவர்த்தனைகளை எளிதாக்குகிறது. இது சுமார் 8 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது.
4.தில்ஷர் மல்ஹி (28) – Zupee நிறுவனர்
நிறுவப்பட்ட ஆண்டு : 2018
தலைமையகம்: டெல்லி
நிதியுடன் வேடிக்கையை இணைத்து, ஆன்லைன் திறன் அடிப்படையிலான கேமிங் தளமான Zupee மூலம் கேமிங்கை ஒரு வளர்ந்து வரும் தொழிலாக மாற்றியவர் தில்ச்கர் மல்ஹி. 28 வயதில், அவரது கவனம், "கேமிங்கிற்கு வெகுமதி அளிப்பதில்" உள்ளது. மில்லியன் கணக்கான தினசரி பயனர்களுடன் Zupee உள்ளது.
பார்வை: கேமிங்கை ஜனநாயகப்படுத்துவதோடு, பொழுதுபோக்கை பண வெகுமதிகளுடன் கலக்கும் முயற்சியே Zupee.
சந்தை ஆதிக்கம்: இந்தியாவின் 300 கோடி திறன்-கேமிங் துறையில் Zupee முன்னணி வகிக்கிறது.
5. கரண் மேத்தா (28) – Kisshtன் இணை நிறுவனர்
நிறுவப்பட்ட ஆண்டு : 2015
தலைமையகம்: மும்பை
நுகர்வோர் நிதியுதவியை எளிதாக்கும் தளமான கிஷ்ட்-ன் இணை நிறுவனர் ஆனார் 28 வயதான கரண் மேத்தா. எலக்ட்ரானிக்ஸ், ஸ்மார்ட்போன்கள் அல்லது லைஃப்ஸ்டைல் பொருட்கள் என எதுவாக இருந்தாலும், இஎம்ஐ மூலம் அதனை சாத்தியமாக்கித் தருகிறது Kissht. குறைந்த கிரெடிட் ஹிஸ்டரி உள்ளவர்களுக்கும் இந்த வசதியை Kissht செய்து தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Kissht பின்னால் உள்ள சிந்தனை: தங்கள் கனவுகளை மலிவு விலையில் பூர்த்தி செய்து கொள்ள விரும்புவர்களுக்கான, "அனைவருக்கும் நிதிச் சேர்க்கை" என்பதே Kissht-இன் அடிப்படை சிந்தனை.
வளர்ச்சி: 5 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுடன், 2,000க்கும் மேற்பட்ட நகரங்களில் Kissht செயல்படுகிறது.
6.சித்தாந்த் சௌரப் (29) – Zupee இணை நிறுவனர்
நிறுவப்பட்ட ஆண்டு : 2018
தலைமையகம்: டெல்லி
Zupee இன் இணை நிறுவனரான சித்தாந்த் சௌரப், நிச்சயப் பரிசுகளுடன் கூடிய இந்தியாவின் முதல் பயனர் -நட்பு கேமிங் பயன்பாட்டை செயல்பாட்டில் கொண்டு வருவது பற்றிக் கற்பனை செய்தார். 29 வயதில் தயாரிப்பு மேம்பாட்டில் அவர் கொண்டிருக்கும் நிபுணத்துவம், Zupee ஐ இந்தியாவின் கேமிங் இடத்தில் இணையற்ற தளமாக மாற்றியுள்ளது.
பார்வை: கேமிங்கை ஜனநாயகப்படுத்துவதோடு, பொழுதுபோக்கை பண வெகுமதிகளுடன் கலக்கும் முயற்சியே Zupee.
சந்தை ஆதிக்கம்: இந்தியாவின் 300 கோடி திறன்-கேமிங் துறையில் Zupee முன்னணி வகிக்கிறது.
கவனம்: டிஜிட்டல் ஈடுபாட்டின் எதிர்காலமாக கேமிஃபிகேஷனை கொண்டு வருவது. .
பயனர் தளம்: 70 மில்லியனுக்கும் அதிகமானவர்கள், Zupeeன் பல்வேறு சலுகைகளை அனுபவித்து வருகின்றனர்.
7.ரித்தேஷ் அகர்வால் (30) – OYO நிறுவனர்
நிறுவப்பட்ட ஆண்டு : 2012
தலைமையகம்: குருகிராம்
30 வயதே ஆகும் ரித்தேஷ் அகர்வால் தலைப்புச் செய்திகளுக்கு ஒன்றும் புதியவர் அல்ல. OYO இன் நிறுவனரான அவர், பட்ஜெட் தங்குமிடங்களை ஒழுங்கமைக்கப்பட்ட துறையாக மாற்றினார். இதன்மூலம் உலகெங்கிலும் உள்ள பயணிகளுக்கு மலிவு விலையில் தங்குவதற்கான வாய்ப்பை வழங்கி வருகிறார்.
சிந்தனை செயல்முறை: இந்தியாவில் நம்பகமான மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஹோட்டல்களின் பற்றாக்குறையை சரிசெய்ய ரித்தேஷ் விரும்பினார்.
தாக்கம்: OYO 80க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படுகிறது. 100 மில்லியனுக்கும் அதிகமான விருந்தினர்களுக்கு சேவை செய்துள்ளது.
8.ராஜன் பஜாஜ் (31) – Slice நிறுவனர்
நிறுவப்பட்ட ஆண்டு : 2016
தலைமையகம்: கவுகாத்தி
கிரெடிட் இல்லாத இளைஞர் சந்தையில், ராஜன் பஜாஜ் ஸ்லைஸை உருவாக்கினார், இது மில்லினியல்களுக்கு எளிமைப்படுத்தப்பட்ட கிரெடிட் கார்டுகளை வழங்குகிறது. 31 வயதில், பஜாஜ், இளம் தொழில் வல்லுநர்களுக்கு கடன்களை பொறுப்புடன் அணுகுவதற்கு வாய்ப்பை அளித்துள்ளார்.
யுஎஸ்பி: வெளிப்படைத்தன்மையை விரும்பும் தலைமுறைக்கான "சிக்கல்கள் இல்லாத கடன்".
மைல்ஸ்டோன்: ஸ்லைஸ் 7 மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.5,000 கோடியை சந்தையில் செயல்படுத்தி வருகிறது.
9.அங்குஷ் சச்தேவா (31) – ShareChat இணை நிறுவனர்
நிறுவப்பட்ட ஆண்டு : 2015
தலைமையகம்: பெங்களூரு
அங்குஷ் சச்தேவா தனது 31 வயதில், சமூக ஊடக தளமான ஷேர்சாட்டை இணைந்து நிறுவினார். உள்ளூர் பார்வையாளர்களுக்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்று ShareChat என்பது உள்ளூர் டிஜிட்டல் ஈடுபாட்டிற்கான இந்தியாவின் பதிலாக மாறியுள்ளது.
தொலைநோக்கு பார்வை: இந்தியாவில் ஆங்கிலம் பேசாத இணைய பயனர்களுக்கான தடைகளை உடைத்தல்.
சாதனை: 15க்கும் மேற்பட்ட மொழிகளில், மாதந்தோறும் 180 மில்லியன் பயனர்களுக்கு சேவை செய்கிறது ShareChat .
10.நீடிஷ் சர்தா (31) – Smartwork நிறுவனர்
நிறுவப்பட்ட ஆண்டு : 2016
தலைமையகம்: குருகிராம்
உற்பத்தித் திறனை ஒத்துழைப்போடு சேர்ந்து வளர்க்கும் வகையிலான எதிர்காலத்தை தனது 31 வயதில், கற்பனை செய்தார் நீடிஷ் சர்தா. அவர் ஆரம்பித்த Smartwork, இந்தியாவின் முன்னணி இணை-பணிபுரியும் இடமாக, முன்னணி ஸ்டார்ட் அப்களுக்கு சேவை வழங்கும் ஸ்டார்ட் அப்பாக உள்ளது.
Smartwork உருவான காரணம்: புத்திசாலித்தனமான, அதேசமயம் நெகிழ்வான பணியிடங்கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் என்ற எதிர்காலத் திட்டம்.
வாடிக்கையாளர்கள்: ஃபார்ச்சூன் 500 நிறுவனங்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களை உள்ளடக்கியது.
வயது ஒரு தடையல்ல...
மேற்கூறிய இந்த பத்து இளம் தொழில்முனைவோர், தங்களது வெற்றி மூலம் வெற்றிக்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துள்ளனர். இவர்களது இந்த ஸ்டார்ட் அப்கள், நிஜ உலகப் பிரச்சினைகளுக்கு தீர்வாக மட்டுமல்ல. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகவும், வளர்ச்சியை ஊக்குவிப்பதாகவும் உள்ளன.
நீங்கள் ஒரு ஆர்வமுள்ள தொழில்முனைவோராக இருந்தால், இந்த இளம் வெற்றியாளர்களின் கதைகள் உங்களை மேலும் ஊக்குவிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, தொழில்முனைவோர் உலகில், "இதயத்தில் இளமையாக" இருப்பதும் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.